ஸ்டார்ட் அப்: தேசிய சிறு­தொ­ழில் நிறு­வ­னம்

30-09-2019 04:35 PM

 தேசிய சிறு­தொ­ழில் நிறு­வ­னம் (The National Small Industries Corporation Ltd.,) என்­பது அர­சாங்க நிறு­வ­னம். இந்­தி­யா­வின் சிறு­தொ­ழில் வளர்ச்­சி­யில் மிக­வும் பெரும் பங்­காற்றி வரு­கி­றது.

டிஜிட்­டல் தொழில் நுட்­பங்­கள் சிறு தொழில்­க­ளுக்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது என்ற வகை­யில்  சிறு தொழில்­க­ளுக்கு உதவி வரு­கி­றது.  

சிறு தொழில்­க­ளுக்கு ஒரே இடத்­தில் எல்லா சேவை­க­ளும் கிடைக்­கும் வகை­யில் ஒரு இணை­ய­த­ளத்­தின் மூலம் ஏற்­பாடு செய்­துள்­ளது.  இந்த இணை­ய­த­ளத்­தின் பெயர் www.msmemart.com.

 இந்த இணை­ய­த­ளத்­தில் அர­சாங்­கத்­திற்கு சரக்­கு­களை விற்­ப­தற்­கு­இந்த இணை­யத்­தில் பதிவு செய்து கொள்­ளும் வகை­யில் உங்­க­ளுக்கு அந்த வாய்ப்­பு­கள் நிறைய கிடைக்­கி­றது.

 உள்­நாடு,  வெளி­நாடு அர­சாங்க மற்­றும் தனி­யார் நிறு­வன டெண்­டர்­கள் பதி விடப்­ப­டு­கின்­றன. இதை தொடர்ந்து பார்த்து வரு­வ­தால்  உங்­கள் நிறு­வ­னம் பல மடங்கு வளர்ச்சி அடைய நல்ல வாய்ப்­பு­கள் உள்­ளது.   உங்­கள் நிறு­வ­னம் வெகு வேக­மாக வளர்ச்சி அடைய உங்­க­ளுக்கு 24 மணி நேரம் உழைக்­கும் ஒரு ஆள் தேவை அது­தான் உங்­க­ளு­டைய இணை­ய­த­ளம்.  அந்த வகை­யில் உங்­கள் நிறு­வன பொருட்­க­ளை­யும் இந்த இணை­யத்­தில் காட்­சிக்கு வைக்­க­லாம்.

 எந்த ஒரு சிறு­தொ­ழில் நிறு­வ­னத்­திற்­கும் முன்­னேற்­றத்­துக்கு வழி­வ­குப்­பது அவர்­க­ளுக்கு கிடைக்­கும் வர்த்­தக வாய்ப்­பு­கள் தான்.  அந்த வகை­யில் இந்­தி­யா­வில் வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த வர்த்த வாய்ப்­பு­களை ஒரு­சேர ஒரே இடத்­தில் பார்க்க வசதி இருக்­கி­றது.

வாங்­கு­ப­வர்­க­ள­யும், விற்­ப­வர்­க­ளை­யும்  இணைக்­கும் இணை­ய­த­ள­மா­க­வும்  இது இருக்­கி­றது. பல நல்ல கம்­பெ­னி­க­ளுக்கு உங்­கள் நிறு­வ­னம் பிரான்­சைஸி அல்­லது டிஸ்ட்­ரி­பி­யூ­ஷன்­ஷிப் எடுக்­கும் வாய்ப்­பு­கள் இருக்­கி­றது.  உங்­கள் நிறு­வ­னத்­துக்­கான ஒரு தனி­யான இணை­ய­தள பக்­கத்தை நீங்­கள் உரு­வாக்­கிக் கொள்­ளும் வச­தி­க­ளும் இருக்­கி­றது.

இந்­தி­யா­வில் மற்­றும் உலக அள­வில் நடக்­கும் வர்த்­தக கண்­காட்­சி­யில் பற்­றிய தக­வல்­களை உட­னுக்­கு­டன் தரு­கி­றது.

இந்த இணை­ய­த­ளத்­தில் ஒரு லட்­சத்­திற்­கும் அதி­க­மா­ன­வர்­கள் பதிவு செய்­துள்­ளார்­கள். இதில் கோல்டு மெம்­பர் எந்த ஒரு வச­தி­யும் இருக்­கி­றது. ஆனால் அதற்கு வரு­டாந்­திர கட்­ட­ணம் ரூபாய் 6000 செலுத்­தப்­பட வேண்­டும். அப்­படி செலுத்­தும் போது அதற்­கான  சில கூடு­தல் வச­தி­க­ளும் தரப்­ப­டு­கி­றது.

எஸ்.சி. / எஸ்.டி., தொழில் முனை­வோர்­க­ளுக்கு இல­வ­ச­மாக பல வச­தி­கள் கிடைக்­கி­றது.

குறு­கி­ய­கால கடன் வச­தி­க­ளும் உங்­கள் சிறு தொழில் நிறு­வ­னத்­திற்­கு­இ­வர்­க­ளால் தரப்­ப­டு­கி­றது. நீண்ட கால கடன் வசதி என்­றால்­அதை வங்­கி­கள் மூலம் பெறு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்து தரு­கி­றார்­கள்.

இணை­ய­தள முக­வரி www.msmemart.com, ஈமெ­யில் முக­வரி corporate@msmemart.com.

இவ­ரு­டைய இணை­ய­த­ளத்­திற்கு செல்­லுங்­கள். வெற்றி பாதையை நோக்கி உங்­கள் பய­ணத்தை தொட­ருங்­கள்.Trending Now: