கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 12–09–19

11-09-2019 03:11 PM

 திஸ் தேட் தீஸ் அண்ட் தோஸ்!

dதிஸ் nபுக் இஸ் மை bபுக். This book is my book.

dதிஸ் This -- இந்த bபுக் -- புத்­த­கம் ‘இஸ்’ (is) என்­பது இருக்­கி­றது என்­ப­தைக் குறிக்­கும் தொடர்பு வினை (லிங்­கிங்g வர்ப்b)மை – என்

bபுக் -- புத்­த­கம் மேலே  உள்ள வாக்­கி­யத்தை, இன்­னொரு விதத்­தி­லும் எழு­த­லாம் என்று முன்பே கூடக் குறிப்­பிட்­டி­ருக்­கி­றேன்.

அதா­வது, ‘dதிஸ் nபுக் இஸ் மை bபுக்’ என்­பதை,‘dதிஸ் புக் இஸ் மைன்’ (This book is mine) ‘இந்­தப் புத்­த­கம் என்­னு­டை­யது’ என்­றும் கூற­லாம்.

dதிஸ் This – இந்த

bபுக் book – புத்­த­கம்

இஸ் is – இருக்­கி­றது என்­ப­தைக் கூறும் தொடர்பு வினை,

மைன் mine – என்­னு­டை­யது

கேள்வி –– இந்­தப் பர்ஸ் யாரு­டை­யது? Whose purse is this?

பதில் –– என்­னு­டை­யது. மைன் Mine. (இட் இஸ் மைன், It is mine என்­பதை சுருக்­க­மாக ‘மைன்’ என்று கூறு­கி­றோம்)

ஒரு­த­லைப்­பட்­ச­மாக ஒரு பெண்­ணைக் காத­லிக்­கும் ஒரு­வன், ஒரு பெண்ணை, ‘ஷீ இஸ் மைன்’ (She is mine) என்று நினைக்­கக்­கூ­டும்.

ஆனால் ஒரு பெண் வெறும் பொரு­ளல்ல,  என்­னு­டை­யது என்று கூற. ஒரு­வரை நாம் விரும்­பி­னால் அவ­ருக்கு நாம் அன்பு செய்­ய­வேண்­டுமே தவிர, ‘நீ எனக்கு அடி­மை­யாக இரு’ என்று பல­வந்­த­ப­டுத்த முடி­யாது!

 ஆனால் ஒரு­வித இணக்க உணர்­வில், ‘ யூ ஆர் மைன்’, You are mine (நீ என்­னு­டை­ய­வள்) என்று கூற­லாம்.

dதிஸ் இஸ் மைன். This is mine. இது என்­னு­டை­யது

dதீஸ்  ஆர் மைன். These are mine. இவை என்­னு­டை­யவை.

dதேட் இஸ் மைன். That is mine. அது என்­னு­டை­யது

dதோஸ் ஆர் மைன். Those are mine. அவை என்­னு­டை­யவை.

மைன் (mine) என்ற சொல்­லுக்கு ‘சுரங்­கம்’ என்ற பொரு­ளும் உண்டு.

‘தேர் ஆர் லிக்­நைட் மைன்ஸ் இன் நெய்­வேலி’ (There are lignite mines in Neyveli). ‘நெய்­வே­லி­யிலே பழுப்பு நிலக்­கரி சுரங்­கங்­கள் இருக்­கின்­றன’ என்று பொருள்.

கோலா­ரில் தங்­கச் சரங்­கங்­கள் இருந்­தன. Kolar had gold mines.

நண்­ப­ரு­டன் ஒரு­வர் தெரு­வில் நடந்து வந்­தார்,

தன்­வீட்­டின் அருகே வந்­த­வு­டன், அதைக்­காட்டி, ‘dதிஸ் இஸ் மை ஹவுஸ்’  என்­றார். This is my house. இது என்­னு­டைய வீடு.

கொஞ்­சம் தள்ளி அவ­ரு­டைய சகோ­த­ரர் ஒரு வீடு கட்டி இருந்­தார். அதை நண்­ப­ரி­டம் காட்டி, ‘அந்த  வீடு என்­னு­டைய சகோ­த­ர­ரு­டை­யது’ என்­றார். dதேட் ஹவுஸ் இஸ் மை bபிர­தர்ஸ். That house is my brother’s.

தேட் ஹஸ்வு இஸ் மை bபிர­தர்ஸ் ஹவுஸ் (That house is my brother’s house) என்று பொருள்.

‘அந்த வீடு என் சகோ­த­ர­ரு­டை­யது…’ (That house is my brother’s)     என்­ப­தும் ‘அந்த வீடு என்­னு­டைய சகோ­த­ர­ரின் வீடு’  (That house is my brother’s house) என்­ப­தும் ஒரே விஷ­யத்­தைத் தான் குறிக்­கின்­றன.

உங்­கள் வீட்டு வரி­சை­யில் இருக்­கும் பல வீடு­க­ளைக் காட்டி ,  ‘இந்த வீடு­கள் அண்­மை­யில் கட்­டப்­பட்­டவை’ என்று கூறு­கி­றீர்­கள். ‘dதீஸ் ஹவு­ஸெஸ் வர் bபீல்ட் ரீஸென்ட்லி’. These houses were built recently.  இந்த வீடு­கள் சமீ­ப­கா­லத்­தில் கட்­டப்­பட்­டன்.

இது செயப்­பாட்டு வினை வாக்­கி­யம். அதா­வது பாஸிவ் வாய்ஸ் (passive voice) வாக்­கி­யம். இது­போன்ற வாக்­கி­யத்­தில், வாக்­கி­யத்­தின் சப்­ஜெக்ட் (இந்த வீடு­கள்) வாக்­கி­யத்­தில் குறிப்­பி­டப்­ப­டும் வினைக்­குக் கார­ண­மாக இருக்­காது.

‘இந்த வீடு­கள்’ என்­ப­து­தான் உதா­ரண வாக்­கி­யத்­தின் எழு­வாய், சப்­ஜெக்ட்….அது ஏதா­வது வினை செய்­ததா?  இல்லை. அது கட்­டப்­பட்­டது. யார் கட்­டி­ய­வர்­கள் என்ற தக­வல் கூட வாக்­கி­யத்­தில் இல்லை.

இது­போல் dதிஸ், dதேட், dதீஸ், dதோஸ் ஆகிய சொற்­க­ளில் தொடங்­கும் சில வாக்­கி­யங்­க­ளைப் பாருங்­கள்.

dதிஸ் ஸ்கூல் இஸ் ரன் வெல். This school is run well. இந்­தப் பள்­ளிக்­கூ­டும் நன்­றாக நடத்­தப்­ப­டு­கி­றது.

dதேட் bபில்­டிங் இஸ் நாட் pபிரா­பர்லி மென்­டைன்ட்d, That building is not properly maintained. அந்­தக் கட்­ட­டம் சரி­யா­கப் பரா­ம­ரிக்­கப்­ப­ட­வில்லை.

dதீஸ் கோர்­ஸெஸ் ஹேவ் bபீன் ஸ்டார்­டெட் இன் dதிஸ் காலேஜ். These courses have been started in this college. இந்­தப் படிப்­பு­கள் இந்­தக் கல்­லூ­ரி­யில் தொடங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

dதோஸ் ஷாப்ஸ் வர் குளோஸ்ட் லாஸ்ட் மன்த். Those shops were closed last month. அந்­தக் கடை­கள் கடந்த மாதம் மூடப்­பட்­டன.

தீஸ் ஷாப்ஸ் ஸெல் திங்ஸ் வெரி சீப். These shops sell things very cheap. இந்­தக் கடை­கள் பொருட்­களை மிக­வும் மலி­வாக விற்­கின்­றன.

dடோன்ட gகோ tடு  dதோஸ் ஷாப்ஸ்....யூ வில் bபீ சீடெட்d…Don’t go to those shops. You will be cheated. அந்­தக் கடை­க­ளுக்­குப் போகா­தீர்­கள். நீங்­கள் ஏமாற்­றப்­ப­டு­வீர்­கள்.

என்­னய்யா இப்­ப­டித்  தொந்­த­ரவு செய்­ய­ற…’­­­­­திஸ் இஸ் டூ மச்’ (This is too much) என்­றால் ‘இது ரொம்ப அதி­கம்’ என்று பொருள். அதா­வது, இது அள­வுக்கு மீறிப் போகி­றது என்று பொருள்.

‘ஹீ ஓன்ஸ் திஸ் லாண்ட்’. He owns this land. ‘இந்த நிலம் அவ­னுக்கு சொந்­தம்’ என்று பொருள்.

ஹீ டஸ் நாட் ஓன் தேட் லாண்ட் (He does not own that land) என்­றால் ‘அந்த நிலம் அவ­னு­டை­யது அல்ல’ என்று பொருள்.

‘தீஸ் லாண்ட்ஸ் ஆர் ஓன்ட் பை ஹிம்’ (These lands are owned by him) என்­றால் இந்த நிலங்­கள் அவ­னு­டை­யவை என்று பொருள்.

தோஸ் லாண்ட்ஸ் ஆர் ஹிஸ் பிர­தர்ஸ்  (Those lands are his brother’s) என்­றால், அந்த நிலங்­கள் அவ­னு­டைய சகோ­த­ர­ருக்கு சொந்­தம் என்று பொருள்.

இதை, தோஸ் லாண்ட்ஸ் ஆர் ஹிஸ் பிர­தர்ஸ் லாண்ட்ஸ் (Those lands are his brother’s lands) அந்த நிலங்­கள் அவ­னு­டைய சகோ­த­ர­னின் நிலங்­கள், என்­றும் எழு­லாம்.

அண்­மை­யில் சென்னை உயர்­நீதி மன்­றம் ஒரு வழக்­கில் தீர்ப்பு வழங்­கி­யது.

அதில் ‘தோஸ் ஹூ பிரீச்­சட்d gகாட் இஸ் ஃபூல்’ (Those who preached God is fool) என்ற மொழி­பெ­யர்ப்பு, தீர்ப்­பின் நக­லிலே எடுத்­துக்­காட்­டா­கக் கொடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக்  கண்­டேன்.

இது­போன்ற தவ­றான ஆங்­கில வாக்­கி­யங்­கள் உயர்ந்த இடங்­க­ளி­லும் எப்­படி உட்­கார்ந்­து­வி­டு­கின்­றன என்­பதை நினைத்து வியந்­தேன்.

dதோஸ் என்று வரு­கிற போது, (ஒரு­மை­யோடு வரும்) ‘இஸ்’ (is) வராது, ‘ஆர்’ (are) தான் வர­வேண்­டும். அப்­படி தொடர்பு வினை       (linking verb) ‘ஆர்’ (are) என்று பன்­மை­யைச் சுட்­டும்­போது அதைத் தொடர்ந்து ஃபூல் (fool) என்­ப­தும் ஃபூல்ஸ் (fools) என்று வரும்.

கட­வுள் இருக்­கி­றார் என்று கூறி அந்­தக் கருத்­தைப் பரப்­பு­ப­வர்­கள் முட்­டாள்­கள் என்­பது வாக்­கி­யத்­தின் பொருள். இந்த வாக்­கி­யத்­தின் பொருள் உண்­மை­யாக இருக்­கு­மே­யா­னால், ‘ஆதி­ப­க­வன் முதற்றே உலகு’ என்று கூறிய திரு­வள்­ளு­வ­ரும், ‘ஆல­யம் தொழு­வது சால­வும் நன்று’ என்று கூறிய அவ்­வை­யா­ரும் மேற்­கூ­றப்­பட்ட வகை­யில் வரு­வார்­கள்.

வள்­ளு­வ­ரும் அவ்­வை­யுமே அந்­தத் தலைப்­பின் கீழ் வந்­தார்­கள் என்­றால்,   மற்­ற­வர்­கள் எந்­தத் தலைப்­பின் கீழ் வரு­வார்­கள் என்று கூறத்­தே­வை­யில்லை!

If Valluvar and Avvaiyar come under that head, one need not say under what classification others would come!Trending Now: