மடக்கி கொண்டு போகும் இ-–பைக்

06-09-2019 03:19 PM

புதிய கார் அல்­லது ஸ்கூட்­டர், பைக் வாங்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கும். ஆனால் இவை சுற்­றுப்­பு­றச் சூழலை மாசு படுத்­து­கின்­றது. உலக அள­வில் அதிக அளவு கார் உற்­பத்தி, விற்­ப­னை­யில், சென்ற வரு­டம் இந்­தியா நான்­கா­வது இடத்­தில் இருந்­தது. உலக அள­வில் வாக­னங்­கள் வெளி­யேற்­றும் புகை­யால் தான் காற்று மாசு ஏற்­ப­டு­கி­றது. தலை­ந­கர் டில்­லி­யில் அதிக அளவு காற்று மாசு ஏற்­பட்­டுள்­ளதை பற்றி அறி­வோம்.கான்­பூர்–ஐ.ஐ.டி யைச் சேர்ந்­த­வர்­கள் செய்த ஆய்­வில், டில்லி காற்று மாசு ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­க­ளில் வாக­னங்­கள் வெளி­யேற்­றும் புகை இரண்­டாம் இடத்­தில் உள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது.

இந்த வரு­டம் ஜூலை 5ம் தேதி பார்­லி­மென்­டில் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் பட்­ஜெட்டை சமர்ப்­பித்து பேசு­கை­யில், இந்­தியா மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாக­னங்­களை உற்­பத்தி செய்­யும் மைய­மாக உரு­வாக திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­தார். இது சுற்­றுச் சூழல் ஆர்­வ­லர்­க­ளுக்­கும், இயற்­கையை நேசிப்­ப­வர்­க­ளுக்­கும் தித்­திக்­கும் செய்­தி­யாக இருந்­தது. இத்­து­டன் மத்­திய அரசு மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாக­னங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்டு வந்த ஜி.எஸ்.டி வரியை 12 சத­வி­கி­தத்­தில் இருந்து 5 சத­வி­கி­த­மாக குறைத்­துள்­ளது. மின்­சா­ரத்­தால் இயங்­கும் வாக­னங்­களை வாங்­கு­ப­வர்­க­ளுக்கு ரூ. 1 லட்­சத்து 50 ஆயி­ரம் வரை வரு­மான வரி சலு­கை­யை­யும் அறி­வித்­துள்­ளது.

மத்­திய அரசு மின்­சா­ரத்­தில் இயங்­கும் வாக­னங்­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்று எண்­ணும் போது, மக்­கள் மின்­சார வாக­னத்­திற்கு மாறு­வது மட்­டு­மில்­லா­மல், காற்று மாசு ஏற்­ப­டுத்­தாத இரண்டு, நான்கு சக்­கர வாக­னங்­களை கண்­டு­பி­டிப்­ப­தி­லும் ஆர்­வ­மாக உள்­ள­னர்.

மின்­சார வாக­னத்தை தயா­ரிக்க கேர­ளா­வில் உள்ள கொச்சி அருகே மிதுன் சர்க்­கார், அசின் அல், ஜிஸ்னு ஆகிய மூன்று இளை­ஞர்­கள் சேர்ந்து சாம்டோ லேப் என்ற நிறு­வ­னத்­தைத் தொடங்­கி­யுள்­ள­னர். இதை இந்­தி­யா­வின் புதிய எலக்­ரா­னிக் கண்­டு­பி­டிப்­பு­க­ளின் மைய­மான மேகர் கிரா­மத்­தில் தொடங்­கி­யுள்­ள­னர். இவர்­கள் இ–பைக் தயா­ரிக்க வேண்­டும் என்று நினைத்த போது, சாம்டோ லேப் தொடங்­கு­வ­தில் இணை நிறு­வ­னர், மக்­கள் விரும்­பும் வகை­யில் இ–பைக் தயா­ரிக்க வேண்­டும் என்று கரு­தி­னார். இவர்­கள் மூன்று வரு­டம் கடு­மை­யாக உழைத்து, இந்த ஜூலை­யில் இ–பைக்கை வடி­வ­மைத்து தயா­ரித்­த­னர். இவர்­கள் தயா­ரித்­துள்ள இ–பைக் மடக்கி கொண்டு போக­லாம். மெட்ரோ ரயில், கார், வீட்­டின் மாடி என எங்­கும் மடக்கி கொண்டு செல்­லும் வகை­யில் உள்­ளது.  

சாம்டோ லேப்­பின் தலைமை தொழில்­நுட்ப அதி­கா­ரி­யும், மெக்­டோ­டி­ரா­னிக் இன்­ஜி­னி­ய­ரு­மான ஜிஸ்னு கூறு­கை­யில், “நமக்கு சிறு­வர்­க­ளாக இருக்­கும் போது சைக்­கிள் ஓட்­டிய நினைவு இருக்­கும். நாம் வளர்ந்த் உடன் வேக­மாக செல்­லும் வாக­னங்­க­ளுக்கு மாறு­கின்­றோம். இத­னால் நேரம் மிச்­ச­மா­கின்­றது. ஆனால் நாம் இவற்­றால் சுற்­றுச்­சூ­ழல் மாசு ஏற்­ப­டு­வதை உணர்­வ­தில்லை. நாங்­கள் எல்லா தரப்­பி­ன­ரும் பயன்­ப­டுத்­தும் வகை­யில் இ–பைக் வடி­வ­மைத்து தயா­ரிக்க திட்­ட­மிட்­டோம். இது விரை­வாக செல்ல வேண்­டும். அதே நேரத்­தில் சுற்­றுச் சூழல் மாசு ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்று கரு­தி­னோம் என்று தெரி­வித்­தார்.

சாம்டோ நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யும், சாப்ட்­வேர் இன்­ஜி­னி­ய­ரு­மான மிதுன் சர்க்­கார் கூறு­கை­யில், “மின்­சா­ரத்­தால் இயங்­கும் கார், பைக் போன்­ற­வை­க­ளுக்கு சார்ஜ் செய்­வ­தற்கு சார்ஜ் ஸ்டேஷன் போன்ற கட்­ட­மைப்பு வச­தி­கள் வேண்­டும். நாங்­கள் தயா­ரித்­துள்ள இ–பைக்கை சார்ஜ் செய்ய சார்ஜ் ஸ்டேஷன் தேவை­யில்லை. இதன் பேட்­டரி தீர்ந்­து­விட்­டால், வீட்­டி­லேயே சார்ஜ் செய்து கொள்­ள­லாம்” என்று தெரி­வித்­தார்.

இவர்­கள் ஆல்பா–1, ஆல்பா 1 புரோ என்ற இரண்டு மாடல் இ–பைக் (சைக்­கிள்) தயா­ரித்­துள்­ள­னர். ஆல்பா–1 விலை ரூ.49.500., ஆல்பா–1 புரோ விலை ரூ.69,500. இரண்­டை­யும் வீட்­டி­லேயே இரண்டு மணி நேரத்­தில் சார்ஜ் செய்து கொள்­ள­லாம். ஒரு முறை சார்ஜ் செய்­தால் ஆல்பா–1 ரக இ–பைக் 50 கி.மீட்­டர் ஓடும். ஆல்பா–1 புரோ இ–பைக் 100 கி.மீட்­டர் ஓடும். இதன் பேட்­ட­ரியை கழிற்றி சார்ஜ் செய்து கொள்­ள­லாம். இந்த இ–பைக் அலு­மி­னி­யத்­தால் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தால் மழை காலங்­க­ளில் கூட இயக்­க­லாம். இது எல்லா வய­தி­ன­ரும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தகுந்­தாற்­போல் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் இருக்­கை­யும் தேவைப்­ப­டு­வது போல் மாற்­றிக் கொள்­ள­லாம். அத்­து­டன் இதை மூன்று வித­மா­க­வும் பயன்­ப­டுத்­த­லாம். சாதா­ரண சைக்­கிள் போல் காலால் மிதித்­தும் ஓட்­ட­லாம். முத­லில் சிறிது நேரம் காலால் மிதித்­தால் போதும், தானாக ஓடும். மோட்­டார் பைக் போல் மின்­சா­ரத்­தில் ஓடும்.

இவர்­கள் இ–பைக்கை அறி­மு­கப்­ப­டுத்­திய ஒரே வாரத்­தில் 50க்கும் அதி­க­மான இ–பைக் விற்­ப­னை­யா­கி­விட்­டது. தின­சரி நூற்­றுக்­க­ணக்­கா­னோர் விசா­ரிப்­ப­து­டன், வாங்­கு­வ­தற்கு முன்­ப­தி­வும் செய்து கொள்­கின்­ற­னர். இது போன்ற செய்­தி­கள் மூலம் மக்­கள் சுற்­றுச் சூழலை பாது­காப்­ப­தில் அக்­கறை கொள்­கின்­ற­னர் என்று தெரி­கி­றது. நாம் அனை­வ­ரும் வாழ்க்கை முறையை மாற்­றிக் கொண்டு, நமது பூவு­லகை மாசு­ப­டுத்­தா­மல் இருக்க வேண்­டும்.

நன்றி: பெட்­டர் இந்­தியா

இணை­ய­த­ளத்­தில் கோபி கரிலா.

Trending Now: