கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி: தோனியின் சாதனையை முறியடித்தார் கோலி

03-09-2019 05:39 PM

கிங்ஸ்டன்

அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றதுடன், மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றி அசத்தியது

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 

கேப்டன் பொறுப்பில் அதிக வெற்றிகளைப் பெற்ற தோனியின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி, கேப்டன் பொறுப்பில் 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். 

விராட் கோலி 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த பட்டியலில் 12 வெற்றிகளுடன் கங்குலி 3வது இடத்திலும், 14 வெற்றிகளுடன் முகமது அசாருதீன் 4வது இடத்திலும் உள்ளனர்.

உலக அளவில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்மித் (53 வெற்றி) பெற்றுள்ளார். 

48 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Now: