குழந்­தை­களை பட்­டி­னி­போட்டு காத­ல­னு­டன் ஜாலி!

06-09-2019 03:13 PM

உக்­ரைன் நாட்­டைச் சேர்ந்த விளாஸ்­டிஸ்­லாவோ ட்ராம்­கிம்­சுக் என்ற 23 வய­து­டைய பெண்­மணி, இரண்டு குழந்­தை­களை உணவு, தண்­ணீர் இல்­லா­மல் 11 நாட்­கள் வீட்­டில் பூட்டி போட்­டு­விட்டு. புதிய காத­ல­னு­டன் ஊர் சுற்­றி­யுள்­ளார். அந்த 11 நாட்­க­ளும் ஒரு வயது மகன் டேனில், மூன்று வயது மகள் அன்னா ஆகிய இரு குழந்­தை­க­ளும் உணவு, தண்­ணீர் இல்­லா­மல் பட்­டினி கிடந்­துள்­ள­னர். இரண்டு குழந்­தை­க­ளும் வீட்­டில் இருந்த சுவ­ரொட்­டி­கள், தங்­கள் கழி­வு­களை சாப்­பிட்­டுள்­ள­னர். 11 நாட்­கள் சுற்­றி­விட்டு வீட்­டிற்கு திரும்­பிய விளாஸ்­டிஸ்லா குழந்­தை­க­ளுக்கு உடல்­நிலை சரி­யில்லை என்று சமூக வலைத்­த­ளத்­தில் பணம் திரட்ட முயற்­சித்­துள்­ளார். இதற்­கி­டை­யில் ஒரு வயது டேனில் இறந்­து­விட்­டான்.

 இந்த சம்­ப­வம் தொடர்­பாக வழக்கு பதிவு செய்த போலீ­சார், திட்­ட­மிட்டு குழந்­தை­களை பட்­டி­னி­போட்டு கொலை செய்ய முயற்சி செய்த்­தாக விளாஸ்­டி­காவை கைது செய்து வழக்கு தொடர்ந்­த­னர். இந்த வழக்­கில் நீதி­பதி விளாஸ்­டிஸ்­லா­வோ­வுக்கு எட்டு வரு­டம் சிறை தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளார். அவ­ரது கண­வர் ஆயுள் தண்­டனை வழங்க வேண்­டும் என்று மேல் முறை­யீடு செய்ய உள்­ளார்.Trending Now: