ஏற்­று­மதி உல­கம்: காட்டன் யார்ன் மற்றும் துணி ஏற்றுமதி குறைகின்றது

03-09-2019 02:50 PM

காட்டன் யார்ன் மற்றும் துணி ஏற்றுமதி ஏப்ரல் முதல் ஜுலை மாதத்தில் 24 சதவீதம் குறைந்திருக்கிறது. இது கடந்த 5 வருடத்தில் மிக குறைவான அளவாகும்.

காட்டன் யார்ன் ஏற்றுமதி கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. அதாவது மாதத்திற்கு 59 முதல் 60 மில்லியன் கிலோக்களாக  குறைந்திருக்கிறது.

சீனாவிற்கு ஏற்றுமதி பாதியாகவும், பங்களாதேஷ் மற்றும் கொரிய நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதி 38 மற்றும் 45 சதவீதம் குறைந்திருக்கிறது.

அதேசமயம் வியட்நாம் சீனாவிற்கு ஏற்றுமதியை 16% கூட்டியிருக்கிறது.

இந்த செட்டில் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் வட்டி சலுகைகளை. 3% வட்டிச் சலுகைகள் கொடுக்கப்படுமானால் இந்த செக்டார் இன்னும் முன்னேற வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது.

மீன் உற்பத்தியும், ஏற்றுமதியும்

இந்தியா உலக அளவில் மீன்கள் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது. 2018 19 வருடத்தில் 13.70 டன்கள்  மீன்களை  உற்பத்தி செய்துள்ளது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த விவசாய விளைபொருட்கள் ஏற்றுமதியில் மீன் ஏற்றுமதி 20 சதவீதம் வகிக்கிறது.

மீன் ஏற்றுமதி மூலமாக இந்தியாவிற்கு 7 பில்லியன் டாலர்கள் வருடத்திற்கு கிடைக்கிறது. உலக அளவில் மீன் ஏற்றுமதியில் இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது.

ஏற்றுமதிக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அந்த முயற்சிகளை செய்வதன் மூலம் இந்தியா உலக அளவில் முதல் இரண்டு இடங்களில் வரமுடியும்.

ஏற்றுமதிக்கான சலுகைகள்

உலக வர்த்தக அமைப்பின் முக்கிய கோரிக்கை என்னவென்றால் இந்தியா சலுகைகளை கொடுத்து ஏற்றுமதியை ஊக்கப்படுத்த

கூடாது என்பதுதான். இதனால் இந்தியா தற்போது நடுத்தர, சிறிய மற்றும் குறு நிறுவனங்களுக்கு கொடுத்து வரும் ஏற்றுமதி கடனுக்கான வட்டி சலுகைகள், எம் ஈ ஐ எஸ்., திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் சலுகைகள் ஆகியவற்றை நீக்கப்பட வேண்டும் என்பது உலக வர்த்தக மையத்தின் கோரிக்கை.

இந்த சலுகைகள் தொடரவேண்டும், அப்படி தொடராத பட்சத்தில் இவை வேறு வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கார் ஏற்றுமதி

கார் விற்பனை சரிந்து வருகிறது. காரணங்கள் என்னவென்று பார்த்தால் எலக்ட்ரிக் கார் வரப் போகின்றனவே

அவற்றை வாங்கலாம் என தள்ளிப்போடுவது ஒரு காரணம், நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக இருக்கிறது அதனால் தற்போது புதிய கார்கள் தேவையில்லை வாங்குவதை சிறிது தள்ளிப் போடலாம்  என்பதும் ஒரு காரணம். இதனால் கார் விற்பனைகள் குறைந்து வருகின்றன.

மாருதி சுசுகி கார் விற்பனை ஆகஸ்ட் மாத விற்பனை கடந்த வருடம் இதே மாதத்தோடு ஒப்பிடும் போது 33 சதவீதம் குறைந்திருக்கிறது.

ஏற்றுமதி என்று பார்க்கும்போது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 11 சதவீதம் குறைந்திருக்கிறது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆயிரத்து 489 கார்களை ஏற்றுமதி செய்திருக்கிறது,

அது இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 9352 கார்களாக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.