டி.வி.பேட்டி: அவசர புத்தி கிடையாது! - – ஷீலா ராஜ்குமார்

19-09-2019 03:44 PM

* “அழ­கிய தமிழ்­ம­கள்”  (ஜீ தமிழ்) சீரி­ய­லில் ‘பூங்­கொ­டி’­யாக படர்ந்து வரு­ப­வர், ஷீலா ராஜ்­கு­மார்.

*    ஷீலா சுசீலா என்­பது அவ­ரு­டைய முழு பெயர்.

*    அப்பா பெயர், ராஜ்­கு­மார்.

*    ஜூன் 14,1992ல் பிறந்­தார்.

*    அவ­ருக்கு பூர்­வீ­கம், திருச்சி.

*    அவ­ரது வசிப்­பி­டம், சென்­னை­யாக இருக்­கி­றது.

*    ஆனால், அவர் பள்­ளிப்­ப­டிப்பை

முடித்­ததோ, பெங்­க­ளூ­ரு­வில்! பள்­ளி­யின் பெயர், பாத்­திமா உயர்­நி­லைப்­பள்ளி.

*    அதன்­பின், திருச்­சி­யில் எம்.ஏ. (பர­த­நாட்­டி­யம்) முடித்­தார். கல்­லூ­ரி­யின் பெயர், கலை காவேரி காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்.

*    68 கிலோ எடை கொண்­ட­வர்.

*    திரு­ம­ண­மா­கி­விட்­டது. கண­வர் – சோழன்.

*    20வது வய­தி­லேயே மீடி­யா­வுக்­குள் நுழைந்­த­வர் – “நான்”  (2012) படம் மூலம்!

* அதை தொடர்ந்து “டூலெட்,” “பீட்சா,” “மனு­சங்­கடா,” “அசு­ர­வ­தம்,” “கும்­பங்கி நைட்ஸ்” (மலை­யா­ளம்) போன்ற படங்­க­ளில் நடித்­துள்­ளார்.

* அவர் ஒரு டான்ஸ் டீச்­சர், டான்ஸ் அமைப்­பா­ள­ரும் கூட!

* குல­தெய்­வம் -  சம­ய­பு­ரத்­தம்­மன்.

* இஷ்­ட­தெய்­வம் – விநா­ய­கர்.

* “நான் சொல்­வ­து­தான் கரெக்ட்!” என்று பேசு­ப­வர்­களை கண்­டால், அவ­ருக்கு எரிச்­சல் எரிச்­ச­லாக வரும்.

* தன்­னைக் காட்­டி­லும் நீண்ட கூந்­தல் உள்­ள­வர்­களை பார்த்­தால் கொஞ்­சம்­போல் பொறா­மைப்­ப­டு­வார்.

* “ஏமா­ளி­கள் இருக்­கும் வரை ஏமாற்­றுக் கா­ரர்­கள் ஏமாற்றிக்­கொண்­டு­தான் இருப்­பார்­கள்.

எனவே, யாரி­ட­மும் எதற்­கா­க­வும் ஏமா­றா­மல் விழிப்­பு­ணர்­வோடு இருக்­க­வேண்­டும்!”  என்­பது ஷீலா ராஜ்­கு­மா­ரின் அட்­வை­சாக இருக்­கி­றது.

* இனி­மை­யாக பேசக்­கூ­டிய அவ­ருக்கு இனிப்பு அயிட்­டங்­கள் அவ்­வ­ள­வாக பிடிக்­காது.

* இட்லி – சாம்­பார் காம்­பி­னே­ஷன் ரொம்ப பிடிக்­கும்.

* அவ­சர புத்தி கிடை­யாது. எந்­த­வொரு விஷ­யத்­தி­லும் நிதா­னப்­போக்கே அவ­ரி­டம் இருக்­கும். இதை தனது பிளஸ்­பா­யிண்ட்­டாக சொல்­கி­றார்.

* சரி …….. மைனஸ்­பா­யிண்ட்?  ஒன்­றும் இல்­லை­யாம்!

* பியூர் விஜிட்­டே­ரி­யன்.

* பானு­மதி, சாவித்­திரி ஆகி­யோ­ரின் நடிப்பு ரொம்ப பிடிக்­கும்.

* அவ­ரு­டைய மெயின் ஹாபி, டான்­சிங்.

– இரு­ளாண்டி

Trending Now: