போலீசார் அதிரடி சோதனை 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்பறிமுதல்

20-09-2019 12:02 AM

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் இரண்டு Nர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

     கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள,; முதியோர் மற்றும் நோயாளிகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். பல இடங்களில் போட்டிபோட்டு கொண்டு வழிபாட்டு தலங்களிலும், விழா நிகழ்வுகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் பொருட்டு கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு கோர்ட் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், பல்வேறு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

      கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது எனவும் அதை மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பல பகுதிகளில் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில,; மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது மேல்புறம் பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ சர்ச்சில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 6 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்தனர்.

     இதேபோன்று, கோட்டவிளை இசக்கி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 6 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்து கோயில் நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்தனர். Trending Now: