சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 2–9–19

03-09-2019 02:55 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

திங்களன்று சந்தைகள் மிகவும் ஒரு மந்தமான நிலையில் ஆரம்பித்தன. ஆனால் அதன் பிறகு சிறிது சூடு பிடித்து அதன் முதல் வார வெள்ளிக்கிழமை இறுதியாக அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்புகளை வைத்து சந்தை அன்றைய தினம் ஒரு பெரிய உயர்வில் அன்று முடிவடைந்தது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாள்களில் எதிர்க்கவில்லை என்பது ஒரு வருத்தமான செய்திதான்.

பொருளாதார மந்தம்

பல கம்பெனிகளில் வேலையாட்களை குறைக்கப்படுதல், ஜி.டி.பி. ஜுன் காலாண்டில் 5 சதவீதம் என்று வெளிவந்த செய்திகள் சந்தைகளை திங்களுக்கு பிறகு சந்தைகளை அசைத்துப் பார்த்தன.

சந்தைகள் தாங்க முடியாத செய்திகள்

சி.ஜி. பவர், இக்ரா ஆகிய கம்பெனிகள் கார்ப்பரேட் கவர்னன்ஸ் சரியாக இல்லாததால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மாருதி சுமார் மூவாயிரம் தற்காலிக ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. டி ஹெச் எஃப் எல் கம்பெனி முன்பே தடுமாறிக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

சித்தார்த்வின் இறப்பிற்குப் பிறகு கபே காபி டே தடுமாறிக் கொண்டிருக்கிறது. பல வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன்கள் திரும்பி வருமா என்று என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.  சிஜி பவர், கபே காபி டே ஆகிய கம்பெனிகளுக்கு கொடுத்த கடன்கள் திரும்பி வருமா என்ற நிலை இருப்பதால் யெஸ் பாங்க் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து தலைமை அதிகாரி வெளியேறியது ஒரு ஷாக்கான செய்தி. இதனால் அந்த வங்கியுடன் இணைக்கவிருந்த இந்தியா புல்ஸ் கம்பெனியின் பங்குகள் சந்தையில் பலமாக விழுந்தன.

என்.சி.டி.

சந்தைகளில் பல என்.சி.டி.க்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக என்பிஎப்சி கம்பெனிகள் பல நான்-கன்வெர்ட்புள் டிபென்சர்களை  வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தாலும் முதலீடுகள் குறைவாக இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம் ஆகும். முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இருக்க விரும்புகிறார்கள். ஆகவே வருமானம் குறைவாக கிடைத்தாலும் வங்கிகளில் தங்கள் பணம் பத்திரமாக இருந்தால் போதும் என்று நினைக்கும் நிலை வந்துவிட்டது. காரணம் பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான வருமானங்களை தராது தான்.

பத்து வங்கிகள் நான்கு வங்கிகளாகின்றன

ஒருபுறம் புதிய வங்கிகளுக்கு அரசாங்கம் லைசென்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வெள்ளி சந்தை நேரத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி 10 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 4 வங்கிகளாக மாற இருக்கின்றன.

இது நல்ல விஷயம் என்னவென்று பார்த்தால் இந்திய வங்கிகள் உலக அளவில் ஸ்ட்ராங்கான ஒரு நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். அது நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான ஒன்று. மேலும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி கூடுதல் மூலதனம், பல வங்கிகளுக்கு செல்லாமல் இணைக்கப் பட்டிருப்பதால் குறைந்த வங்கிகளுக்கு செல்லும். இதனால் இந்த நான்கு வங்கிகளில் மூலதனம் கூட வாய்ப்புகள் அதிகம்.

தங்கம்

ஹாங்காங், சீனா- அமெரிக்க பிரச்சனைகள், இந்திய சந்தைகள் சரிவு ஆகியவை தங்கத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றன. நாடுகளுக்கிடையே எப்போது பிரச்சனை இருந்தாலும் தங்கம் விலை கூடுவது எதிர்பார்த்தது தான். தங்கம் கடந்த பத்து வருடங்களில் பெரிய அளவு ரிட்டன்களை தராவிட்டாலும், கடந்த 6 மாதத்தில் நல்ல ரிட்டன்களை   தந்திருக்கிறது.

வெள்ளியன்று இறுதியாக

வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 263 புள்ளிகள்கூடி 37332        புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை  75 புள்ளிகள்கூடி  11023    புள்ளிகளுடனும் முடிவடைந்தன.  மும்பை பங்குச்சந்தையில் இது கடந்த வாரத்தை விட 631 புள்ளிகள் கூடுதாலகும். காரணம் கடந்த வாரம்  அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகள் ஆகும்.

அடுத்த வாரம் எப்படி இருக்கும்?

ஜிடிபி நம்பர் 5 சதவீதம் என்ற ஷாக்கான செய்தி சந்தைகளை அடுத்த வாரம் சந்தைகளை கீழே வைத்திருக்கும். ஏனெனில் ஜிடிபி நம்பர் 5.75 முதல் 6 சதவீதம் வரை இருக்கும் என நம்பப்பட்டது தான். சந்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.comTrending Now: