இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்திலும் ஒட்டுமொத்த மோட்டார் வாகன விற்பனை தொடர்ந்து சரிவு

09-09-2019 07:07 PM

புது டில்லி,

இந்தியாவில் 1997-98ம் ஆண்டிற்கு பிறகு மோட்டார் வாகன விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கடுமையான சரிவை சந்தித்திருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள்:.

பேருந்து, கார் போன்ற பயணிகளின் வாகனங்கள் இருசக்கர வாகனங்கள், மற்றும் வணிக வாகனங்களின் நடப்பாண்டு ஆகஸ்ட் மாத மொத்தவிற்பனை 18,21,490.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாத மொத்த விற்பனை 23,82,436 வாகனங்கள் ஆகும்.

இது கடந்த ஆண்டை விட 2019 ஆகஸ்டு மாத்த்தில் 23.55 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்தது.

2019 ஜூலையில் மொத்தமாக 18,25,148 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

இது கடந்த 2018ல் 22,45,223 வாகனங்கள் விற்பனையானது. கடந்த 2018 ஜூலை மாத விற்பனையை விட 2019 ஜூலை மாத விறபனை 18.17 சதவீதம் சரிவடைந்துள்ளது..

உள்நாட்டில் பயணிகளின் வாகன விற்பனை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. நடப்பு ஆண்டு ஆகஸ்டில் 31.57 சதவீதம் குறைந்தது.  நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,96,524 வாகனங்கள் விற்பனையானது.

2018ம் ஆண்டு 2,87,198 வாகனங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மாருதி சரிவு

நாட்டின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி   கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 36.14 சதவீதம் சரிந்து 93,173 வாகனங்கள் விற்பனை செய்தது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 16.58 சதவீதம் சரிந்து 93,173 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதைபோல் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை 31.58 சதவீதம் சரிந்து 13,504 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கார் விற்பனை

உள்நாட்டு கார் விற்பனை 2019 கடந்த ஆகஸ்ட மாதத்தில் 41.09 சதவீதம் சரிந்து 1,15,957 கார்கள் விற்பனையானது. கடந்த 2018ம் ஆண்டு 1,96,847 கார்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இரு சக்கர வாகன விற்பனை

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 22.24 சதவீதம் குறைந்து 15,14,196  இரு சக்ர வாகனம் விற்பனையானது. இதுவே 2018ல் ஆகஸ்ட் மாதத்தில் 19,47,304 வாகனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வணிக வாகன விற்பனை

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 38.71 சதவீதம் குறைந்து 51,897 வணிக வாகனங்கள் விற்பனையானது. இதுவே 2018ல்  ஆகஸ்ட் மாதத்தில் 84,668 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் விற்பனை

2019 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22.33 சதவீதம்  குறைந்து 9,37,486 மோட்டார் சைக்கிள் விற்பனையானது. இதுவே 2018ல் ஆகஸ்ட் மாதத்தில் 12,07,005  மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஸ்கூட்டர் விற்பனை

2019 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22.19 சதவீதம் சரிந்து 9,37,486 ஸ்கூட்டர் விற்பனையானது. இதுவே 2018ல் ஆகஸ்ட் மாதத்தில் 12,07,005  ஸ்கூட்டர்  விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்  20.97 சதவீதம் சரிந்து 5,24,003 வாகனங்கள் விற்பனையானது.

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம்à ஆகஸ்ட் மாதத்தில் 26.26 சதவீதம் சரிந்து 425664 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம்  விற்பனை 20.37 சதவீதம் சரிந்து 2,19,528 வாகனங்கள் விற்பனயாகியுள்ளது.

@@@@@Trending Now: