பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை! – சுமதி

11-09-2019 03:13 PM

அதி­க­ள­வி­லான பெண் குழந்­தை­க­ளுக்கு மிக­வும் இளம் வய­தி­லேயே திரு­ம­ணம் செய்­து­வைக்­கும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தியா முத­லி­டம் வகிக்­கி­றது. பெண் குழந்­தை­களை பார­பட்­சத்­து­டன் நடக்­கும் போக்கு உள்­ளது. பல­ருக்கு முறை­யான கல்வி வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

நாம் 21-ம் நூற்­றாண்­டில் வாழ்­கி­றோம். பிர­மிக்­கத்­தக்க வளர்ச்­சியை உல­கம் சந்­தித்து வரு­கி­றது. சமூக நீதி, மரி­யாதை, பாலின சமத்­து­வம் போன்­ற­வற்­றிற்கு பல்­வேறு நாடு­க­ளின் அர­சி­ய­ல­மைப்பு உறு­தி­ய­ளித்­துள்­ள­போ­தும் உல­கம் முழு­வ­தும் பெண்­க­ளுக்­கும் பெண் குழந்­தை­க­ளுக்­கும் அவர்­க­ளுக்­கான உரிமை வழங்­கப்­ப­டு­வ­தில்லை.

இந்­தி­யா­வைப் பொருத்­த­வரை பெண் தெய்­வங்­கள் வழி­பாடு செய்­யப்­பட்­டா­லும் பெண்­க­ளுக்கு அவர்­க­ளுக்­கு­ரிய முக்­கி­யத்­து­வத்தை உண்­மை­யில் வழங்­கு­கி­றோமா? பல ஆண்­டு­க­ளா­கவே பெண்­கள் அவர்­க­ளது வாழ்க்­கை­யின் ஒவ்­வொரு நிலை­யி­லும் சுரண்­டப்­ப­டு­கின்­ற­னர்.

பெண் குழந்தை பிறந்­தால் அதைக் குடும்­பங்­கள் கொண்­டா­டு­வ­தில்லை. மாறாக சாப­மா­கவே கரு­து­கின்­ற­னர். பெண் குழந்­தை­கள் சுகா­தார பரா­ம­ரிப்பு, கல்வி, வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­கள் போன்­ற­வற்­றில் பாலி­னம் சார்ந்த நிரா­க­ரிப்பை சந்­தித்து வரு­கின்­ற­னர்.

சமீ­பத்­திய கணக்­கெ­டுப்­பின்­படி பெண்­கள் (65.46 சத­வீ­தம்) மற்­றும் ஆண்­க­ளின் (82.16 சத­வீ­தம்) கல்­வி­ய­றிவு விகி­தத்­தில் மிகப்­பெ­ரிய இடை­வெளி உள்­ளது. இது கிரா­மப்­பு­றங்­க­ளில் மேலும் குறை­வாக (58.75 சத­வீ­தம்) காணப்­ப­டு­கி­றது. இந்­திய அர­சி­ய­ல­மைப்பு 21-வது பிரி­வின் திருத்­தத்­தின்­படி கல்வி அடிப்­படை உரி­மை­யாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. கல்வி உரிமை சட்­டம் 2009, 6 முதல் -14 வயது வரை­யுள்ள ஒவ்­வொரு குழந்­தைக்­கும் கல்­வியை கட்­டா­ய­மாக்­கு­கி­றது.

2011-ம் ஆண்டு கணக்­கெ­டுக்­கின்­படி இன்­ன­மும் ஆறு முதல் பதி­மூன்று வயது வரை­யுள்ள 32 மில்­லி­யன் குழந்­தை­கள் பள்­ளிக்கு சென்­ற­தில்லை. இதில் பெரும்­பா­லா­னோர் தலித், ஆதி­வாசி மற்­றும் முஸ்­லீம் சமூ­கத்­தி­னர்.

பெண் கல்­விக்­கான சட்­டம், கொள்­கை­கள், திட்­டங்­கள் போன்­றவை இருப்­பி­னும் பெண் குழந்­தை­கள் ஏன் பள்­ளிப் படிப்பை பெறு­வ­தில்லை? வறுமை, குழந்­தைத் திரு­ம­ணம், பள்­ளிப்­ப­டிப்­பில் ஆர்­வ­மின்மை, பள்ளி தொலை­வில் அமைந்­தி­ருப்­பது, பள்­ளி­யி­லும் பள்­ளிக்­குச் செல்­லும் வழி­யி­லும் பாது­காப்­பின்மை போன்ற கார­ணங்­க­ளி­னால் பெண் குழந்­தை­கள், குறிப்­பாக ஒதுக்­கப்­பட்ட சமூ­கத்­தைச் சேர்ந்த பெண் குழந்­தை­கள் பள்­ளிக்­குச் செல்­வ­தில்லை என பல்­வேறு ஆய்­வு­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றது.

சமூக மற்­றும் கலாச்­சார விதி­மு­றை­கள் பல்­வேறு கட்­டுப்­பா­டு­களை விதிக்­கி­றது. இத­னால் பெண் குழந்­தை­கள் சுதந்­தி­ரத்தை அனு­ப­விக்­க­மு­டி­யா­மல் போகி­றது. பெண் குழந்­தை­கள் வெவ்­வேறு விதங்­க­ளில் பாகு­பா­டு­க­ளை­யும் வன்­மு­றை­க­ளை­யும் சந்­திக்­கின்­ற­னர். குடும்­பத்­தி­னர் பெண் குழந்­தை­களை பார­மாக கரு­து­கின்­ற­னர். குறிப்­பாக பூப்­ப­டைந்த பிறகு பாது­காக்­கும் பொறுப்பை சுமை­யாக பார்க்­கின்­ற­னர். இத­னால் விரை­வாக திரு­ம­ணம் செய்­து­வைக்­க­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு ஆளா­கின்­ற­னர்.

சமீ­பத்­திய அறிக்­கை­யின்­படி அதி­க­ள­வி­லான பெண் குழந்­தை­க­ளுக்கு மிக­வும் இளம் வய­தி­லேயே திரு­ம­ணம் செய்­து­வைக்­கும் நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தியா முத­லி­டம் வகிக்­கி­றது. 27 சத­வீத பெண்­க­ளுக்கு அவர்­க­ளது பதி­னெட்­டா­வது பிறந்­த­நா­ளுக்கு முன்பே திரு­ம­ணம் செய்­து­வைக்­கப்­ப­டு­கி­றது. பெண் குழந்­தை­க­ளுக்கு, குறிப்­பாக கிரா­மப்­பு­றங்­க­ளைச் சேர்ந்த பெண் குழந்­தை­க­ளுக்கு கல்வி வாய்ப்­பு­கள் குறை­வாக இருப்­ப­தால் குழந்­தைத் திரு­ம­ணங்­க­ளுக்கு கட்­டா­யப்­ப­டுத்­த­ப­டும் நிலை அதி­க­ரிக்­கி­றது.

இந்­திய கிரா­மப்­பு­றங்­க­ளில் அதி­க­ள­வி­லான பெண் குழந்­தை­கள் விவ­சாய வேலை­க­ளி­லும் வீட்டு வேலை­க­ளி­லும் ஈடு­ப­டு­கின்­ற­னர். குறிப்­பாக உடன்­பி­றந்­த­வர்­களை பரா­ம­ரிக்­கும் பணி­க­ளுக்கு பொறுப்­பேற்­கின்­ற­னர். எனவே அவர்­க­ளுக்கு பள்­ளிக்­குச் செல்­வ­தற்­கான வாய்ப்பு கிடைப்­ப­தில்லை. இந்த நிலை­யை­யும் மீறி பள்­ளிக்­குச் செல்­லும் சிறு­மி­கள் பாலி­னம் மற்­றும் சாதி சார்ந்த பாகு­பா­டு­களை பள்­ளி­யில் சந்­திக்­கும் கார­ணங்­க­ளால் படிப்­பில் ஈடு­ப­ட­மு­டி­வ­தில்லை.

ஆசி­ரி­யர்­க­ளும் ஒதுக்­கப்­பட்ட சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளி­டம் பாகு­பாடு பார்க்­கின்­ற­னர். தனி­யாக ஒதுக்­கப்­பட்ட இருக்­கை­கள், சாதி சார்ந்த பாகு­பாடு, மேல் சாதி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­தல் போன்ற வெவ்­வேறு வகை­யான பாகு­பா­டு­கள் பள்­ளி­க­ளில் காணப்­ப­டு­கின்­றன. சில பள்­ளி­கள், பள்ளி வளா­கம் மற்­றும் கழி­வ­றை­களை சுத்­தப்­ப­டுத்­தும் பணி­க­ளி­லும் மாண­வி­களை ஈடு­ப­டுத்­து­கின்­றன.

ஆசி­ரி­யர் பணிக்­கான காலி­யி­டங்­கள் அதி­கம் இருப்­ப­தா­லும் ஆசி­ரி­யை­க­ளின் சத­வீ­தம் குறை­வாக இருப்­ப­தா­லும் ஒதுக்­கப்­பட்ட சிறு­மி­க­ளின் தேவை­க­ளுக்கு தீர்­வு­காண்­ப­தில் கல்வி அமைப்பு கவ­னம் செலுத்­து­வ­தில்லை. கல்வி உரிமை மன்­றம் அறிக்­கை­யின்­படி 4.1 லட்­சம் ஆசி­ரி­யர் பணி­யி­டங்­கள் காலி­யாக உள்­ளன. பீகார், உத்­தி­ரப்­பி­ர­தே­சம், ஜார்­கண்ட் ஆகிய மாநி­லங்­க­ளில் காலி­யான பணி­யி­டங்­கள் அதி­க­பட்­ச­மாக உள்­ளன.

96 சத­வீத குடி­மக்­க­ளுக்கு ஆரம்ப பள்ளி வசதி இருப்­ப­தாக அரசு தர­வு­கள் தெரி­விக்­கி­றது. ஆனால் மாண­வி­க­ளுக்கு பாது­காப்­பான போக்­கு­வ­ரத்து வச­தியை உட­ன­டி­யாக வழங்­காத பட்­சத்­தில் பள்­ளி­களை ஒருங்­கி­ணைக்­கும் அர­சின் சமீ­பத்­திய முயற்­சி­யி­னால் மாண­வி­கள் பள்­ளிப்­ப­டிப்பை இடை­நி­றுத்­தம் செய்­யும் விகி­தம் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

பெண் குழந்­தை­கள் பள்­ளிப்­ப­டிப்பை மேற்­கொள்ள ஊக்­கு­விப்­ப­தற்கு பள்­ளி­க­ளி­லும் சமூ­கத்­தி­லும் சிறு­மி­களை பாது­காக்க அவ­சர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது கட்­டா­ய­மா­கி­றது. ஒவ்­வொரு கிரா­மத்­தி­லும் மழ­லை­யர் பரா­ம­ரிப்பு அல்­லது பால்­வாடி இருப்­பதை உறு­தி­செய்­ய­வேண்­டும். இத­னால் சிறு­மி­கள் தங்­கள் உடன்­பி­றந்­த­வர்­களை பரா­ம­ரிக்­கும் பணி­யி­லி­ருந்து விடு­பட்டு பள்­ளிப்­ப­டிப்­பைத் தொட­ர­லாம். பஞ்­சா­யத்து ராஜ் அமைச்­ச­கம் இதில் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. பெண்­க­ளின் தேவை­க­ளுக்கு தீர்­வு­காண ஊராட்சி மற்­றும் பஞ்­சா­யத்து உறுப்­பி­னர்­க­ளுக்கு அமைச்­ச­கம் பயிற்சி அளிக்­க­வேண்­டும்.Trending Now: