குரு­வுக்கு மரி­யாதை!

04-09-2019 05:23 PM

மாதா­வும், பிதா­வும் நாம் பிறக்க கார­ண­மா­ன­வர்­கள். குரு என்ற ஆசி­ரி­யர் பகுத்­த­றிய கற்­றுத் தரு­ப­வர். வாழ்­வில் உன்­னத நிலையை அடைய, தெய்­வம் உத­வும். மாதா­வும், பிதா­வும் நம்மை குரு­வி­டம் ஒப்­ப­டைக்க, அவர் தெய்­வத்­தி­டம் சேர்ப்­பார் என்­பதே, வாழ்க்கை தத்­து­வம். ஆசி­ரி­யர் தினத்­தை­யொட்டி, குரு­வுக்கு மரி­யாதை செய்­வோம்.

கால்­கு­லேட்­டரை மிஞ்­சும் வகை­யில், இந்­திய கணித அறி­வைக் கையாண்டு, ஆசியா கண்­டம், சீனாவை கலக்கி வரு­கி­றார், தமி­ழ­கத்தை சேர்ந்த ஆசி­ரி­யர் ஐசக் தேவ­கு­மார்.

சீனா­வில் கணித ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றும் இவர், சிறந்த ஆசி­ரி­ய­ருக்­கான சீன விருதை, இரண்டு முறை பெற்­றுள்­ளார்.

ஆர்­வம் மிகு­தி­யால், வித்­தி­யா­ச­மான வழி­மு­றை­க­ளில் கணக்­கு­க­ளுக்கு விடை தேட முயன்­றார்.

இந்­திய பாரம்­ப­ரிய முறை கணி­தத்­தைக் கையாண்டு, புதிர்­க­ளுக்கு எளி­மை­யான தீர்­வு­கள் கண்­டார். இது, அவரை சாத­னை­யா­ளர் பட்­டி­ய­லில் இடம்­பி­டிக்க வைத்­துள்­ளது.

அவர் கூறி­ய­தா­வது: கணி­தத்­தில் முது­நிலை பட்­டம் பெற்று, தமி­ழக பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ராக சேர்ந்­தேன்.

இந்­திய பாரம்­ப­ரிய முறை கணி­தத்­தில் கவ­னம் செலுத்­தி­னேன். இந்த முறை­யில் கணித புதிர்­களை எளி­தில் புரிந்து கொள்ள முடி­யும். எப்­ப­டிப்­பட்ட சிக்­க­லான கணக்கு புதிர்­க­ளுக்­கும், விடை காண முடி­யும். இதில் தீவி­ர­மாக ஆராய்ச்சி செய்து வந்­தேன்.

அப்­போது தான், சீனா­வில் அரசு பள்­ளிக்கு, கணித ஆசி­ரி­யர் தேவை என்ற விளம்­ப­ரம் கண்­ணில் பட்­டது. எனக்கு ஆங்­கில மொழி தான் தெரி­யும்; சீன­மொழி தெரி­யாது. நம்­பிக்­கை­யு­டன் அந்த பணிக்கு விண்­ணப்­பித்­தேன்; என்னை தேர்வு செய்­த­னர்.

சீனா­வில் சிஸ்­வான் மாகா­ணம், சென்ங்கு பகு­தி­யில், 'ஷிஷி' என்ற அரசு பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ராக சேர்ந்­தேன். இந்­திய பாரம்­ப­ரிய முறை­யில், கணக்­கு­க­ளுக்கு விடை காண கற்­றுக் கொடுத்­தேன்.

இந்த முறையை, குறும்­பு­மிக்க மாண­வர்­க­ளும் ஆர்­வ­மு­டன் கற்­ற­னர். இத­னால், அனை­வ­ரும் விரும்­பும் ஆசி­ரி­ய­ரா­னேன்.

என் திற­மை­யைக் கண்ட சீன அரசு கல்­விக்­குழு, சிறந்த வெளி­நாட்டு ஆசி­ரி­ய­ருக்­கான விருதை, இரண்டு முறை வழங்கி கவு­ர­வித்­தது.

இந்­தி­யா­வில், மருத்­து­வரை கட­வு­ளாக பார்ப்­பது போல, ஆசி­ரி­யர்­க­ளை­யும், கட­வு­ளாக பார்க்­கின்­ற­னர் சீனர்­கள்.

இந்­திய கல்வி நிறு­வ­னங்­க­ளில், பாரம்­ப­ரிய முறை­யில் கணி­தம் கற்­றுக் கொடுக்­கப்­பட வேண்­டும் என்­பது என் விருப்­பம். இந்த முறையை, சீன மாண­வர்­களே ஆர்­வத்­து­டன் கற்­கும் போது, இந்­திய மாண­வர்­க­ளும் சாதிக்க முடி­யும்.

இவ்­வாறு, ஆசி­ரி­யர் ஐசக் தேவ­கு­மார் கூறி­னார்.Trending Now: