சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 30–9–19

30-09-2019 04:37 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

சந்­தைக்கு முன்­ன­தா­கவே சென்ற வெள்­ளி­யன்றே வந்த தீபா­வளி, திங்­கள் வரை தொடர்ந்­தது குறிப்­பி­ட­தக்­கது. பல வட மாநி­லங்­க­ளில் தீபா­வளி இரண்டு நாட்­கள் வரை கொண்­டா­டப்­ப­டு­கி­றது. அது போல பங்­குச் சந்­தை­யி­லும் வெள்ளி மற்­றும் திங்­க­ளன்­றும் தீபா­வளி தொடர்ந்­தது. ஏன்? செவ்­வா­யன்­றும் சிறிது தொடர்ந்­தது.

அர­சாங்­கத்­தி­டம் இருந்து வர­வேண்­டிய ஜி எஸ் டி பாக்­கி­யில், 90 சத­வீத பாக்கி கொடுக்­கப்­பட்டு விட்­டது.  சிறிய கம்­பெ­னி­க­ளுக்கு பப்­ளிக் செக்­டார் நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து (சரக்­கு­கள் விற்ற வகை­யில்) வர­வேண்­டி­யி­ருந்த பணப்­பட்­டு­வாடு  நடந்து வரு­கி­றது.  இது­போல சில குறிப்­பி­டத்­தக்க செய்­தி­க­ளும் இந்த வாரம் வந்­தது சந்­தை­களை மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருந்­தது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 167    புள்­ளி­கள் குறைந்து    38822        புள்­ளி­க­ளு­ட­னும், தேசிய பங்­குச் சந்தை  58    புள்­ளி­கள் குறைந்து       11512    புள்­ளி­க­ளு­ட­னும் முடி­வ­டைந்­தன.  மும்பை பங்­குச்­சந்­தை­யில் இது கடந்த வாரத்தை விட 808 புள்­ளி­கள் கூடு­த­லா­கும்.

சந்தை இவ்­வ­ளவு கூடி­ய­போது

மிட்­கேப்-­கள் என்ன செய்­தது?

சந்தை சுமார் 2 சத­வீ­தம் கூடி­யி­ருக்­கி­றது சென்ற வாரம். ஆனால் மிட்­கேப் பங்­கு­கள் 0.5 சத­வீ­தம் தான் கூடி­யி­ருக்­கி­றது. ஸ்மால் கேப் பங்­கு­கள் ஸ்மால் ஒரு சத­வீ­தம் வரை கூடி­யி­ருக்­கி­றது.  அதே­ச­ம­யம் இந்த வாரம் லார்ஜ் கேப் பங்­கு­கள் அதா­வது பெரிய கம்­பெ­னி­க­ளின் பங்­கு­கள் சுமார் 2 சத­வீ­தம் வரை கூடி­யி­ருக்­கி­றன.  இதி­லி­ருந்து என்ன தெரி­கி­றது சந்­தை­க­ளில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு இன்­னும் மிட்­கேப் மற்­றும் ஸ்மால் கேப் பங்­கு­க­ளின் மீது நம்­பிக்கை பெரி­தாக வர­வில்லை.

சந்­தை­கள் கூடு­வ­தற்கு யார்

 வாங்­கு­கி­றார்­கள்?

 இருப்­ப­தற்கு கார­ணம் வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் பங்­கு­களை வாங்­கி­யது அல்ல.  சந்­தை­யில் இன்­ன­மும் அவர்­க­ளின் பங்கு பெரி­தாக கூட­வில்லை.  உள்­நாட்­டில்  இருக்­கும் மியூச்­சு­வல் பண்­டு­கள் அதி­க­மாக வாங்­கு­கின்­றன இது­தான் சந்­தை­யின் ஏற்­றத்­திற்கு ஒரு முக்­கி­ய­மான கார­ணம்.

புதிய வெளி­யீடு

 நம் எல்­லோ­ருக்­கும் மிக­வும் பிர­ப­ல­மான கம்­பெனி ஐஆர்­சி­டிசி. அடுத்த வாரம் தனது புதிய வெளி­யீட்டை கொண்டு வரு­கி­றது.  இந்த கம்­பெ­னி­யின் முக்­கிய வேலை ரயில்வே டிக்­கெட் விற்­பது.  முன்பு அதி­கம் இருந்­தா­லும் தற்­போது கேட்­ட­ரிங், பாட்­டில்­க­ளில் அடைக்­கப்­பட்ட தண்­ணீர், விமான டிக்­கெட், ஹோட்­டல் புக்­கிங்  ஆகி­ய­வை­க­ளும் அதிக கவ­னம் செலுத்­து­கி­றது.

 இந்த வெளி­யீடு செப்­டம்­பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்­டோ­பர் 3ஆம் தேதி முடி­கி­றது. இந்த வெளி­யீட்­டின்  மொத்த மதிப்பு 645 கோடி ஆகும். பத்து ரூபாய் மதிப்­புள்ள பங்கு 315 ரூபா­யி­லி­ருந்து 320 ரூபாய் வரை விலை வைக்­கப்­பட்­டுள்­ளது. சிறிய முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு 10 ரூபாய் தள்­ளு­படி அளிக்­கப்­ப­டு­கி­றது. நீங்­கள் குறைந்­த­பட்­சம் அப்ளை செய்ய வேண்­டிய பங்­கு­கள் 40 ஆகும்.

 போடத் தகுந்த வெளி­யீடு. சிறிய முத­லீட்­டில் அனை­வ­ரும் அப்ளை செய்­ய­லாம். அதா­வது குறைந்த லாட் மட்­டும் அப்ளை செய்­ய­லாம். உங்­க­ளுக்கு அதிர்ஷ்­டம் இருந்­தால் கிடைப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் இருக்­கி­றது. அப்­படி கிடைக்­கும் பட்­சத்­தில் சந்­தை­யில் அந்த பங்­கு­கள் பட்­டி­ய­லி­டப்­ப­டும் போது நல்ல பிரீ­மி­யத்­தில் போகும் வாய்ப்­பு­கள் இருக்­கி­றது.

என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

வினாதி ஆர்­கா­னிக்ஸ், ஹெ.டி.எப்.சி., பாங்க், இந்­தஸ் இந்த் பாங்க் ஆகி­யவை உங்­கள் போர்ட்­போ­லி­யோ­வில் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் இருக்­க­லாம்.

சவூதி அரே­பியா ஆரம்கோ

சவுதி அரே­பி­யா­வின் ஆராம்கோ  கம்­பெ­னி­யில் ஏற்­பட்ட தீ விபத்­தால் கச்சா எண்­ணெயை உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டது எல்­லோ­ரும் அறிந்­ததே.  அந்த பாதிப்­பி­னால் கச்சா எண்­ணெய் விலை தாறு­மா­றாக கூடி­யது.  இந்­தியா பெரும்­பா­லும் சவுதி அரே­பி­யா­வில் இருந்து தான் கச்சா எண்­ணெய் வாங்­கு­வ­தால், பாதிப்பு இந்­தி­யா­விற்கு அதி­க­மாக கடந்த சில வாரங்­க­ளாக இருந்­தது.   இப்­போது நிலைமை ஓர­ளவு சரி­யாகி வரு­கி­றது.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

 அடுத்த வாரம் சந்­தை­கள் நம்­பி­யி­ருப்­பது ரிசர்வ் வங்­கி­யின் நிதி பாலி­சியை.  ஒரு சாரார் 25 புள்­ளி­கள் சத­வீ­தம் வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­ப­டும் என்­றா­லும், நம்­மு­டைய கணிப்பு வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­ப­டாது என்­பது தான். கார­ணம் நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­கள் பல நலம் பயக்­கும் அறி­விப்­பு­களை வெளி­யிட்டு இருக்­கி­றார்­கள்.  அதற்­குள் இன்­னொரு அறி­விப்பா என்­பது தான்.   அடுத்த வாரம் மேலும் கீழு­மாக இருந்­தா­லும் முடி­வில் மொத்­த­மாக மேலே இருப்­ப­தற்கு நல்ல வாய்ப்­பு­கள் இருக்­கி­றது.


உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com

Trending Now: