கற்றது கையளவு!

03-09-2019 05:58 PM

‘கற்­றது கைய­ளவு’ கலை­ஞர் டிவி­யில் திங்­கள் –- வெள்ளி காலை 10 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. இந்த நிகழ்ச்சி இயற்கை சமை­ய­லின் நன்­மை­களை எடுத்­துச் சொல்­லும் ஆரோக்­கிய நிகழ்ச்­சி­யாக உரு­வாகி உள்­ளது. யூ டியூ­பில் பிர­ப­ல­மான இந்த நிகழ்ச்­சியை பாண்டி முரு­கன் உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்.

என்­ன­தான் ஓட்­ட­லுக்கு போய் விரும்­பிய உணவை சாப்­பிட்­டா­லும், நாம் விரும்­பு­வதை வீட்­டி­லேயே சமைத்து சாப்­பி­டு­வ­தில்­தான் நமது ஆரோக்­கி­ய­மும், மகிழ்ச்­சி­யும் அடங்­கி­யி­ருக்­கின்­றன. உண­வில் சத்து ஒரு புறம் இருந்­தா­லும், மண­மும் சுவை­யுமே நம்மை சாப்­பிட துாண்­டு­கின்­றன.

தொழில்­நுட்ப மாற்­றத்­திற்கு ஏற்ப, மக்­க­ளும் மாறி வரும் இந்த நேரத்­தில் நமது கலா­சா­ரத்தை நினை­வு­ப­டுத்­தும் வித­மாக ஒளி­ப­ரப்­பாகி வரு­கி­றது. இதில், மண்­சட்டி, விறகு உள்­ளிட்ட பல்­வேறு பொருட்­களை வைத்து, முழுக்க முழுக்க இயற்கை முறை­யி­லேயே உணவு சமைக்­கப்­ப­டு­கி­றது.

Trending Now: