சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்: இன்று முதல் சோதனை ஓட்டம்

11-09-2019 11:07 AM

சென்னை,        

மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சென்ன அண்ணா சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று  தொடங்கவுள்ளது. 9 ஆண்டு களுக்கு பிறகு அண்ணாசாலை இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப் பட்டது. இதனால் 2011 ஆம் ஆண்டு சென்னை அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.

அண்ணாசாலை பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, அண்ணாசாலை மற்றும் ஜி.பி. ரோடு முதல் அண்ணா சாலை ஒயிட்ஸ் ரோடு வரை போக்குவரத்து மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றப்பட உள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம், இன்று மற்றும் நாளை நடைமுறைப்படுத்த உள்ளது. இதையடுத்து, அண்ணாசாலை - ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெலிங்டன் சந்திப்பு வரை இருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

இதேபோன்று, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வாகனங்கள் வெலிங்டன் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அதேசமயம், வெலிங்டன் சந்திப்பிலிருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

ஒயிட்ஸ் சாலை இருவழிப் பாதையாக மாற்றப்படுவதையடுத்து, ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணா சாலை இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டை நோக்கியும் அனுமதிக்கப்படும்.

அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என, சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.Trending Now: