மேதமிகு ஆளுநர் தமிழிசை! – சுமதி

04-09-2019 06:44 PM

தமி­ழக பாஜக தலை­வ­ராக இருந்த தமி­ழிசை சவுந்­த­ர­ரா­ஜன் தெலங்­கானா ஆளு­ந­ராக நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ளார். தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற வாச­கம் மூலம் கடைக்­கோடி தொண்­ட­னுக்­கும் பரிச்­ச­ய­மா­ன­வர் தமி­ழிசை. ஒரு பெண் தலை­வ­ராக அவர்­க­டந்து வந்த பாதை சுல­ப­மா­ன­தல்ல.

தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டி­யின் மூத்த தலை­வர் குமரி அனந்­த­னுக்கு மக­ளாக பிறந்­த­வர் தமி­ழிசை சவுந்­த­ர­ரா­ஜன். சிறு­வ­ய­தி­லேயே நாளி­தழ்­களை வாசிப்­பது, வீட்டு நூல­கத்­தி­லி­ருந்து அப்பா சொல்­லும் புத்­த­கத்தை எடுத்­துக்­கொ­டுப்­பது, பள்­ளிக்­கூட கட்­டுரை, பேச்­சுப் போட்­டி­க­ளில் பங்­கேற்­பது என்­றி­ருந்­தி­ருக்­கி­றார் தமி­ழிசை. 1980-ல் எம்­எல்­ஏ­வான குமரி அனந்­தன், அர­சி­னர் தோட்­டத்­தில் குடி­யே­றி­ய­தால் கரு­ணா­நிதி, எம்­ஜி­ஆர், மபொசி போன்ற அர­சி­யல் ஆளு­மை­க­ளைப் பார்க்­க­வும், அவர்­க­ளின் பேச்­சைக் கேட்­க­வும் வாய்ப்­பாக அமைந்­தது.

குமரி அனந்­தன் 1992-ல் 45 நாள் பாத­யாத்­திரை போன­போது அவ­ருக்­கும், கட்­சி­யி­ன­ருக்­கும் மருத்­துவ உதவி செய்­வ­தற்­காக, கைக்­கு­ழந்­தை­யு­டன் சென்­ற­வர் தமி­ழிசை. ‘பெண் சக்தி’ என்ற பெய­ரில் தொண்டு நிறு­வ­ன­மும் நடத்­தி­னார். ஆனா­லும், காங்­கி­ரஸ் கட்­சி­யில் அவர் உறுப்­பி­ன­ரா­கச் சேர­வில்லை. ராஜ் டிவி­யில் குமரி அனந்­தன் நடத்­தி­வந்த ‘நீங்­க­ளும் பேச்­சா­ள­ரா­க­லாம்’ நிகழ்ச்­சி­யின் தொகுப்­பா­ள­ரா­கத் தமிழ் மக்­க­ளுக்கு அறி­மு­க­மா­னார் தமி­ழிசை.

தஞ்­சா­வூர் அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் எம்.பி.பி.எஸ்.பட்­ட­மும், தமிழ்­நாடு டாக்­டர் எம்.ஜி.ஆர். மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் டி.ஜி.ஓ. பட்­ட­மும், கன­டா­வில் மருத்­து­வப் பயிற்­சி­யும் பெற்­ற­வர். இவ­ரது கண­வர் டாக்­டர் சவுந்­த­ர­ரா­ஜன், சென்­னைப் போரூர் ஸ்ரீரா­மச்­சந்­திரா மருத்­து­வக் கல்­லூரி சிறு­நீ­ர­க­வி­யல் துறைத் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றி­வ­ரு­கி­றார்.

அப்பா தீவிர காங்­கி­ரஸ்­கா­ரர்; ஆனால், தமி­ழிசை, தன் விருப்­ப­துக்கு ஏற்ப தனது அர­சி­யல்­வாழ்க்­கை­யைத் தீர்­மா­னித்­துக் கொண்­ட­வர். 1999-ம் ஆண்டு பா.ஜ.கவில் தன்னை இணைத்­துக்­கொண்­டார். அடிப்­படை உறுப்­பி­ன­ராக தனது பய­ணத்­தைத் தொடங்­கி­ய­வர், தனது உழைப்­பால் முன்­னே­றி­னார். அதே ஆண்­டில் பா.ஜ.கவின் தென்­சென்னை மாவட்ட மருத்­துவ அணிச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டார். கடந்த 2001-ம்

ஆண்டு மருத்­துவ அணி­யின் மாநில பொதுச் செய­லா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டார்.

முரண்­பட்டு நிற்­கும் கட்சி ஒன்­றில் தமி­ழிசை சேர, அவ­ரது தந்­தைக்கு அது பிடிக்­கா­மல் போனது. `நான் தேர்ந்­தெ­டுத்த பாதைக்­காக அப்­பாவை விட்­டுக்­கொ­டுக்க நேர்ந்­தது’ என்று தமி­ழிசை கூறி­யி­ருக்­கி­றார். பல சங்­க­டங்­க­ளைக் கடந்து, தான் செல்­லும்­பா­தை­யில் உறு­தி­யாக இருந்­த­வர்.

`என் வாழ்க்­கை­யில் அது ஒரு ரண­மான விஷ­யம்!’ - கண்­க­லங்­கிய தமி­ழிசை

பா.ஜ.கவின் மாவட்ட, மாநில மருத்­துவ அணிச் செய­லா­ளர், மருத்­துவ அணி­யின் தேசிய ஒருங்­கி­ணைப்­பா­ளர், மாநி­லப் பொதுச்­செ­ய­லா­ளர், மாநில துணைத் தலை­வர், தேசி­யச் செய­லா­ளர் போன்ற பொறுப்­பு­களை வகித்­துள்­ளார். இவ­ரது செயல்­பா­டு­க­ளைக் கண்ட கட்சி மேலி­டம், 2006 மற்­றும் 2011 சட்­ட­சபை தேர்­தல்­க­ளில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளித்­தது. அதே­போல 2009 மற்­றும் 2019-ம் ஆண்டு நடந்த மக்­க­ள­வைத் தேர்­த­லி­லும் பா.ஜ.க சார்­பில் போட்­டி­யிட்­டார். ஆனால், அவ­ரால் தேர்­த­லில் வெற்­றி­பெற முடி­ய­வில்லை. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவின் தமி­ழ­கத் தலை­வ­ராக பொறுப்­பேற்­றுக்­கொண்­டார் தமி­ழிசை சவுந்­த­ர­ரா­ஜன். பா.ஜ.கவின் மாநி­லத் தலை­வர்­க­ளில் தமி­ழிசை மட்­டும்­தான் ஒரே பெண் தலை­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தமி­ழ­கத்­தில் பா.ஜ.கவின் முக­மா­கவே மாறி, பா.ஜ.க என்­றால் தமி­ழிசை என்ற நிலைக்கு கட்­சியை லைம்­லைட்­டிலே இருக்­கச்­செய்­த­வர்.

அவர் தலை­வ­ரா­கப் பணி­யாற்­றிய காலங்­கள் சிக்­க­லா­னவை. மத்­திய அரசு சார்­பில் கொண்­டு­வ­ரப்­பட்ட நீட், பண­ம­திப்­பி­ழப்பு நட­வ­டிக்கை, ஜி.எஸ்.டி. உள்­ளிட்ட விவ­கா­ரங்­களை சாது­ரி­ய­மா­கக் கையாண்­டார். ஜல்­லிக்­கட்டு விவ­கா­ரத்­தில் மத்­திய அரசை விட்­டுக்­கொ­டுக்­கா­மல், அதே சம­யத்­தில் தமி­ழக மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்­கும் பாதிப்பு ஏற்­ப­டா­மல் பிரச்­னை­யைக் கையாள முனைந்­த­வர். பல்­வேறு விமர்­ச­னங்­கள் வைக்­கப்­பட்­ட­போ­தி­லும், அதை­யெல்­லாம் கண்­டு­கொள்­ளா­மல் தொடர்ந்து கட்­சிப்­ப­ணி­யாற்­றி­ய­வர்; மீம்ஸ்­களை போகிற போக்­கில் கடந்து சென்­ற­வர்.

அதே­போல ஊடக விவா­தங்­க­ளி­லும், செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லும் எப்­ப­டிப்­பட்ட கேள்­வி­க­ளை­யும் புன்­ன­கை­யால் எதிர்­கொண்டு பதி­ல­ளிப்­ப­வர். கடு­மை­யான வார்த்தை உச்­ச­ரிப்போ, பாதி­யில் புறக்­க­ணிப்போ அவ­ரி­டம் இருந்­த­தில்லை. இக்­கட்­டான சூழல்­க­ளில் கட்­சியை வழி­ந­டத்­தி­ய­வர் என்ற பெருமை அவ­ருக்கு உண்டு. தமி­ழ­கத்­தில் அர­சி­ய­லைக்­க­டந்து பல்­வேறு கட்­சித் தலை­வர்­க­ளி­டம் நட்பு பாராட்­டு­ப­வர் தமி­ழிசை. தனக்­கான மைனஸை பிள­ஸாக மாற்­றி­ய­வர்; உரு­வ­கே­லிக்கு ஆளாக்­கப்­பட்ட தமி­ழிசை அதை­யெல்­லாம் ஒரு பொருட்­டா­கவே கரு­த­வில்லை. பெண் தலை­வ­ராக இருந்து தமி­ழ­கத்­தில் கட்­சியை வளர்க்க பாடு­பட்ட தமி­ழிசை தற்­போது தெலங்­கா­னா­வின் ஆளு­ந­ராக பத­வி­ஏற்க உள்­ளார். `தமி­ழ­கத்­தில் தாமரை மலர்ந்தே தீரும்’, `வெற்­றி­க­ர­மான தோல்வி’ போன்ற வார்த்­தை­க­ளால் அதிக கவ­னம் ஈர்க்­கப்­பட்­ட­வர் தமி­ழிசை.

தமி­ழ­கத்­தில் 1982க்கு பிறகு பெண்­ணொ­ரு­வர் ஆளு­ந­ரா­ன­தில்லை. அதை தமி­ழிசை முறி­ய­டி­துள்­ளார். அதோடு தமிழ் மண்­ணில் பிறந்த முதல் பெண் ஆளு­நர் என்ற சகாப்­தத்­தை­யும் நிக­ழத்த இருக்­கி­றார். அது­மட்­டுமா இளம் வய­தில் இப் பத­வியை அலங்­க­ரிக்க போவ­தும் அவர்­தான்.

Trending Now: