அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியின் விமானம் ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கம்

21-09-2019 11:47 AM

புதுடெல்லி,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.  செல்லும் வழியில் ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் விமானம், அமெரிக்கா ஹூஸ்டன் நகருக்கு செல்லும் வழியில் அவசர தேவைக்காக, ஜெர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.  இந்த  நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்ட, பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் இல்லை.

விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை, ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதர் முக்தா தோமர், தூதரக அதிகாரி பிரதீபா பார்க்கர் ஆகியோர் வரவேற்றனர். ஜெர்மனியிலிரு்து  2 மணி நேரத்திற்கு பிறகு, பிரதமரின் ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.

இன்றிலிருந்து  27-ஆம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த 50,000 பேர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  இரு நாட்டு தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்ற உள்ளனர்.


பொதுவாக விமானம் பறந்து செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காகவோ அல்லது எதிர்பாராத வகையிலான தொழில் நுட்ப கோளாறுகள்  ஏற்பட்டாலோ விமானத்தை தரையிறக்கம் செய்ய வேண்டிய அவசர தேவை ஏற்படும்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஏர்இந்தியா விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.  Trending Now: