6 குழந்­தை­கள் உட்­பட 134 பேர் தலை துண்­டித்து மரண தண்­டனை நிறை­வேற்­றம்

20-09-2019 03:05 PM

சவுதி அரே­பி­யா­வில் இந்த ஆண்டு இது­வரை 6 குழந்­தை­கள் உட்­பட 134 பேர் தூக்­கி­லி­டப்­பட்­டும், தலை துண்­டிக்­கப்­பட்­டும் மரண தண்­ட­னையா நிறை­வேற்­றி­யுள்­ள­னர். கொல்­லப்­பட்­ட­வர்­கள் கொடூ­ர­மான முறை­யில் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு தலை துண்­டிக்­கப்­பட்­டும், தூக்­கில் இடப்­பட்­டும் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்ற மனித உரிமை அமைப்பு கூறி­யுள்­ளது.

சவுதி இள­வ­ர­சர் முக­மது பின் சல்­மான், மரண தண்­ட­னையை குறைப்­ப­தாக உறு­தி­ய­ளித்து இருந்­தார். ஆனால் இதற்கு மாறாக மரண தண்­டனை அதி­க­ரித்து வரு­கி­றது. ஜெனி­வா­வில் உள்ள ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யில், சவுதி அரே­பி­யா­வில் மேலும் 24 பேர் மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வ­தற்­கான ஆபத்­தில் உள்­ள­னர். இதில் மூன்று பேர் குழந்­தை­கள். இள­வ­ர­ச­ரின் அர­சி­யல் எதிர்ப்­பா­ளர்­கள், மத குரு­மார்­கள், மனித உரிமை ஆர்­வ­லர்­கள் ஆகி­யோர் அடங்­கு­வர்.

2019ல் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட ஆறு இளை­ஞர்­கள், குழந்­தை­க­ளாக இருக்­கும் போது செய்த குற்­றத்­திற்­காக தண்­டிக்­கப்­பட்­டுள்­ள­னர். சவுதி அரே­பி­யா­வில் மரண தண்­டனை பற்­றிய ஆய்­வில், சட்­ட­வி­ரோத, தன்­னிச்­சை­யான மரண தண்­ட­னை­கள், கைதி­கள், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான மனித உரிமை மீறல்­கள் பற்றி கூறப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட 51 பேரில் மூன்று பேர் பெண்­கள். இவர்­கள் போதை மருந்து தொடர்­பான குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­கள் என தெரி­ய­வந்­துள்­ளது. உல­கின் பல நாடு­க­ளில் போதை மருந்து கடத்­தல் சிறிய குற்­ற­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

சவுதி அரே­பி­யா­வில் மரண தண்­டனை நிறை­வேற்­றப் பட்­ட­வர்­க­ளில் 58 பேர் வெளி­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­கள் ஷியா இஸ்­லாத்தை பரப்­பி­ய­தாக குற்­றம் சாட்­டப்­பட்­ட­னர். இவர்­க­ளில் பாகிஸ்­தா­னைச் சேர்ந்த 21 பேர், ஏமன் நாட்­டைச் சேர்ந்த 15 பேர், சிரி­யா­வைச் சேர்ந்த 5 பேர், எகிப்­தைச் சேர்ந்த 4 பேர், ஜோர்­டா­னைச் சேர்ந்த 2 பேர், சோமா­லியா, வேறு நாட்­டைச் சேர்ந்த இரு­வர் அடங்­கு­வார்­கள். சென்ற ஏப்­ரல் 22 ம் தேதி தீவி­ர­வா­தம் தொடர்­பாக  குற்­றம் சாட்­டப்­பட்ட 37 பேருக்கு ஒரே நேரத்­தில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. இதில் 16 வய­து­டைய அப்­துல்­க­றீம்–­அல்–­ஹ­வாஜ், 17 வய­து­டைய முஸ்­த­பா–­அல்–­சி­வி­காட் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர்.

சென்ற வரு­டம் சவுதி இள­வ­ர­சர் முக­மது பின் சல்­மான், பிராந்­தி­யத்­தில் சில பகு­தி­க­ளில் மரண தண்­ட­னையை குறைத்து ஆயுள் தண்­ட­னை­யாக மாற்ற நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றோம். அந்த பகு­தி­யில் புதிய சட்­டங்­களை உரு­வாக்க அரசு, பார்­லி­மென்ட் மூலம் இரண்டு ஆண்­டு­க­ளாக முயற்சி செய்து வரு­கி­றோம். இந்த நட­வ­டிக்கை முடிய ஒரு வரு­ட­மா­கும். அதே நேரத்­தில் 100 சத­வி­கி­தம் மாற்ற முடி­யாது என கூறி­யி­ருந்­தார்.

Trending Now: