இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் உடலை வெள்ளை கொடியுடன் வந்து எடுத்துச் சென்ற பாகிஸ்தான் ராணுவம்

14-09-2019 12:36 PM

ஸ்ரீநகர்

இந்திய எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதலில் பலியான 2 பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை, அந்நாட்டு ராணுவம் வெள்ளைக்கொடி காட்டி எடுத்துச் சென்றுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடந்த செப்டம்பர் 10ம் தேதி, எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய பாதுகாப்புப் படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் ஹாஜிப்பூர் பகுதியில் இருந்தன. இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக் கொடி காட்டி அவர்களின் சடலங்களை கொண்டுச்சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Trending Now: