தாம­தத்­தால் வந்த ஒழுங்கு!

04-09-2019 05:24 PM

திரு­வா­ரூர் மாவட்­டம், வட­மட்­டம், உயர்­நி­லைப் பள்­ளி­யில், 1980ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்­ப­வம் இது...

என் ஊருக்­கும், பள்­ளிக்­கும் இடையே, 3 கி.மீ., துாரம். பேருந்­தில், 20 பைசா கட்­ட­ணம். அதை தர முடி­யாத ஏழ்மை நிலை­யில் இருந்­தது குடும்­பம்.

தின­மும் காலை­யில் எழுந்து, வீட்டு வேலை­களை முடித்து, தாம­த­மாக தான் பள்­ளிக்கு செல்ல நேரி­டும். வகுப்பு ஆசி­ரி­யர் சக்­க­ர­பாணி பாடம் நடத்­திக் கொண்­டி­ருப்­பார்.

வகுப்­ப­றை­யில் நுழை­யும் போதே, 'இன்­னிக்­கும், லேட்டா ரவி...' என்று சிரித்­த­ப­டியே அனு­ம­திப்­பார். தாமத வரு­கை­யால், 'எல்.ரவி' என்ற என் பெயரை, 'லேட் ரவி' என்றே மாண­வர்­கள் செல்­ல­மாக அழைப்­பர். கவ­ன­மாக படித்து, ஆசி­ரி­யர் பணி­யில் சேர்ந்­தேன்.

எனக்கு, 57 வய­தா­கி­றது. பாடம் நடத்­தும் வகுப்­புக்கு, ஒரு­முறை கூட, தாம­த­மாக சென்­ற­தில்லை; பள்­ளிக்கு தாம­த­மாக வரும், மாணவ, மாண­வி­ய­ரை­யும் கடிந்து கொண்­ட­தில்லை. கிரா­மப்­புற சிறு­வர்­கள், பள்­ளிக்கு வரு­வ­தில் உள்ள சிர­மங்­களை புரிந்து, பணியை சிறப்­பாக செய்­து­வ­ரு­கி­றேன்!

–- எல்.ரவி, தஞ்­சா­வூர்.Trending Now: