தெரிஞ்சுக்கோங்க...!

04-09-2019 05:15 PM

பல் ஈறுகளில் பிரச்னை, தொண்டையில் டான்சில், வயிறு உபாதை, நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக தொல்லை, போதை பழக்கம் உள்ளிட்ட காரணங்களால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

இதை போக்க, தினமும் இரு வேளை பல் துலக்க வேண்டும். பல் ஈறுகளை மசாஜ் செய்து, நாக்கை சுத்தம் செய்வது அவசியம். நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். உணவுக்குப் பின் வாயை, நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு, வாயில் வினோத வாசனை வந்தால், உடனே, மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். வயிறு உபாதைகளுக்கு, உரிய மருத்துவம் செய்து கொண்டால், வாய் துர்நாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.Trending Now: