ஸ்டார்ட் அப்: மறு உப­யோ­கம் செய்­யக்­கூ­டிய சானி­டரி நாப்­கின்­கள்

09-09-2019 04:24 PM


 உல­க­ள­வில் தூக்கி எறி­யப்­ப­டும் குப்­பை­க­ளில் முக்­கி­ய­மா­ன­வ­க­ளில் ஒன்று உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்ட சானி­டரி நாப்­கின்­கள். இந்­தி­யா­வில் மட்­டும் வரு­டம் தோறும் சுமார் 85 ஆயி­ரம் கோடி உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்ட சானிட்­டரி நாப்­கின்­கள் குப்­பை­க­ளாக தூக்கி எறி­யப்­ப­ட­ப­டு­கின்­றன.

 டெல்­லி­யைச் சேர்ந்த சான்பி என்ற ஸ்டார்ட் அப் கம்­பெனி, திருப்பி உப­யோ­கிக்க கூடிய அதா­வது மறு உப­யோ­கம் செய்­யக்­கூ­டிய சானி­டர் நாப்­கின் களை தயா­ரிக்க ஆரம்­பித்­துள்­ளது. இந்த சானி­டரி நாப்­கின் கள் வாழை நாரி­லி­ருந்து தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதை சுமார் 120 தடவை மறு உப­யோ­கம் செய்­ய­லாம். இதன் விலை சுமார் இரு­நூறு ரூபாய் ஆகி­றது.

 மறு உப­யோ­கம் செய்­யக்­கூ­டிய சானி­டரி நாப்­கின்­கள் சந்­தை­யில் இருந்­தா­லும், வாழை நாரி­லி­ருந்து  தயா­ரிக்­கப்­ப­டும் இந்த சானி­டரி நாப்­கின் கள் அதை­விட சிறந்­த­வை­யாக கரு­தப்­ப­டு­கி­றது.   தற்­போது இந்த வகை சானிட்­டரி நாப்­கின்­கள் ஆன்­லைன் ஸ்டோர்­கள் மூல­மாக கிடைக்­கின்­றன. மேலும் ரீடைல் கடை­கள் மூல­மாக விற்­கப்­ப­டு­கி­றது.

 இவர்­க­ளு­டைய இணை­ய­த­ளம் www.sanfe.in.

 இவர்­கள் பெண்­கள் சுகா­தா­ரத்­திற்­காக  இன்­னும் பல பொருட்­களை தயா­ரித்­துள்­ள­னர். இவற்றை இணை­ய­த­ளத்­தில் சென்று பார்க்­க­லாம்.Trending Now: