பிசினஸ் : கிராம தொழிலிலும் அசத்தலாம்! – ஞானசேகர்

04-09-2019 06:41 PM

கிராமத்துத் தொழில்கள் என்றாலே ஏதோ சிறிய முதலீட்டில் தொடங்கி ஓசையின்றி நடத்தப்படுபவைதான் என்கிற எண்ணம் நமக்குள் உருவாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டம். இன்று உலகறியத் தொழில் நடத்தி வரும் பல பிரபலமான தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் சாலைகள், தொழிற்சங்கங்கள் பலவும் இன்று கிராமப்புறங்களில்தான் அமைந்திருக்கின்றன. பொருளாதார நுழைவுக்கு, இந்தியாவின் தாராளமய முகம் கிடைத்த பிறகு, இந்தியாவில் பிற நிறுவனங்களின் தேடல் கிராமப்புறங்களில் அமைந்தன. அரசிடம் இருந்து கிடைக்கின்ற ஆதாய சலுகைகளை முன்னிட்டுத்தான் பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை கிராமப்புறங்களில் தொடங்கின; கிராமப்புற வளர்ச்சியையோ,- ஊரகத் தொழில்களின் மேம்பாட்டைக் கருதித் தொடங்கப்படவில்லை என்பதே கசக்கும் உண்மை.நகர்ப்புற விற்பனைப் பொருட்கள் கிராமச் சந்தைக்குள் நுழைகின்றனவே தவிர, கிராமம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் நகர்ப்புற சந்தைகளில் நுழைவது என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நீடிக்கிறது.

கார­ணம் என்ன...

கிரா­மப்­புற தொழில்­கள் பெரும்­பா­லும் உணவு சார்ந்த சிறு தொழில்­க­ளாக இருந்­ததே முக்­கி­ய­மான கார­ணம். இப்­பொ­ருட்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­த­போது, உற்­பத்­திக்­குத் தேவை­யான மூலப்­பொ­ருட்­கள் கிரா­மத்­தில் இருந்து நக­ரத்­திற்­குக் கொண்டு செல்­லப்­பட்­டன.  நவீன இயந்­தி­ரங்­க­ளின் உத­வி­யு­டன் உற்­பத்தி பெரு­கி­யது. அத­னை­ய­டுத்து அத்­த­யா­ரிப்­பு­கள் நக­ரச் சந்­தை­க­ளில் கவ­னம் பெற்­றன. தலை­யைச் சுற்றி மூக்­கைத்­தொ­டு­வ­து­போல அவை நக­ரங்­க­ளில் இருந்து புது வடி­வில் கவர்ச்­சி­க­ர­மாக கிரா­மப் புறங்­க­ளுக்­கும் நுழைந்­தன.

எந்த ஒரு வணிக மதிப்­பை­யும் தேவை­தான் தீர்­மா­னிக்­கி­றது. வியா­பா­ரக் கண்­ணோட்­டத்­தில வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கவர சில கவர்ச்­சி­க­ர­மான கல­வை­கள் சேர்க்­கப்­பட்­ட­தில் இயல்­பான கலாச்­சா­ரத் தயா­ரிப்­பு­க­ளில் இருந்து கிரா­மங்­க­ளும் மாறின.

சந்­தைக் கலாச்­சா­ரம்

நுகர்­வோர் தர்­மம் அல்­லது தொழில் தர்­மம் என்­றெல்­லாம் வழங்­கப்­பட்ட சொற்­கள் மெல்ல மெல்ல மறை­யத்­தொ­டங்­கின. நுகர்­வோர் சந்தை என்­கிற வணி­கக் கலாச்­சா­ரம் உரு­வா­கத் தொடங்­கி­யது. ‘நல்­லதை விற்­பனை செய்’ என்­பது கேலி செய்­யப்­பட்­டது. ‘எது விற்­கி­றதோ, அதனை உற்­பத்தி செய்’ என்­கிற வணி­கத்­தந்­தி­ரம் மரி­யா­தையை அடைந்­தது. இதெல்­லாம் எல்லா நாடு­க­ளி­லும் நடை­பெற்­ற­து­தான். ஆனால் மற்ற நாடு­க­ளில் நடப்­ப­தற்­கும் இந்­தி­யா­வில் நடப்­ப­தற்­கும் ஏகப்­பட்ட வேறு­பா­டு­கள் உண்டு. இன்­றும் 60 சத­வீத மக்­கள் விவ­சா­யத்தை நம்­பி­யி­ருக்­கிற நாடு இது. காவிரி நீருக்கு இன்­று­வரை தமி­ழ­கத்­துக்­கும் கர்­நா­ட­கத்­துக்­கும் இழு­பறி ஓடிக்­கொண்­டி­ருக்­கி­றது. விவ­சா­யம் சார்ந்த துணைத்­தொ­ழில்­கள், கிரா­மி­யத் தொழில்­கள் இந்­தி­யா­வில் நசுங்­கு­வது, தேசத்­தின் இத­யத்­தைக் கசக்­கு­வது போன்­றது.

இப்­போது நீங்­கள் விளம்­ப­ரங்­க­ளில் காணு­கின்ற ’கை மணம்’, ’பாரம்­ப­ரி­யம்’, ’அந்­தப் பகுதி உணவு வகை’, ’செய்­முறை’ என்று குறிப்­பி­டு­வ­தெல்­லாம் சந்­தை­யைப் பிடிப்­ப­தற்­கா­கத்­தான் என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.

கிரா­மி­யப்­பொ­ருட்­கள் கார்ப்­ப­ரேட்­கள் கைக்கு போவது ஒரு­பு­றம் இருக்­கட்­டும். இன்று கிரா­மமே கார்ப்­ப­ரேட்­கள் கைக்­குப் போகி­றது. இதனை வெகு­நாட்­க­ளுக்கு அமை­தி­யாக வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்க முடி­யாது.

அப்­ப­டி­யா­னால் என்ன செய்­வது?

கிரா­மி­யத்­தொ­ழில்­க­ளுக்கு உயிர் கொடுப்­ப­து­தான் ஒரே வழி. பகா­சுர நிறு­வ­னங்­க­ளு­டன் ஒரு எளிய கிரா­மத்து மனி­தன் போட்­டி­போட்டு எப்­படி ஜெயிப்­பது என்று மலைக்க வேண்­டி­ய­தில்லை. குழு­வா­கச் சேர்ந்து செய்­யும் தொழில்­க­ளில் கூடு­தல் பலம் காட்ட முடி­யும்.

இன்­றைக்­கும் ஆர்.எஸ். கிருஷ்ணா அண்ட் கோவின் ‘ஒரி­ஜி­னல் தென்­ன­ம­ரக்­குடி எண்­ணெ’­­யும் அஞ்­சால் அலுப்பு மருந்­தும் 1431 பயோ­ரியா பல்­பொ­டி­யும் கோபால் பல்­பொ­டி­யும் நீலி பிருங்­காதி, கேச­வர்த்­தினி கூந்­தல் தைல­மும் தங்­கள் இடத்தை விட்­டுக்­கொ­டுக்­கா­மல்­தானே இருக்­கின்­றன!

கூடித்­தொ­ழில் செய்­வது என்று முடி­வா­ன­பின் அதற்கு ஒரு வடி­வம் தேவைப்­ப­டு­கி­றது அல்­லவா? அது­தான் சுய உத­விக் குழுக்­கள் எனும் வடி­வம். கடந்த 20 ஆண்­டு­க­ளில் இந்த வடி­வம் உரு­வான பிறகு பல நல்ல கிரா­மி­யத் தொழில்­கள் சார்ந்த உற்­பத்­தி­யும், நகர்­பு­றம் சார்ந்த தேவைத் தொழில்­கள் என இரண்­டுமே சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன என்­பதை மறுக்க முடி­யாது.

சிந்­திக்க வேண்­டிய சிக்­கல்­கள்

பகுதி சார்ந்த அடை­யா­ளங்­களை பிராண்­டா­கவே வைத்­துக் கொண்டு (திரு­நெல்­வேலி அல்வா, கும்­ப­கோ­ணம் பில்­டர் காபி, ஆம்­பூர் பிரி­யாணி முத­லி­யவை எடுத்­துக்­காட்­டு­கள்) பிர­பல நிறு­வ­னங்­கள் வளர்ச்சி அடை­யும் போது, அப்­ப­கு­தி­யில் உள்ள அதன் பாரம்­ப­ரிய மண­மும் அறிந்­த­வர்­கள், அத்­தொ­ழில் தொடங்கி ஏன் வெற்றி  பெற இய­ல­வில்லை? கார­ணம், பயிற்­சி­யின்மை, தொழில்­நுட்­பம் எளி­தில் கிடைக்­காமை, சந்தை எங்கு இருக்­கி­றது என்­கிற தெளி­வின்மை ஆகி­ய­வை­தான்.

எளிய தொழில்­களா? பயிற்சி வேண்­டுமா? தேவைப்­ப­டும் பயிற்­சியை எடுத்­துக்­கொள்­ளுங்­கள். சில பயிற்­சி­க­ளுக்கு குறு­கிய காலப் பயிற்சி போது­மா­னது. எடுத்­துக்­காட்­டாக, எழு­து­பொ­ருள் (ஸ்டேஷ­னரி) உற்­பத்­தி­யைப் பொறுத்­த­வரை அலு­வ­ல­கக் கவர்­கள் பைண்­டிங் போன்ற பணி­க­ளைப் புரிந்­து­கொள்ள ஒரு­நாள் பயிற்சி போது­மா­னது. கண் மை, வாஷிங் சோப், சாந்­துப் பொட்டு, குல்­கந்து போன்­ற­வற்­றுக்கு இரண்டு முதல் ஒரு­வார பயிற்சி தேவைப்­ப­டும்.

முத­லீ­டும் வளர்ச்­சி­யும்

மேற்­கண்ட பயிற்­சி­க­ளைப் பெற்று முத­லில் குடும்ப உறுப்­பி­னர்­க­ளின் உத­வி­யு­டன் தொழிலை மேற்­கொள்ள வேண்­டும். பின்­னர் அரு­கில் உள்ள நக­ரங்­க­ளில் கடை உரி­மை­யா­ளர்­க­ளைச் சந்­தித்து, ஆர்­டர்­க­ளைப் பெற்று அதற்­கேற்ப உற்­பத்­தியை விரி­வாக்­க­லாம்.

மேலும் கிரா­மிய வளர்ச்சி சார்ந்த அர­சின் திட்­டங்­கள், மக­ளிர் நலத்­திட்ட வழி­மு­றை­கள், மேம்­பாட்­டுத் திட்­டங்­கள், வங்­கி­கள் வழங்­கும் சுய­நி­திக் குழுக்­கள் மூல­மான எத்­த­னையோ திட்­டங்­கள் உண்டு. அவற்­றை­யும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

வெற்­றிக்­கான வழி­கள்:

ஒன்றை நீங்­கள்  தெரிந்து கொள்ள வேண்­டும். தொழில் நடத்த இடம் தேர்வு செய்­வ­தில் இருந்த, தொழி­லைப் பற்­றிய அடிப்­படை அறிவு, (முன் அனு­ப­வம் கொஞ்­சம் இருந்­தா­லும் போதும்) அவ­சி­யம் இருக்க வேண்­டும். தெரிந்த விவ­ரங்­க­ளின் தெளிவு ரொம்ப முக்­கி­யம்.

அடுத்து மூலப்­பொ­ருள்­கள் எளி­தில் கிடைக்­கக் கூடிய சூழ்­நிலை, தட்­டுப்­பாடு இல்­லாத மின்­சார வசதி, தடை­யின்றி கிடைக்­கும் இடம், அனு­ப­வம் மிக்க நபர்­கள், இப்­படி அனைத்­தை­யும் கவ­னத்­தில் கொண்டு தொழிலை ஆரம்­பிக்க வேண்­டும்.

”எந்­தத்­தொ­ழி­லில் லாபம் வரும்?” என்று கேட்­ப­வர்­கள் ஒன்­றைத் தெரிந்து கொள்ள வேண்­டும். எந்­தத் தொழி­லுமே நட்­டம் அடை­யக் கூடி­யது அல்ல. அதே­போல இந்­தத்­தொ­ழி­லில் லாபம் மட்­டுமே உறுதி என்­றும் எந்­தத்­தொ­ழி­லும் இல்லை.

மேலும், பெரிய முத­லீட்­டில்­தான் பெரிய லாபத்தை அடைய முடி­யும் என்­ப­தில்லை. சிறிய முத­லீட்­டில்­கூட சீரான லாபத்தை எடுக்க முடி­யும்.

அதற்கு பெரிய உதா­ர­ணங்­கள் பல நம்­மி­டம் உண்டு. ஊர­கத் தொழில்­க­ளைச் சிறிய அள­வில் தொடங்கி உல­கப் புகழ் பெற்­ற­வர்­கள் தென்­னிந்­தி­யா­வி­லும் உண்டு, வட இந்­தி­யா­லும் உண்டு.

Trending Now: