பெற்றால்தான் பிள்ளையா!

05-09-2019 06:15 PM

கவர்ச்சி நடிகை என்று பெய­ரெ­டுத்த சன்னி லியோன், இப்­போது குணச்­சித்­திர வேடங்­க­ளி­லும், சாக­சப் பெண் வேடங் களி­லும் கலக்கி கொண்­டி­ருக்­கி­றார்.

சன்­னி­யின் சமூக வலை­தள பக்­கங்­க­ளில், அவ­ரது சினிமா போஸ்­க­ளுக்கு கிடைப்­பதை விட, அவ­ரது தாய்ப்­பா­சத்தை வெளிப்­ப­டுத்­தும் படங்­க­ளுக்­குத்­தான் அதிக வர­வேற்பு கிடைத்து வரு­கி­றது.

சன்னி லியோ­னும் அவ­ரது கண­வர் டேனி­யல் வெப­ரும், மகா­ராஷ்­டி­ரா­வின் லத்­துார் பகு­தி­யைச் சேர்ந்த நிஷாவை 2017ல் தத்­தெ­டுத்­த­னர். இந்த தம்­ப­திக்கு, வாட­கைத்­தாய் மூலம் பிறந்த நோவ், அஸர் என்ற இரு மகன்­க­ளும் உள்­ள­னர்.

சமீ­பத்­தில், டுவிட்­ட­ரில் ஒரு படத்தை சன்னி லியோன் வெளி­யிட்­டார். அதில் நிஷா ஒரு நோட்­டில் ஏதோ எழு­திக்­கொண்­டி­ருக்க, அருகே சன்னி இருந்து கொண்­டி­ருக்­கி­றார். படத்­தின் அரு­கில், ‘விடு­மு­றை­யாக இருந்­தால், என்­னு­டைய மக­ளு­டன் பொழு­து­போக்­கு­வேன். என் மக­ளுக்கு, வீட்­டுப்­பா­டத்தை முடிப்­ப­தில் உதவி செய்­தேன்’ என்று சன்னி குறிப்­பிட்­டி­ருந்­தார். இதற்கு, ‘ஒரு தாயின் கட­மையை, சிறப்­பாக செய்­கி­றீர்­கள்’ என்று பாராட்­டுக்­கள் குவிந்­துள்­ளன.