அஜீத் அங்க்­கி­ளோடு நடிக்­க­ணும்! – ‘மைனா’ எம். திவ்­ய­தர்­ஷனி

03-09-2019 06:00 PM

சுஜி­தாவை போலவே கைக்­கு­ழந்­தை­யாக இருக்­கும்­போதே (ஐந்து மாதங்­கள்) சீரி­யல் கேமரா முன்­னால் வந்­து­விட்­டார்  பேபி எம். திவ்­ய­தர்­ஷனி. அத­னா­லேயோ என்­னவோ, “கேமரா முன்­னாடி நிக்­கும்­போது உனக்கு எப்­படி இருக்­கும்? பயமா இருக்­குமா?” என்று நாம் விளை­யாட்­டுத்­த­ன­மாக பாப்­பா­வி­டம் கேட்க, “இல்லை இல்லை.... கேமரா முன்­னாடி நிக்­கும்­போது ரொம்ப கேஷு­ய­லாக இருப்­பேன். எதுக்கு பயப்­ப­ட­ணும்?” என நம்­மையே திருப்­பிக் கேட்­டது அந்த மைனாக்­குஞ்சு. அது வேறு யாரு­மல்ல, “மைனா” (கலர்ஸ்  தமிழ்) சீரி­ய­லின் கதா­நா­யகி, திவ்­ய­தர்­ஷனி.

சென்­னையை அடுத்த குன்­றத்­தூ­ரில் வசித்து வரும் திவ்­ய­தர்­ஷ­னியை சந்­தித்­தோம். பேட்­டி­யின்­போது அவ­ரு­டைய பெற்­றோ­ரும் உட­னி­ருந்­த­னர்.

“நான் குன்­றத்­தூர்ல இருக்­கிற அன்னை பூர்­ணம் நர்­சரி அண்ட் பிரை­மரி ஸ்கூல்ல 4த் ஸ்டாண்­டர்ட்  (4ம் வகுப்பு) ‘பி’ செக்­க்ஷன் படிக்­கி­றேன். என்­னோட அப்பா பேரு, எஸ். மாணிக்­கம். அம்மா பேரு, உமா. ஜீவிதா, அனு­ஸ்ரீன்னு எனக்கு ரெண்டு அக்­காங்க இருக்­காங்க. ஜீவிதா 10த் ஸ்டாண்­டர்­டும் அனுஸ்ரீ 9த் ஸ்டாண்­டர்­டும் படிக்­கி­றாங்க. நாங்க  ‘உமா கார்­மண்ட்ஸ்’ங்­கிற பேர்ல டெய்­ல­ரிங் கம்­பெ­னியை சொந்­தமா நடத்­திக்­கிட்டு வர்­றோம். அம்மா கூட மூணு படங்­கள்­ல­யும், பத்து சீரி­யல்­கள்­ல­யும் நடிச்­சி­ருக்­காங்க. ஆனா, அவங்க இப்போ நடிக்­கி­ற­தில்லே.

நான் ஒரு கைக்­கு­ழந்­தையா இருக்­கும்­போதே ‘கல்­யாணி’ சீரி­யல்ல நடிக்க ஆரம்­பிச்­சிட்­டேன். அப்­பு­றம் ‘மகள்,’ ‘செல்­லமே,’ ‘தாமரை,’ ‘மவுன ராகம்,’ ‘லட்­சுமி வந்­தாச்சு,’ ‘முந்­தானை முடிச்சு,’ ’வாணி ராணி,’ ‘என் இனிய தோழி’  இந்த சீரி­யல்­கள்ல எல்­லாம் வரி­சையா நடிச்­சி­ருக்­கேன். இதிலே ‘மகள்,’ ‘செல்­லமே,’ மவுன ராகம்,’ ‘தாமரை,’ ‘என் இனிய தோழி’ இந்த சீரி­யல்­கள்ல துரூ – அவுட் கேரக்­டர்ல (சீரி­யல் முழுக்க வரு­வது) நடிச்­சேன். இதை தவிர, சமீ­பத்­திலே ‘குரு­தி­யாட்­டம்’ படத்­தி­லே­யும் நடிச்­சி­ருக்­கேன். அதர்வா அங்க்­கிள்­தான் ஹீரோ. அவ­ரோட பிரண்டா துரூ – அவுட் கேரக்­டர்ல நடிச்­சி­ருக்­கேன். ரிலீ­சாக போகுது. இப்­போ­தைக்கு ‘மைனா’ சீரி­யல்ல மட்­டும் நடிச்­சுக்­கிட்டு இருக்­கேன்.

‘மைனா’­­­­விலே ஒரு எம்­எல்­ஏ­வையே தைரி­யமா எதிர்க்­கிற ஒரு ஏழை பொண்ணா நடிக்­கி­றேன். ஒரு குறிப்­பிட்ட ஜனங்­களை அடி­மை­களா வச்­சி­ருப்­பாங்க. அவங்­க­ளோடு என்­னை­யும் என் அப்பா – அம்­மா­கிட்ட இருந்து பிரிச்சு, ‘அடி­மை’ன்னு என் கையிலே முத்­திரை வேற குத்­தி­டு­வாங்க.  நான் மட்­டும்­தான் சின்ன பிள்­ளையே! ஏன் என்னை அப்பா – அம்­மா­கிட்ட இருக்­க­வி­டாம பண்ணி இப்­படி கடத்தி, அடி­மையா வச்­சி­ருக்­கீங்­கன்னு  கேப்­பேன். அதோட தொடர்ச்­சியா, சில விஷ­யங்­களை வெளிப்­ப­டையா இல்­லாம சைலண்ட்டா செய்­வேன்.  

இதிலே நடிக்­கி­றது ரொம்ப ஜாலியா இருக்கு. நான் நல்லா நடிக்­கி­றேன்னு என் பிரண்ட்ஸ் எல்­லா­ரும் சொல்­றாங்க. மழை சீன்ல நான் நனை­யி­றதை பார்த்­துட்டு என் அக்­காங்க ரெண்டு பேரும் அழு­துட்­டாங்க. இந்த இடத்­திலே நல்லா நடிச்­சி­ருக்கே, அந்த இடத்­திலே இன்­னும் நல்லா நடிச்­சி­ருக்­க­ணும் இப்­ப­டி­யெல்­லாம் என் அப்­பா­வும் அம்­மா­வும் நிறை, குறை­களை சுட்டி காட்­டு­வாங்க. அது என் நடிப்பை இம்ப்­ரூவ் பண்­ற­துக்கு ரொம்ப ஹெல்ப்­புல்லா இருக்கு. ‘தாம­ரை’­­­­யிலே நீலிமா ராணி ஆண்ட்­டி­யோட அக்கா பொண்ணு ‘குஷி’ங்­கிற கேரக்­டர் பேர்ல நடிச்­சி­ருந்­தேன். அதை வச்சு என்னை எல்­லா­ரும் ‘குஷி’ன்னே கூப்­பி­டு­வாங்க. இப்போ என்னை எல்­லா­ரும் ‘மைனா’ன்­னு­தான் கூப்­பி­டு­றாங்க.

‘செல்­லமே,’ ‘லட்­சுமி வந்­தாச்சு’ சீரி­யல்­கள்ல நடிச்­ச­துக்கு ‘சிறந்த குழந்தை நட்­சத்­தி­ர’த்­துக்­கான அவார்­டு­களை வாங்­கி­யி­ருக்­கேன். அது எனக்கு பெரிய ஊக்­கத்தை கொடுத்­தி­ருக்கு. ப்ரீயா இருக்­கும்­போது ஸ்விம்­மிங், டிரா­யிங், பெயிண்ட்­டிங் பண்­ணு­வேன். ஸ்கூல்ல ரன்­னிங் ரேஸ், பில் த பாட்­டில் இதெல்­லாம் விளை­யாடி நிறைய பிரை­செல்­லாம் வாங்­கி­யி­ருக்­கேன்.

அஜீத் அங்க்­கிளை ரொம்ப பிடிக்­கும். அந்த அங்க்­கி­ளோடு நடிக்­க­ணும்னு ஆசைப்­ப­டு­றேன்.”

(எம். திவ்­ய­தர்­ஷனி தலை­மை­யில், திரு­வண்­ணா­மலை மாவட்­டம், செங்­கம் வட்­டம், பர­ம­னந்­தல் செல்­லும் சாலை­யில் திவ்ய ஜீவிதா அனுக்­கி­ரக சாய்­பாபா கோயி­லும், குபே­ரன் கோயி­லும் கட்­டப்­பட்டு வரு­வ­தாக அவ­ரது பெற்­றோர் தெரி­வித்­த­னர்.)

         – ம. வான­மு­தன்