மொழியை பெயர்த்த மாண­வன்!

04-09-2019 05:25 PM

தமி­ழ­கத்­தில், பிளஸ் 2 கல்வி திட்­டம் துவங்­கிய புதிது. தேனி, நாடார் சரஸ்­வதி மேல்­நி­லைப் பள்­ளி­யில், ஆங்­கில ஆசி­ரி­ய­ராக சேர்ந்­தேன். அனு­ப­வம் மிக்க ஆசி­ரி­யர்­க­ளி­டம், கற்­பித்­த­லில் சுல­ப­மாக வெற்றி பெறும் முறை பற்றி கேட்­டேன்.

பல­ரும், 'வகுப்­பில் ஆங்­கி­லத்­தில் பேசி­னால் தான், படிக்­கும் ஆர்­வ­மும், ஆசி­ரி­யர் மீது, மதிப்­பும் மாண­வர்­க­ளுக்கு ஏற்­ப­டும்; எதிர்­கா­லத்­துக்கு பயன்­ப­டும்...' என்­ற­னர். அதன்­படி, முழுக்க ஆங்­கி­லத்­தில் வகுப்பு எடுக்க முடிவு செய்­தேன்.

ஒரு வகுப்­பில், மாண­வர்­க­ளின் பெயர், ஊர், ஆர்­வம் போன்ற விப­ரங்­களை கேட்­டேன். ஒரு­வன் எழுந்து, 'என் பெயர் ரமேஷ்; ஊர் பெயர் 'மம்மி பேட்...' என்­றான். அந்த பெயர் சுவா­ர­சி­யம் தரவே, 'மம்மி பேட் எங்கே இருக்கு...' என்­றேன்.

'நீங்க ஆங்­கி­லத்­தில் பேசச் சொன்­ன­தால், 'அம்மா பட்டி' என்ற என் ஊர் பெயரை, 'மம்மி பேட்' என்று மொழி பெயர்த்து கூறி­னேன் ஐயா...' என்று விளக்­கி­னான். வகுப்பே சிரிப்­ப­லை­யில் மூழ்­கி­யது.

மேல்­நிலை வகுப்­பு­க­ளில், ஆங்­கில ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரிந்து, ஓய்வு பெற்­றேன். அந்த சம்­ப­வம் நடந்து, 40 ஆண்­டு­க­ளுக்கு மேலா­கி­விட்­டது. அந்த நிகழ்வை, இப்­போது நினைத்­தா­லும் வாய்­விட்டு சிரித்து விடு­கி­றேன்.

–- மு.கருப்­பையா, தேனி.Trending Now: