ஜார்க்கண்ட் அரசுடன் ஃபிளிப்கார்ட் ஒப்பந்தம்

08-09-2019 07:12 PM

புதுடில்லி

ஜார்க்கண்ட் மாநில கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்கள் நெசவாளர்கள், ஆன்லைன் வர்த்தக முயற்சிகளைத் துவக்க உதவுவதற்காக ஃபிளிப்கார்ட் நிறுவனம் ஜார்க்கண்ட் மாநில அரசுடன் இன்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

மாநிலம் முழுமையும் உள்ள கைவினைக் கலைஞர்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை அமைப்பதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ரகுவீர் தாஸ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது

 பல ஆயிரக்கணக்கான கிராம தொழில் கலைஞர்கள் ஆன்லைன் வர்த்தக வர்த்தகம் துவங்க இந்த ஒப்பந்தம் உதவியாக அமையும் என முதலமைச்சர் கூறினார்.

 ஜார்கண்ட் மாநிலத்தில் மூங்கில் நிபுணர்களின் மாநாடு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டுக்கு முன்னதாக ஃபிளிப் கார்ட்டுடன் ஆன்லைன் வர்த்தக உதவி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராம தொழில் நிபுணர்கள், எம்எஸ்எம்இ உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு பெரிதும் இந்த ஒப்பந்தம் உதவியாக அமையும் என மாநில முதலமைச்சர் ரகுவீர் தாஸ் கூறினார்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கான உதவிகளை ஃபிளிப்கார்ட் நிறுவனம் வழங்கும் என அந்நிறுவனத்தின் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.Trending Now: