முறிந்தது காதல்... பிறந்தது ‘தத்துவம்’

19-09-2019 03:42 PM

சமீ­பத்­தில், சினிமா பத்­தி­ரி­கை­க­ளின் தலைப்பு செய்­தி­யாக மாறி­னார் பாலி­வுட் நடிகை இலினா டி குருஷ். அவ­ருக்­கும் ஆன்ட்­ரியு கினி­போ­னுக்­கும் இருந்த காதல் முறிந்­தது பற்றி பர­ப­ரப்பு செய்­தி­கள் குவிந்­தன. பிரிவு பின்­னணி பற்றி ஏதேதோ கதை­கள் வளர்ந்­த­தில், சோகத்­தில் மூழ்­கி­யி­ருந்­தார் இலினா. தனது சமூக வலை­தள பக்­கங்­க­ளில் பதி­விட்­டி­ருந்த ‘ஜோடி’ படங்­களை அழித்­து­விட்டு, புதிய பதிவு எதை­யும் வெளி­யி­டா­மல் இருந்­தார்.

இலி­னா­வின் மவு­னம் இப்­போது கலைந்­தி­ருக்­கி­றது. இன்ஸ்­டா­கி­ராம் பக்­கத்­தில் தத்­துவ வரி­க­ளைப் பதி­வி­டத் தொடங்­கி­யி­ருக்­கி­றார். அதில் ஒன்று:

‘வாழ்க்­கை­யில் நீங்­கள் நண்­பர்­களை, குடும்­பத்தை, பார்ட்­னர்­களை இழக்­க­லாம். உங்­கள் வாழ்க்­கை­யில் யார் வெளி­யே­று­கி­றார்­கள் என்­பது ஒரு பிரச்னை அல்ல. அதற்­காக நீங்­கள் நம்­பிக்­கையை இழந்­து­வி­டக்கூடாது. அந்த அனு­ப­வம் மூலம் உங்­களை நீங்­கள் மேலும் நேசிக்­கும் வழி­களை கற்­றுக் கொள்ள வேண்­டும். உங்­களை சுற்றி இருப்­ப­வர்­கள் உங்­களை நேசிக்­க­வில்லை என்­பதை உண­ரும் போது, நமக்­காக யாருமே இல்லை என்ற உணர்வு எழு­வது இயல்பு. நம்மை நாமே நேசித்­துக் கொண்­டால், அந்த வருத்­தம் தோன்­று­வ­தில்லை’.Trending Now: