திருச்செந்துார் முருகன் கோயில் மயில்சிலை வைர கற்கள் எங்கே... *சிபிஐ விசாரணை கோரி வழக்கு

20-09-2019 01:42 AM

–நமது சிறப்பு நிருபர்–

 திருச்செந்துார் முருகன் கோவிலில் மயில் சிலையின் கீழ் இருந்த விலைமதிப்பற்ற கற்கள் திருடுபோனது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

      தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில், 2000 ஆண்டுகள்  பழமையானது. இக்கோவிலின் மூலவருக்கு எதிரில் மயில் சிலை உள்ளது. இச்சிலைக்கு அடியில் இருந்த விலைமதிப்பற்ற கற்கள் கடந்த 2017 ஆகஸ்டில் திருடப்பட்டதாக பக்தர் ஒருவர் கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை சிஐடி நகரைச் சேர்ந்த எஸ். ஸ்ரீதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

      அந்த மனுவில், கோவிலைக் கட்டிய மன்னர்கள், முக்கிய சிலைகளுக்கு அடியில் வைரம், வைடூரியம், தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை பதித்து வைத்திருந்தனர். அவற்றை கோவில் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக பக்தர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  

      இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆகஸ்ட் 8ம் தேதி கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை. எனவே, இந்த திருடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

        இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் கொண்ட பெஞ்சானது விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.Trending Now: