ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 11–9–19

10-09-2019 06:10 PM

சங்கீதத்தில் புதுமையே கிடையாது!

(சென்ற வார தொடர்ச்சி...)

எஸ்.ஜி. கிட்­டப்­பா­வின் நக­லாக டி.ஆர் மகா­லிங்­க­மும், எம்.கே தியா­க­ராஜ பாக­வ­த­ரின் நக­லாக டி.எம். சவுந்த­ர­ரா­ஜ­னும் திரை­யு­ல­கில் பிர­வே­சித்­தார்­கள். அவர்­க­ளை­யா­வது உடனே ஏற்­றுக் கொண்­டார்­களா கலா ரசி­கர்­கள்?

‘என்ன இருந்­தா­லும் கிட்­டப்பா போல் ஆகுமா? என்ன இருந்­தா­லும் பாக­வ­தர் போல் பாட முடி­யுமா?’ என்ற கேள்­வியை எழுப்­பிக்­கொண்­டு­தான் அவர்­களை வர­வேற்­றார்­கள்.அவர்­க­ளுக்­குப்­பின் புதிய தலை­மு­றைப் பாட­கர்­கள் திரை­வா­னிலே தோன்­றி­ய­தும், என்ன இருந்­தா­லும் டி.எம்.எஸ்.போல் ஆகுமா என்ற வினா எழும்­பத்­தான் செய்­தது.

இப்­பொ­ழுது என்னை எடுத்­துக் கொள்­ளுங்­கள். ஓர் இசையமைப்­பா­ளன் என்ற முறை­யில் இன்­றைய ரசி­கர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த வேண்­டிய கடமை எனக்கு இருக்­கி­றது. எனவே முந்­தைய இசை­ய­மைப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து நான் மாறு­பட்டு நிற்­க­வேண்­டி­ய­தா­கி­றது. ஏனெ­னில் முந்­தைய ரசி­கர்­க­ளி­ட­மி­ருந்து, இன்­றைய ரசி­கர்­கள் வித்­தி­யா­சப்­ப­டு­கி­றார்­கள். ஒரு சிலர் மட்­டுமே அன்­றைய பாடல்­க­ளைப்­போல் இன்­றைய பாடல்­கள் ஆழ­மாக இல்லை என்­கி­றார்­கள்.

அந்­தக் கா­லத்­தில் சிவாஜி பாடல்­கள், எம்.ஜி.ஆர் பாடல்­கள் சிறப்­புற விளங்­கி­ய­தற்கு எம்­ஜி­ஆ­ரும் சிவா­ஜி­யுமே கார­ண­மாக இருந்­தார்­கள். இசை­யும், பாடல்­க­ளும் சிறப்­பாக இருந்­தா­லும், அவற்­றைப் பாடி நடித்த எம்.ஜி.ஆருக்­கும், சிவா­ஜிக்­கும் சமு­தா­யத்­தில் ஒரு செல்­வாக்கு இருந்­தது. அந்­தச் செல்­வாக்கே பாடல்­க­ளைப் பிர­ப­லப்­ப­டுத்­தப் போது­மா­ன­தாக இருந்­தது.

அன்று எம்ஜி.ஆருக்­கும், சிவா­ஜிக்­கும் பாடல் அமைத்­துப் பிர­ப­ல­மாக்­கி­யது கஷ்­ட­மான காரி­யம் இல்லை. இன்று புதிது புதி­தாக தினம் தினம் வந்து கொண்­டி­ருக்­கும் கதா­நா­ய­கர்­க­ளும், நாய­கி­க­ளுக்­கும் பாட்­டுப்­போட்டு அது பிர­ப­ல­மா­வ­து­தான் கஷ்­ட­மான காரி­யம்.

படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம். வாத்­தி­யங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­கம். ர­சி­கர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­கம் என மாறி­விட்ட இன்­றைய சூழ்­நி­லை­யில் ஜன­ரஞ்­சக­மான பாடல்­களை மக்­க­ளுக்கு வழங்­கு­வது இசை­ய­மைப்­பா­ள­னுக்கு சவா­லான காரி­ய­மாக இருக்­கி­றது. அன்­றைய நிலை­யோடு ஒப்­பிட்­டுப்­பார்த்­தால் இன்­றைய நிலை­தான் சிர­ம­மா­னது.

உண்மை இவ்­வா­றி­ருக்க அந்­தக்­கா­லத்­துப் பாடல்­க­ளைப்­போல் இந்­தக் காலத்­துப் பாடல்­கள் இல்லை என்று சிலர் முணு­மு­ணுப்­ப­தில் அர்த்­தம் இருப்­ப­தாக எனக்­குத்­தோன்­ற­வில்லை.

கலை­யின் நவீ­னத்தை அவர்­கள் கவுர­விக்க மறுக்­கி­றார்­கள். இசை பாமர மக்­க­ளைச்­சென்று சேர்ந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தில் இவர்­க­ளுக்­குள்ள ஆதிக்க மனப்­பான்மைதான் இவர்­க­ளு­டைய முணு­மு­ணுப்­புக்­குக் கார­ணம்.

பழைய கலை­ஞர்­க­ளி­டம் எனக்கு நிறை­யவே ஈடு­பாடு உண்டு. பழைய பாடல்­க­ளி­டத்­தும் எனக்கு ஈர்ப்பு உண்டு. எனி­னும் புது­மை­யைப்­பே­ணு­வ­தில் என்ன தவறு?

இசை அனை­வ­ருக்­கும் இன்­பம் பயக்­க­வேண்­டும். கீர்த்­த­னை­களை, கிரா­மங்­க­ளுக்­கும் எடுத்­துச் செல்ல விரும்­பும் எனக்கு, வெள்­ளித்­திரை ஒரு வாக­ன­மாக இருக்­கி­றது. இந்த வாக­னத்­தைச் செலுத்த இறை­ய­ருள் என்­னைப் பணித்­தி­ருக்­கி­றது. இட்ட பணியை நான் இடை­ய­றாது செய்து கொண்­டி­ருக்­கி­றேன்.

இப்­பொ­ழுது வெளிவந்து கொண்­டி­ருக்­கும் பாடல்­கள் முப்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பின்­ன­ரும் நிற்­குமா? இதை யாரா­லும் சொல்ல முடி­யாது. காலம்­தான் இதை நிர்­ண­யிக்க வேண்­டும்."

கன­வுப்­ப­ற­வை­கள்

இளை­ய­ராஜா என் ஆத்ம சிநே­கி­தன்.

இந்த சினிமா உல­கப்­பு­க­ழுக்கு முன்பே என் உயிர்­தோ­ழ­னாகி விட்­ட­வன். இசைச்­சி­ற­க­டித்து அவ­னும், கதைக்­க­ன­வு­க­ளோடு நானும், எங்­க­ளது சொந்த கிரா­மங்­க­ளில் சுற்­றித்­தி­ரிந்­த­நாட்கள், பசுமை படர்ந்த ஒரு பரந்த பிர­தே­சம். அந்த நாட்கள்தான் இன்­றும் எனக்­கும் அவ­னுக்­கு­மி­டையே கோப­மூட்­டிக்­கொண்­டும், கைகு­லுக்­கிக்­கொண்­டும் இருக்­கின்­றன." சொல்­ப­வர் பார­தி­ராஜா.

பாரதி என் இணை­பி­ரியா நண்­பன்.

அந்த ராஜா­வின் பட­மென்­றால் இந்த ராஜா­வின் இசைக்கு ஒரு கம்­பீ­ரம் வந்­து­வி­டு­கின்­றது. அவ­னது ‘பதி­னாறு வய­தி­னிலே’ க்கு பிற­கு­தான் சினிமா என்­ப­தைப்­பற்றி நிறை­யப்­பே­ரால் புரிந்து கொள்ள முடிந்­தது. எனது மண்­ணில் இருந்து வந்து சிறந்த சினி­மாக்­கா­ரன். என்­ன­தான் இன்­று­ இ­ரண்டு பேரும் சினி­மா­வு­ல­கில் முக்­கி­ய­மா­ன­வர்­க­ளாகி விட்­டா­லும் நாங்­கள் பழை­யதை மறக்­காத இணை­பி­ரியா நண்­பர்­கள்." இப்­ப­டிச் சொல்­ப­வர் இளை­ய­ராஜா.

யாரை நினைக்­கி­றார்?

இளை­ய­ராஜா மெல்­லி­சைக்­குழு நடத்­திக் கொண்­டி­ருந்­த­போது தன் அண்­ணன் பாவ­லர் வர­த­ரா­ஜனை நினைத்­து­விட்­டுத்­தான் இசை­ய­மைக்­கத் தொடங்­கு­வா­ராம். திரைப்­ப­டப்­பா­டல்­க­ளைக் கம்­போஸ் செய்­வ­தற்கு முன்­னர் படத்­தில் பாடல் இடம்பெறும் கட்­டம், சூழ்­நிலை ஆகி­ய­வற்­றைத்­தான் மனதில் எண்­ணிக்­கொள்­வா­ராம்.

1980-ம் ஆண்டு வரை இளை­ய­ராஜா இசை­ய­மைத்த படப்­பா­டல்­க­ளில் அவ­ருக்கு மிக­வும் பிடித்த பாடல் ‘கட­வுள் அமைத்த மேடை’ என்ற படத்­தில் சுத்­தமா னஹம்­ஸத்­வனி ராகத்­தில் அமைந்­த‘­­­­ம­யிலே மயிலே’ என்ற பாடல்தானாம்.1984-ல் ‘மகுடி’ படத்­தில் வரும் ‘காட்­டோ­ரம் மூங்­கில் காட்­டைச்­சுற்றி" என்ற பாட­லை­யும்  குறிப்­பிட்­டார்.

காப்­பி­ய­டிக்­கி­றாரா?

இளை­ய­ராஜா பழைய மெட்­டு­க­ளைக் காப்­பி­ய­டிக்­கி­றாரா என்று கேட்­ட­போது அவர் சொன்ன பதில் சங்­கீ­தத்­தில் புதுமை என்­பதே கிடை­யாது, சப்த ஸ்வரங்­கள்­தான் . அன்­றும் சரி. இன்­றும் சரி இதிலே யாருமே புதுமை செய்­து­விட முடி­யாது. அத­னால் நான் காப்­பி­ய­டிக்­கி­றேன் என்ற பேச்­சுக்கே இட­மில்லை.Trending Now: