சிற்­பி­யின் நுட்­பம்!

04-09-2019 05:23 PM

ஜித்­தா­பூர் நாட்டை, மன­சே­கன் என்ற மன்­னர் ஆண்டு வந்­தார்; அவ­ருக்கு, தன்­னைப் போல் ஒரு உரு­வச்­சிலை வடித்து, அரண்­மனை கலை மண்­ட­பத்­தில் வைக்க ஆசை ஏற்­பட்­டது.

அந்த பணியை சிறப்­பாக முடிக்­கும், திறமை மிக்க சிற்­பியை தேடி கண்­டு­பி­டிக்க, அமைச்­ச­ருக்கு உத்­த­ர­விட்­டார்.

அமைச்­சர் நம்­பிக்­கை­யு­டன், 'மன்னா... வெகு சீக்­கி­ரமே சிற்­பி­யைக் கண்­ட­றிந்து, உங்­கள் ஆவ­லைப் பூர்த்தி செய்­கி­றேன்...' என்­றார்; மகிழ்ச்­சி­ய­டைந்­தார் மன்­னர்.

நாட்­டில் உள்ள சிற்­பி­களை வர­வ­ழைத்த அமைச்­சர், 'உங்­க­ளில் சிறப்­பாக பணி­யாற்­று­ப­வரை அறிய, ஒரு போட்டி வைக்­கப் போகி­றேன். அதில் வெற்றி பெறு­ப­வரே, மன்­ன­ரின் உரு­வத்தை சிலை­யாக வடிக்க தகு­தி­யா­ன­வர்...' என்­றார்.

போட்­டிக்கு தயா­ரா­யி­னர் சிற்­பி­கள்.

'ஒரு நொடி­யில், குதிரை சிலையை வடிக்க வேண்­டும்...' என்று உத்­த­ர­விட்­டார் அமைச்­சர். திடுக்­கிட்ட சிற்­பி­கள், 'இதென்ன... ஒரு நொடி­யில் குதிரை சிலையை வடிப்­பதா... குறிப்­பிட்ட கால அவ­கா­சம் எடுத்து தான் சிலையை வடிக்க முடி­யும்; அது­வும், மாதங்­கள் பல ஆக­லாம்; உங்­கள் உத்­த­ர­வுப்­படி எல்­லாம் சிற்­பம் வடிக்க முடி­யாது...' என்­ற­னர்.

அந்த கூட்­டத்­தில், சிற்பி மரு­த­முத்து மட்­டும், அமைச்­ச­ரின் அரு­கில் வந்து, 'நான் உளி எடுத்து வந்­தி­ருக்­கி­றேன்; சிலை வடிக்க ஏற்ற கல்லை காட்­டுங்­கள்; நொடி­யில் குதிரை சிலை வடிக்­கி­றேன்...' என்­றான்.

மற்ற சிற்­பி­க­ளும், அமைச்­ச­ரும் ஆச்­ச­ரி­ய­ம­டைந்­த­னர்.

உளி, சுத்­தி­யு­டன், கல்­லின் அருகே சென்ற மரு­த­முத்து, 'அமைச்­சரே... நேரத்தை கணக்­கிட்­டுக் கொள்­ளுங்­கள்...' என்­றான். சற்­று­நேர மவு­னத்­துக்கு பின், கைய­சைத்து, உத்­த­ர­விட்­டார் அமைச்­சர்.

உடனே, உளி­யால், கல்­லில், இரண்டு புள்­ளி­கள் வைத்து, கண் போன்ற அமைப்பை ஏற்­ப­டுத்­தி­னான் மரு­த­முத்து.

பணியை, நொடிக்­குள் முடித்து, 'அமைச்­சரே... எந்த உரு­வத்­திற்­கும், உயி­ரி­னத்­திற்­கும் கண் தான் முக்­கி­யம்; சிற்­பி­கள் வடிக்­கும் சிலைக்­கும், உயிர் கொடுப்­பது கண்­கள் தான். இந்த கல்­லில், குதி­ரை­யின் கண்­களை வடித்து விட்­டேன்; குதி­ரைக்கு உயிர் கொடுத்து விட்­டேன்...

'உங்­கள் பார்­வைக்கு வேண்­டு­மென்­றால், இது கல்­லா­கத் தெரி­ய­லாம். ஆனால், சிற்ப சாஸ்­தி­ரத்­தின் அடிப்­ப­டை­யில், உயி­ருள்ள கண்­கள் பெற்­றுள்­ள­தால், இது குதிரை சிற்­பம் தான்...' என்று, சாமர்த்­தி­ய­மாக கூறி­னான்.

அனைத்து சிற்­பி­க­ளும் வியப்­ப­டைந்­த­னர்; மரு­த­முத்­து­வின் அறி­வுத் திறனை பாராட்­டி­னர்.

'மற்­ற­வர்­க­ளைப் போல், முடி­யாது என்று கூறா­மல், துணிந்து, மதி நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­திய மரு­த­முத்து, தலை சிறந்த சிற்­பி­யா­கத்­தான் இருக்க முடி­யும்' என்று முடிவு செய்­தார், அமைச்­சர்.

அப்­போது அங்கு வந்த மன்­ன­ரி­டம், விவ­ரங்­களை கூறி­னார் அமைச்­சர். ஆச்­ச­ரி­ய­ம­டைந்த மன்­னர், சிலை வடிக்­கும் பொறுப்பை, அந்த சிற்­பி­யி­டமே ஒப்­ப­டைத்­தார். அப்­ப­ணியை சிறப்­பாக முடித்து பாராட்­டும், பரி­சு­க­ளும் பெற்­றான் மரு­த­முத்து.

குட்­டீஸ்... எந்த செய­லை­யும் செய்ய வழி­மு­றை­கள் உண்டு. முடி­யாது என்று ஒதுங்­கிச் செல்ல கூடாது; தன்­னம்­பிக்­கை­யு­டன் நிறை­வேற்ற முயற்சி செய்ய வேண்­டும்... சரியா!Trending Now: