விழுப்புரம் பெலாக்குப்பம் பகுதியில் உணவு பதப்படுத்தும் பூங்கா : தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு

11-09-2019 04:40 PM

விழுப்புரம்,

  விழுப்புரம் மாவட்டம், பெலாக்குப்பம் பகுதியில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


திண்டிவனம் அடுத்துள்ள வெண்மணியாத்தூர் தொழில்பேட்டைக்கு உட்பட்ட பெலாக்குப்பம் பகுதியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூங்கா அமையவுள்ள இடத்துக்கு சென்ற தமிழக தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கால்நடைத்துறை செயலாளர் கே.கோபால் ஆகியோர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தொழிற்பூங்காவுக்கு தேவையான இடம் உள்ளதா என்பது குறித்தும், தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பான சந்தேகங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது.

அதை தொடர்ந்து, அரசு வாங்கிய இந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட தொகையில் உள்ள முரண்பாடுகளை மாவட்ட ஆட்சியர் உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டது.Trending Now: