மார்த்தாண்டம் பகுதியில் 20 காமிரா. 24 மணிநேரம் கண்காணிப்பு

20-09-2019 12:01 AM

மார்த்தாண்டம்:மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் 20 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் திறக்கப்பட்டுள்ளது.

     குமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய வர்த்தக நிறுவனமான மார்த்தாண்டம் பகுதிக்கு கல்வி, வியாபாரம், மருத்தவம் உள்பட  பல்வேறு தேவைகளுக்காக தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ரோட்டோரம் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வரும் மர்ம நபர்கள் செயின்பறிப்பு சம்பவங்களில்; ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. மேலும் அவ்வழியாக நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சில ரோமியோக்கள் அத்துமீறும் செயல்களும் நடந்து வருகிறது. இதைப்போன்று மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பைக்குகளில் செல்லும் இளசுகள்; சாகச பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களால் அவ்வழியாக செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

      மார்த்தாண்டம் பகுதி தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கியமான பகுதி என்பதால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வரும் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு விட்டு கேரளாவுக்கு சென்று பதுங்கி வாழ்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும, இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும்; மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கான முயற்சிகளை தக்கலை போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில்; மேற்கொள்ளப்பட்டது.

      அதனடிப்படையில் வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்; ஒத்துழைப்புடன் மார்த்தாண்டம் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மார்த்தாண்டம் புதிய பஸ் ஸ்டாண்ட,; மார்த்தாண்டம் ஜங்ஷன், வெட்டுவெந்நி, மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் உட்பட பல பகுதிகளில் மொத்தம் 20 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புடையவை என்று போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காமிராக்களின் கட்டுப்பாட்டு அறை மார்த்தாண்டம்; போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

       இந்த 20 காமிராக்களின் பதிவுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதன்மூலம் திருட்டு சம்பவங்கள் குறைவதுடன், இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் பிடிக்கவும் இயலும; போலீசாரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் பாராதெரிவிக்கப்பட்டுள்ளது.    Trending Now: