மாடல் அழ­கி­யின் கருப்பை விற்­பனை

06-09-2019 03:12 PM

ரஷ்­யா­வைச் சேர்ந்த மாடல் அழகி சோபியா லான்­ஷ­கோவா (16) விடு­மு­றை­யைக் கொண்­டா­டு­வ­தற்­காக குடும்­பத்­து­டன் துருக்கி சென்­றுள்­ளார். அங்கு அவ­ருக்கு திடீ­ரென உடல்­நல குறைவு ஏற்­பட்­டுள்­ளது. கடு­மை­யான குடல் அழற்சி ஏற்­பட்டு மார்பு பகு­தி­யில் வலி எடுத்­துள்­ளது. உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ள­னர். அவ­ருக்கு மருத்­து­வர்­கள் எட்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்­துள்­ள­னர். ஆனால் சிகிச்சை பல­னின்றி இறந்­து­விட்­டார். அவ­ரது சட­லத்தை பரி­சோ­தித்த போது, கருப்பை மற்­றும் பிற உறுப்­பு­கள் காண­வில்லை என ரஷ்ய அதி­கா­ரி­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இதனை கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்த மாடல் அழ­கி­யின் தந்தை வியா­சஸ்­லாவ் லான்­ஷ­கோவ், தனது மகள் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக புகார் கூறி­யுள்­ளார். தனது மக­ளின் கருப்பை, மற்ற உறுப்­பு­கள் வெட்டி எடுக்­கப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ள­தாக புகார் கூறி­யுள்­ளார். இந்த சம்­ப­வம் பரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. போலீ­சார் கிரி­மி­னல் வழக்கு பதிவு செய்து விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர். அவ­ரது மர­ணம் பற்­றிய முழு தட­வி­யல் அறிக்கை அடுத்த மாதம் வெளி­யி­டப்­ப­டும் என்று அறி­வித்­துள்­ள­னர். இது பற்றி விசா­ரிக்­கு­மாறு மாடல் அழ­கி­யின் தந்தை, துருக்கி ஜனா­தி­பதி ரெசெப் துயிர் எர்­டோ­க­னுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

Trending Now: