மகாராஷ்டிரா: பா.ஜ,, ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமா?

27-09-2019 08:17 PM

மகா­ராஷ்­டிரா மாநில சட்­ட­சபை தேர்­தல் வாக்­குப்­ப­திவு அக்­டோ­பர் 21ம் தேதி நடை­பெற உள்­ளது. தேர்­தல் முடி­வு­கள் அக்­டோ­பர் 24ம் தேதி அறி­விக்­கப்­ப­டும். 288 உறுப்­பி­னர்­களை கொண்ட சட்­ட­ச­பை­யின் பத­விக்­கா­லம் வரும் நவம்­பர் 9ம் தேதி முடி­வ­டை­கி­றது. தற்­போது மகா­ராஷ்­டி­ரா­வில் பா.ஜ., சிவ­சேனை கூட்­டணி ஆட்சி நடை­பெ­று­கி­றது. தற்­போ­தைய சட்­ட­ச­பை­யில் பா.ஜ.,வுக்கு 122 உறுப்­பி­னர்­க­ளும் (சென்ற தேர்­த­லில் போட்­டி­யிட்ட தொகு­தி­கள் 260), சிவ­சே­னா­வுக்கு 63 உறுப்­பி­னர்­க­ளும் உள்­ள­னர். (போட்­டி­யிட்ட தொகு­தி­கள் 282). சென்ற சட்­ட­சபை தேர்­த­லில் (2014) இரண்டு கட்­சி­க­ளும் தனித்­த­னி­யாக போட்­டி­யிட்­டன. தேர்­த­லுக்கு பிறகு கூட்­டணி சேர்ந்து ஆட்சி அமைத்­தன. இந்த தேர்­த­லில் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­கின்­றன.

பார­திய ஜனதா தற்­போது சட்­ட­ச­பை­யில் உள்ள 122 இடங்­களை விட அதிக இடங்­களை கைப்­பற்ற வேண்­டும் என்று நினைக்­கி­றது. இதற்கு ஏற்­றார்­போல் கூடு­தல் தொகு­தி­க­ளில் போட்­டி­யிட நினைக்­கி­றது. இதற்கு ஏற்­றார்­போல் 156 முதல் 160 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட திட்­ட­மிட்­டுள்­ளது. மீதம் உள்ள 122 தொகு­தி­களை சிவ­சே­னா­வுக்­கும், மற்ற ஆறு சிறிய கட்­சி­க­ளுக்­கும் பகிர்ந்­த­ளிக்க நினைக்­கி­றது.  பா.ஜ,, போட்­டி­யி­டும் தொகு­தி­க­ளுக்கு சம­மாக தங்­க­ளுக்­கும் தொகு­தி­களை ஒதுக்க வேண்­டும் என்று சிவ­சேனா வலி­யு­றுத்­து­கி­றது. இத­னால் இரண்டு கட்­சி­க­ளுக்­கும் தொகுதி பங்­கீடு குறித்த பேச்­சு­வார்த்தை முடி­யா­மல் உள்­ளது.

சென்ற லோக்­சபா தேர்­த­லில் பா.ஜ., அறு­திப் பெரும்­பான்மை பெற்று மத்­தி­யில் ஆட்சி அமைத்­துள்­ளது. இது லோக்­சபா தேர்­த­லுக்கு பிறகு நடை­பெ­றும் சட்­ட­சபை தேர்­தல். அத்­து­டன் பா.ஜ,, அரசு ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு சிறப்பு அந்­தஸ்து வழங்­கும் 370 சட்­டப்­பி­ரிவை நீக்­கி­யுள்­ளது. அந்த மாநி­லத்தை இரண்­டாக பிரித்து, யூனி­யன் பிர­தே­ச­மாக அறி­வித்­துள்­ளது. இந்த நட­வ­டிக்­கைக்கு பிறகு நடை­பெ­றும் தேர்­த­லால், சட்­ட­சபை தேர்­தல்­கள்  அதிக முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளன.

தற்­போது முதல்­வ­ராக உள்ள தேவேந்­திர பட்­னா­விஸ், தேர்­த­லுக்­கான தயா­ரிப்­பு­களை முன்­னரே தொடங்­கி­விட்­டார். மகா­ஜன தேஷ் யாத்­திரை என்ற பெய­ரில் மாநி­லத்­தில் 4,232 கி.மீட்­டர் யாத்­திரை சென்று மக்­களை சந்­தித்து ஆத­ரவு திரட்­டி­யுள்­ளார். இந்த யாத்­தி­ரை­யின் மூலம் 140 தொகுதி மக்­களை சந்­தித்து ஆத­ரவு திரட்­டி­யுள்­ளார். பிர­த­மர் நரேந்­திர மோடி, அமித்ஷா ஆகி­யோ­ரு­டைய நம்­பிக்­கையை பெற்­ற­வர் தேவேந்­திர பட்­னா­விஸ். மகா­ஜன தேஷ் யாத்­தி­ரை­யின் போது பங்­கேற்ற அமித் ஷா, இந்த தேர்­த­லுக்கு பிறகு, முதல்­வ­ராக பட்­னா­விஸ் நீடிப்­பார் என்று கூறி­யுள்­ளார். இந்த யாத்­தி­ரை­யின் இறுதி நாளில் நாசிக் நக­ரில் பிர­த­மர் நரேந்­திர மோடி­யும் பங்­கேற்­றார்.

தற்­போ­தைய சட்­ட­ச­பை­யில் காங்­கி­ரஸ் கட்­சிக்கு 42 உறுப்­பி­னர்­க­ளும், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சிக்கு 41 உறுப்­பி­னர்­க­ளும் உள்­ள­னர். இந்த இரண்டு கட்­சி­க­ளும் சென்ற சட்­ட­சபை தேர்­த­லில் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன. வரும் தேர்­த­லி­லும் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­கின்­றன. காங்­கி­ரஸ் 125, தேசி­ய­வாத காங்­கி­ரஸ் 125 தொகு­தி­க­ளில் போட்­டி­யி­டு­கின்­றன. மீத­முள்ள 38 தொகு­தி­களை கூட்­ட­ணி­யில் சேரும் மற்ற கட்­சி­க­ளுக்கு ஒதுக்க உள்­ளன.

சென்ற லோக்­சபா தேர்­த­லுக்கு பிறகு, காங்­கி­ரஸ் பல பின்­ன­டை­வு­களை சந்­தித்து வரு­கி­றது. கட்சி தலை­வ­ராக இருந்த ராகுல் காந்தி ராஜி­னமா செய்­தார். இத­னால் மகா­ராஷ்­டிர மாநில காங்­கி­ரஸ் கல­க­லத்து போயுள்­ளது. பல முக்­கிய தலை­வர்­கள் கட்சி மாறி­யுள்­ள­னர். காங்­கி­ரஸ், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த 20 தலை­வர்­கள், பா.ஜ.,விலும், சிவ­சே­னா­வி­லும் ஐக்­கி­ய­மா­கி­யுள்­ள­னர். இது பா.ஜ.,வுக்கு சாத­க­மாக உள்­ளது. அத்­து­டன் சிவ­சே­னா­வுக்கு பா.ஜ.,வுடன் கருத்து வேறு­பாடு இருந்­தா­லும், தேவேந்­திர பட்­னா­விஸ் சிவ­சே­னா­வை­யும், அதன் தலை­வர் உத்­தவ் தாக்­க­ரே­யை­யும் அர­வ­னைத்து செல்­கின்­றார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் காங்­கி­ரஸ் கட்சி மராத்­வாடா,விதர்பா பிராந்­தி­யத்­தில் பல­மாக உள்­ளது. மும்பை பகு­தி­யி­லும் பல­மாக இருந்­தது. தற்­போது மும்பை பகு­தி­யில் காங்­கி­ரஸ் செல்­வாக்கை இழந்து வரு­கி­றது. தேசி­ய­வாத காங்­கி­ரஸ் மேற்கு மகா­ராஷ்­டி­ரா­வில் செல்­வாக்­காக உள்­ளது. இந்த செல்­வாக்கை வரும் தேர்­த­லி­லும் தக்­க­வைத்­துக் கொள்ள போராடி வரு­கி­றது. கடந்த ஐம்­பது வருட அர­சி­ய­லில், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத் பவா­ருக்கு, இந்த தேர்­தல் சவா­லா­ன­தாக மாறி­யுள்­ளது.

கொங்­கன் பிராந்­தி­யத்­தில் சிவ­சேனா செல்­வாக்க உள்­ளது. கடந்த சில மாதங்­க­ளாக பா.ஜ., செல்­வாக்கு இல்­லாத பிராந்­தி­யங்­க­ளில் மற்ற கட்­சி­க­ளைச் சேர்ந்த செல்­வாக்கு மிக்க தலை­வர்­களை கட்­சி­யில் சேர்த்­துக் கொண்டு வரு­கி­றது. குறிப்­பாக தேசி­ய­வாத காங்­கி­ரஸ், காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களை சேர்த்­துக் கொண்­டுள்­ளது. இதன் மூலம் செல்­வாக்கு இல்­லாத பகு­தி­க­ளில் பா.ஜ.,கட்­சியை விரி­வு­ப­டுத்­து­கி­றது. இந்த நட­வ­டிக்கை பா.ஜ., வெற்றி பெறும் கட்சி என்ற தோற்­றத்தை உரு­வாக்­கு­வ­து­டன், பா.ஜ,வுக்கு சம­மாக தொகு­தி­களை ஒதுக்க வேண்­டும் என்று வற்­பு­றுத்­தும் சிவ­சே­னாவை எச்­ச­ரிக்­கும் வித­மா­க­வும் அமைந்­துள்­ளது.

காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த சட்­ட­சபை எதிர்­கட்சி தலை­வ­ராக இருந்த ராதா­கி­ருஷ்ணா வகில் பாடீல், முன்­னாள் அமைச்­சர் ஹர்ஸ்­வர்­தன் பாடீல், சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் காளி­தாஸ் கொலம்­ப­கர், ஜெய­கு­மார் கோரே ஆகி­யோர் பா.ஜ.,வில் இணைந்­துள்­ள­னர். சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் நிர்­மலா காவிட், பாயு­சா­கிப் கம்­பலே, அப்­துல் சத்­தார் ஆகி­யோர் சிவ­சே­னா­வில் இணைந்­துள்­ள­னர். மகா­ராஷ்­டி­ரா­வில் வாழும் வட இந்­திய மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்கு மிகுந்த கிரு­பா­சங்­கர் சிங் காங்­கி­ரஸ் கட்­சியை விட்டு வில­கி­யுள்­ளார். இவர் மும்பை காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ராக இருந்­த­வர். இவர் பா.ஜ.,வில் சேர வாய்ப்பு உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதே போல் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­ச­ரும், நவி மும்பை பகு­தி­யில் செல்­வாக்கு பெற்­ற­வ­ரு­மான கணேஷ் நாயக் பா.ஜ.,வில் இணைந்­துள்­ளார். இவர் கடந்த இரு­பது வரு­டங்­க­ளாக சரத் பவா­ரின் நிழல் போல் பின்­தொ­டர்ந்­த­வர். மேற்கு மகா­ராஷ்­டி­ரா­வின் சதாரா தொகுதி லோக்­சபா உறுப்­பி­ன­ராக இருந்­த­வர் உத­யன்­ராஜே போசாலே. தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்சி லோக்­சபா உறுப்­பி­ன­ராக இருந்த இவர், எம்.பி .,பத­வியை ராஜி­னமா செய்து விட்டு பா.ஜ.,வில் இணைந்­துள்­ளார். சத்­ர­பதி சிவாஜி வழித்­தோன்­றல் என்று கரு­தப்­ப­டு­ப­வர் உத­யன்­ராஜே போசாலே. தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் எம்.பி.,க்கள் தனஞ்­செய் மகா­திக், சஞ்­சீவ் நாயக் ஆகி­யோ­ரும், சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் சந்­தீப் நாயக், வைபவ் பிச்­சாட், ரானா ஜெக­திட்­சின்க் ஆகி­யோ­ரும் பா.ஜ.,வில் இணைந்­துள்­ள­னர்.

தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் பான்­டு­ரங்க் பரோரா, சிலந்­திர்­ராஜே போசாலே, அவ்­தத் தாட்­கரி, இவ­ரது தகப்­ப­னா­ரும் முன்­னால் எம்.எல்.சியு­மான அனில் தாட்­கரி, திலிப் சோபல், மாநில கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் பாஸ்­கத் ஜாதேவ் ஆகி­யோ­ரும் சிவ­சே­னா­வில் சேர்ந்­துள்­ள­னர். இந்த கட்சி தாவலை பற்றி மூத்த காங்­கி­ரஸ் தலை­வர் கருத்து தெரி­விக்­கை­யில், உள்­ளூர் அர­சி­யல் நிலை­மை­க­ளால் கட்சி மாறி உள்­ள­னர். இத­னால் கட்­சிக்கு எவ்­வித சேதா­ர­மும் இல்லை என்று தெரி­வித்­தார். 2014ல் பா.ஜ., ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன் காங்­கி­ரஸ்–­­தே­சி­ய­வாக காங்­கி­ரஸ் கூட்­டணி அரசு மூன்று முறை தொடர்ந்து ஆட்­சி­யில் இருந்­தது.

மகா­ராஷ்­டி­ரா­வில் பிர­காஷ் அம்­பேத்­கர் தலை­மை­யி­லான வாஞ்­சிட் பகு­ஜன் அகாதி, தலித் மக்­கள் மத்­தி­யில் செல்­வாக்கு உள்ள கட்சி. முஸ்­லீம்­கள் மத்­தி­யில் செல்­வாக்கு பெற்று வரும் கட்சி அகில இந்­திய மஜ்­லிஸ்–­­இ–­­இத்­தே­ஹா­துல் முஸ்­லி­மீன். இந்த இரண்டு கட்­சி­க­ளும் தலித், முஸ்­லீம்­க­ளின் வாக்­கு­களை பிரிப்­ப­தால், காங்­கி­ரஸ்–­­தே­சி­ய­வாத காங்­கி­ரஸ் கூட்­ட­ணிக்கு இழப்பு ஏற்­ப­டு­கி­றது. இது பா.ஜ.,வுக்கு சாத­க­மாக அமை­கி­றது. இது லோக்­சபா தேர்­த­லில் வெளிப்­ப­டை­யா­கவே தெரிந்­தது. சிவ­சே­னா­வில் இருந்து பிரிந்த ராஜ் தாக்­கரே தலை­மை­யி­லான மகா­ராஷ்­டிரா நவ­நிர்­மான் சேனா, காங்­கி­ரஸ் கூட்­ட­ணிக்கு ஆத­ரவு தரு­கி­றது.

இந்த தேர்­த­லில் பா.ஜ., ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு சிறப்பு அந்­தஸ்தை நீக்­கி­யதை முக்­கிய விச­ய­மாக பிர­சா­ரம் செய்­யும். மகா­ராஷ்­டிர அரசு ரூ.1 லட்­சத்து 50 ஆயி­ரம் வரை விவ­சா­யி­க­ளின் கடன்­களை தள்­ளு­படி செய்­துள்­ளது. மொத்­தம் 52 லட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு ரூ.21 ஆயி­ரம் கோடி வரை தள்­ளு­படி செய்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வின் மண்­ணின் மைந்­தர்­க­ளான மராத்தா இனத்­தைச் சேர்ந்­த­வர்­கள் நீண்­ட­கா­ல­மாக கல்வி, வேலை வாய்ப்­பில் இட ஒதுக்­கீடு கேட்டு போராடி வந்­த­னர். இவர்­கள் மொத்த ஜனத்­தொ­கை­யில் 32 சத­வி­கி­தம் பேர். பட்­னா­விஸ் அரசு மராத்­தாக்­க­ளுக்கு கல்­வி­யில் 12ம சத­வி­கி­தம்,. வேலை­வாய்ப்­பில் 13 சத­வி­கித இட ஒதுக்­கீடு வழங்­கி­யுள்­ளது. அத்­து­டன் மாணவ, மாண­வி­க­ளுக்கு விடு­தி­கள் கட்­டு­வ­தா­க­வும், அவர்­கள் படிக்க செலுத்­தும் கட்­ட­ணத்­தில் 50 சத­வி­கி­தம் திருப்பி தரப்­ப­டும் என்று பட்­னா­விஸ் அறி­வித்­துள்­ளார்.

இத­னால் மராத்தா இனத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளின் வாக்­கு­கள் சிந்­தா­மல், சித­றா­மல் பா.ஜ., கூட்­ட­ணிக்கு விழும் என்ற எதிர்­பார்ப்பு நில­வு­கி­றது. மகா­ராஷ்­டிர மாநில பா.ஜ. தலை­வர் சந்­தி­ர­காந்த் பாடீல், நாங்­கள் 220 தொகு­தி­க­ளில் வெற்றி பெற இலக்கு நிர்­ண­யித்து இருந்­தோம். இப்­போது 250 தொகு­தி­கள் வரை வெற்றி பெறு­வோம் என்று உறு­தி­யு­டன் கூறி­யுள்­ளார். சட்­ட­சபை தேர்­த­லில் பார­திய ஜனதா ஆட்­சியை தக்­க­வைத்­துக் கொள்­ளுமா என்ற கேள்­விக்கு அடுத்த மாதம் 24ம் தேதி விடை தெரிந்­து­வி­டும்.
Trending Now: