பிரஞ்சு மொழியில் அறிவிப்பு இல்லை : ஏர் கனடாவுக்கு அபராதம்

06-09-2019 03:16 PM


பிரஞ்சு மொழி பேசும் தம்­பதி ஏர் கனடா விமான நிறு­வ­னம் மீது, விமா­னத்­தில் அறி­விப்­பு­கள் பிரஞ்சு மொழி­யில் இல்லை என்று வழக்கு தொடர்ந்­த­னர். இந்த வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம், அந்த தம்­ப­திக்கு இழப்­பீ­டாக 21 ஆயி­ரம் டாலர் வழங்­கு­வ­து­டன், அவர்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்டு கடி­தம் எழு­து­மா­றும் உத்­த­ர­விட்­டது.

மைக்­கேல், லூன்டா திபோ­டியு ஆகிய தம்­பதி அதி­கா­ர­பூர்வ மொழி­கள் சட்­டத்­தின் கீழ், ஏர் கனடா நிறு­வ­னம் மீது 22 புகார்­களை கூறி­யி­ருந்­தார்­கள். அவர்­கள் ஏர் கனடா விமா­னத்­தின் வெளி­யே­றும் கத­வில் பெரிய எழுத்­தில் ஆங்­கி­லத்­தி­லும், சிறிய எழுத்­தில் பிரஞ்சு மொழி­யி­லும் அவ­சர வழி என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சீட் பெல்­டு­க­ளில் லிப்ட் என்று ஆங்­கி­லத்­தில் மட்­டும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பிரஞ்சு மொழி­யில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. விமா­னத்­தில் ஏறி­ய­வு­டன் கூறப்­ப­டும் அறி­விப்­பில் ஆங்­கி­லத்­தில் கொடுக்­கப்­பட்ட விளக்­கங்­கள், பிரஞ்சு மொழி­யில் கூறப்­ப­ட­வில்லை என்று கூறி­யி­ருந்­த­னர். இத­னால் பிரஞ்சு மொழி பேசும் உரி­மை­களை ஏர் கனடா நிறு­வ­னம் மீறி­யுள்­ள­தாக புகா­ரில் கூறி­யி­ருந்­த­னர்.

இந்த தம்­ப­தி­யின் புகாரை ஏற்­றுக் கொண்ட பெட­ரல் நீதி­மன்ற நீதி­பதி மார்­டின் செயின்ட் லூயிஸ், ஏர் கனடா நிறு­வ­னம் புகார் அளித்த தம்­ப­திக்கு மன்­னிப்பு கோரி கடி­தம் எழு­த­வேண்­டும்.

அத்­து­டன் 21 ஆயி­ரம் டாலர் இழப்­பீடு வழங்­கு­மா­றும் உத்­த­ர­விட்­டார். அதே நேரத்­தில் தானும், மனை­வி­யும் ஏர் கனடா விமா­னத்­தில் பய­ணிப்­பதை நிறுத்த மாட்­டோம் என்று இந்த தம்­பதி கூறி­யுள்­ள­னர்.

Trending Now: