கொசுக்­க­டியை தடுக்­கும் ‘கிரா­பீன்!’

05-09-2019 06:13 PM

நச்சுமிக்க மருந்­துப் பொருட்­களை வைத்­துத்­தான் பல கொசு விரட்­டி­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­யில், விந்­தைப் பொரு­ளான, 'கிரா­பீன்' மூலம் அதற்கு ஒரு மாற்­றினை உரு­வாக்க முடி­யும் என அமெ­ரிக்­கா­வி­லுள்ள, பிர­வுன் பல்­க­லைக்­க­ழக ஆராய்ச்­சி­யா­ளர்­கள் சோத­னை­கள் மூலம் நிரூ­பித்­துள்­ள­னர்.

ஒற்றை அணு­வின் தடி­மனே உள்ள, கிரா­பீன் பட­லங்­கள், மிக­வும் மெல்­லி­ய­வை­யாக இருந்­தா­லும், இரும்­பை­விட வலுமிக்­கவை. இவற்­றைக் கொண்டு கணினி சில்­லு­கள் முதல் மின்கலன்­கள் வரை பல பொருட்­க­ளில் பயன்­ப­டுத்த முடி­யும் என்­பது விஞ்­ஞா­னி­க­ளின் கருத்து.

பிர­வுன் பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னி­கள், கிரா­பீன் பட­லத்தை சில­ரது உட­லில் போர்த்தி, கொசுக்­கள் அவர்­களை கடிக்­கி­றதா என ஆராய்ந்­த­னர். கொசுக்­கள் அந்­தப் பட­லங்­களை போர்த்­தி­யி­ருந்த மனித தோலையோ, வியர்­வை­யையோ நுகர முடி­ய­வில்லை. எனவே, கொசுக்­கள் கிரா­பீன் பட­லத்தை போர்த்­தி­யி­ருந்­த­வர்­களை கடிக்க முயற்­சிக்­கவே இல்லை. சில கிரா­பீன் பட­லங்­கள் சற்றே ஈரப்­ப­தத்­து­டன் இருந்­த­தால், கொசுக்­கள் அவற்­றின் மீது அமர்ந்­தன, ஆனால் கடிக்க முடி­ய­வில்லை. எனவே, கிரா­பீனை பசை போல தயா­ரிக்க முடிந்­தால், மனி­தர்­கள் அதைப் பூசிக் கொண்­டால், கடிக்­கா­மல் தப்­பிக்­க­லாம் என, விஞ்­ஞா­னி­கள் கரு­து ­கின்­ற­னர்.