74 வயதில் இரட்டை குழந்தைகள்! – லட்சுமி

11-09-2019 03:16 PM

57 ஆண்­டு­கள் காத்­தி­ருப்­பிற்கு பின்­னர் ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி மங்­க­யம்மா இரட்­டைக் குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­துள்­ளார். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரி­ளம் பெண் என்ற பெண்­க­ளின் பரு­வங்­க­ளில் மிக­வும் முக்­கி­ய­மா­ன­தா­க­வும் பெண்­கள் தெய்­வங்­க­ளாக போற்­றப்­ப­டு­வ­தற்­கும் கார­ணி­யாக அமை­கி­றது 'தாய்மை'.

எல்­லாப் பெண்­க­ளுக்­குள்­ளும் தாய்மை பற்­றிய பல்­வேறு கன­வு­கள் இருக்­கும். தன் கரு­வில் உரு­வாகி உதி­ரத்­தில் வெளி­யே­றும் அந்த பிஞ்­சின் கைபி­டித்து உலகை வலம் வர எந்­தப் பெண்­ணிற்­குத் தான் ஆசை இருக்­காது. அப்­ப­டி­யான சரா­சரி பெண்­ணின் ஆசை தான் மங்­க­யம்­மா­விற்­கும்.

1962ம் ஆண்டு கண­வர் ராஜா ராவின் கரம் பிடித்த மங்­க­யம்­மா­வின் குடும்ப வாழ்க்கை நடுத்­தர வர்க்­கத்­தி­ன­ருக்கே உரிய கன­வு­க­ளோடு தொடங்­கி­யது. ஆந்­திர மாநி­லம் கிழக்கு கோதா­வரி மாவட்­டத்­தின் நெல­பர்­தி­பாடு கிரா­மத்­தில் ராஜா­ரா­வும், மங்­க­யம்­மா­வும் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­த­னர். இரு­வ­ரு­டைய இல்­வாழ்க்கை சுக­மாக சென்ற போதும் அவர்­க­ளுக்கு குழந்தை பாக்­கி­யம் கிடைக்­க­வில்லை. கோயில், குளங்­கள் சுற்­றி­யும் தவம் இருந்­தும் எந்­தப் பய­னும் இல்லை. குழந்­தை­யில்­லா­ததை கார­ணம் காட்டி மங்­க­யம்­மா­வும், ராஜா­ரா­வும் சமு­தா­யத்­தால் சிறு­மை­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

குழந்தை இல்­லையே என்று கலங்­கி­ய­வர்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யூட்­டும் வித­மாக அந்­தச் செய்தி இருந்­தது. ஆந்­தி­ரா­வி­லுள்ள மகப்­பேறு மருத்­து­வ­மனை ஒன்று 55 வயது பெண் ஒரு­வ­ருக்கு செயற்கை கரு­வூட்­டல் முறை­யில் குழந்­தைப் பேறு அளித்­துள்­ளது. இத­னை­ய­றிந்த மங்­க­யம்­மா­வும், ராஜா­ரா­வும் அந்த மருத்­து­வ­ம­னையை நாடி­யுள்­ள­னர்.மங்­க­யம்­மா­விற்கு மாத­வி­டாய் காலம் முடிந்­து­விட்ட நிலை­யி­லும் அவ­ருக்கு குழந்­தைப்­பேறு கிடைப்­ப­தற்­கான விஞ்­ஞான அறி­வி­யல் உத­வியை நாடி­யுள்­ள­னர் மருத்­து­வர்­கள்.

5 மருத்­து­வர்­கள் கொண்ட குழு­வின் கண்­கா­ணிப்­பில் மங்­க­யம்­மா­வின் உடல்­நிலை பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் அவ­ருக்கு வயோ­தி­க­யம் ஆகி­விட்­டா­லும் நல்ல உடல் நிலை­யு­டன் இருப்­பதை உறுதி செய்த பின்­னர் கருத்­த­ரிப்­ப­தற்­கான வழி­மு­றை­களை செய்­யத் தொடங்­கி­யுள்­ள­னர்.

மங்­க­யம்­மா­விற்கு வேறொரு பெண்­ணி­டம் இருந்து கரு­முட்­டையை தான­மாக பெற்று அதில் கண­வர் ராஜா­ரா­வின் விந்­த­ணுவை செலுத்தி கருவை உரு­வாக்­கி­யுள்­ள­னர். அந்த கரு­முட்­டை­யா­னது கடந்த ஜன­வரி மாதத்­தில் மங்­க­யம்­மா­விற்கு பொருத்­தப்­பட்டு 9 மாதங்­கள் மருத்­து­வர்­க­ளின் முழு காண்­கா­ணிப்­பில் அவர் இருந்­துள்­ளார். இந்­நி­லை­யில் செப்­டம்­பர் 5ம் தேதி காலை 10.30 மணி­ய­ள­வில் மங்­க­யம்­மா­விற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்­டைக் குழந்­தை­கள் பிறந்­துள்­ளன.

"எனது வாழ்க்­கை­யின் மிக மகிழ்ச்­சி­யான தரு­ணம் இது. இந்த நாளுக்­கா­கத் தான் வலி மிகுந்த பல நாட்­களை நான் கடந்து வந்­தி­ருக்­கி­றேன். இந்த சமு­தா­யத்­தின் ஏள­னப் பேச்­சு­கள் என்னை சுட்டு போட்­டன. இப்­போது எனக்கு இரண்டு குழந்­தை­கள் இருக்­கின்­றன என்று மகிழ்ச்­சி­யோடு," கூறு­கி­றார் மங்­க­யம்மா.

”57 ஆண்­டு­க­ளில் பல மருத்­துவ சிகிச்­சை­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம், கடை­சி­யாக இந்த சோத­னைக் குழாய் மூலம் கருத்­த­ரிப்­பதை செய்து பார்த்­து­வி­ட­லாம் என்று நினைத்து இந்த மருத்­து­வ­மனை வந்த எங்­களை கட­வு­ளும், மருத்­து­வ­மும் கைவி­டல்லை. குழந்தை இல்­லா­த­வர் என்று என்­னைப் பல­ரும் ஒதுக்கி வைத்­த­னர். இப்­போது என் குறை­களை போக்கி கட­வுள் எனக்கு இரண்டு குழந்­தை­கள் கொடுத்­தி­ருக்­கி­றார் இவர்­களை நான் நன்­றாக கவ­னித்­துக் கொள்­வேன்," என்று ராஜா­ராவ் மகிழ்ச்­சி­யோடு கூறி இருக்­கி­றார்.

தாயும், சேயும் தற்­போது நல­மாக இருக்­கின்­ற­னர். வயோ­தி­கத்­தால் மங்­க­யம்­மா­வால் குழந்­தை­க­ளுக்கு பாலூட்ட முடி­ய­வில்லை. எனவே மருத்­து­வ­ம­னை­யில் உள்ள தாய்ப்­பால் வங்­கி­யில் இருந்து குழந்­தை­க­ளுக்கு பால் புகட்­டப்­ப­டு­கி­றது. 21 நாட்­கள் இந்­தக் குழந்­தை­கள் மருத்­துவ கண்­கா­ணிப்­பில் வைக்­கப்­ப­டு­வ­தாக மருத்­து­வர் உமா­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் அதிக வய­தில் தாயா­ன­வர் என்ற வர­லாற்­றில் இடம்­பி­டித்­துள்­ளார் மங்­க­யம்மா. 2016ம் ஆண்­டில் பஞ்­சாப் மாநி­லத்தை சேர்ந்த 72 வயது பெண்­மணி குழந்­தையை பெற்­றுள்­ளார். 30 வய­தைக் கடந்­தாலே பெண்­க­ளுக்கு பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­னை­கள் வந்து விடு­கி­றது. அந்த வய­தில் மகப்­பேறு என்­றாலே ஒர வித அச்­சம் வந்­து­வி­டும். அப்­படி இருக்­கை­யில் 74 வய­தில் நம்­பிக்­கை­யு­டன் இரண்டு குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­தி­ருக்­கி­றார் மங்­க­யம்மா.

ஒரு பக்­கம் மருத்­து­வச் சாதனை என்­றா­லும் இந்த மூத்த தம்­பதி இப்­படி விடாப்­பி­டி­யாக குழந்தை பெற்­றுக் கொள்­வ­தில் உறு­தி­யாக இருந்­த­தற்கு இந்த சமூ­க­மும் ஒரு கார­ணம். குழந்­தை­யில்லை என்­பதை ஒரு குறை­யாக பார்க்­கும் அவல நிலை எப்­போது தான் மாறுமோ...