நியூஸ் 18 தமிழ்நாடு வழங்கிய ‘சிகரம்’ விருது!

10-09-2019 06:17 PM

புதுச்­சே­ரி­யில் பல்­வேறு துறை­க­ளில் சாதனை புரிந்­த­வர்­க­ளைக் கொண்­டா­டும் வித­மாக, நியூஸ் 18 தமிழ்­நாடு டிவி, ‘சிக­ரம் விரு­து­கள்' என்ற பெய­ரில் விரு­து­களை வழங்கி கவு­ர­வித்து வரு­கி­றது. அதன்­படி இந்த ஆண்­டுக்­கான சிக­ரம் விரு­து­கள் வழங்­கும் விழா புதுச்­சே­ரி­யில் சமீ­பத்­தில் நடை­பெற்­றது.

சிறந்த விவ­சா­யிக்­கான விருதை ஸ்ரீலட்­சுமி, சிறந்த விளை­யாட்டு வீர­ருக்­கான விருதை சாய் பிர­னிதா, சிறந்த தொழில் முனை­வோ­ருக்­கான விருதை எம். அப்­துல் காதர், சிறந்த கல்­வி­யா­ள­ருக்­கான விருதை ஜெ.கிருஷ்­ண­மூர்த்தி, ஆர்.அனிதா, சிறந்த விருந்­தோம்­ப­லுக்­கான விருதை காஷா கி ஆஷா கபே நிறு­வ­னத்­தார், கலைக்­கு­ழு­வுக்­கான விருதை ராஜப்பா கலைக்­குழு, சிறந்த மருத்­து­வ­ருக்­கான விருதை டாக்­டர். எஸ். ராம­சுப்­ர­ம­ணி­யம், சிறந்த சமூக சேவைக்­கான விருதை ‘உயிர்த்­துளி’ அமைப்­பி­னர், சிறந்த அர­சுப்­பள்­ளிக்­கான விருதை பனித்­திட்டு அரசு உயர்­நி­லைப்­பள்ளி, சிறந்த கிரா­மத்­துக்­கான விருதை தொண்­ட­மா­நந்­தம் கிரா­மம் ஆகி­யவை பெற்­றன.

விழா­வில் பல முக்­கிய பிர­மு­கர்­க­ளும் கலந்து கொண்டு சிறப்­பித்­த­னர்.Trending Now: