ஒரு பேனாவின் பயணம் – 222 – சுதாங்கன்

03-09-2019 02:49 PM

 


ஆனந்தபவன் !

என்  சிந்­த­னை­களை மறந்­தேன். உள்­ளத்­தில் கவலை குடி­கொண்­டது. உனக்கு எழு­தத் தொடங்­கிய கடி­தத்தை எடுத்து வைத்­து­விட்டு  நைனி சிறை­யி­னின்­றும் ஆனந்த பவ­னத்­துக்­குப் புறப்­பட்­டேன்.

 உன் தாத்தா நம்மை பிரிந்­த­போ­து­தான் அவ­ரு­டன் பத்து நாட்­கள் இருந்­தேன். அந்த பத்து நாட்­க­ளும் இர­வுப்­ப­க­லாக அவர் எம­னு­டன் போரா­டி­ய­தை­யும், அவர் பட்ட பொறுக்க முடி­யாத துன்­பத்­தை­யும் நாம் அரு­கி­லி­ருந்து பார்த்­துக் கொண்­டி­ருந்­தோம். அவர் உயிர் வாழ்ந்த காலத்­தில் எத்­த­னையோ போராட்­டங்­களை நடத்தி எத்­த­னையோ வெற்­றி­களை அடைந்­தி­ருக்­கி­றார். பணிந்து போவ­தென்­பது அவ­ருக்­குத் தெரி­யாது. கூற்­று­வன் எதிரே நின்­றும் அவர் அவ­னுக்­குப் பணிய மறுத்­தார்.  அவ­ரி­டத்­தில் பெரி­தாக அன்பு பூண்­டுள்ள நான் அவ­ரு­டைய துன்­பத்­தைக் குறைக்க என்­னால் ஒன்­றும் செய்ய முடி­ய­வில்­லையே என்ற ஏக்­கத்­து­டன் அவ­ரு­டைய கடைசி போராட்­டத்­தைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­த­போது நீண்ட நாட்­க­ளுக்கு முன் நாம் வாசித்த எட்­கார் ஆலன்போ கதை­யி­லுள்ள கீழ்­வ­ரும் வாக்­கி­யம் என் நினை­வுக்கு வந்­தது. ` தேவ­தூ­தர்­க­ளுக்­கும் சாவுக்­கும் கூட மனி­தன் தன்னை ஒப்­பு­விப்­ப­தில்லை. சித்­தத்­தில் உறுதி குன்­றிய பிற­கு­தான் அவன் அவர்­க­ளுக்கு ஆட்­ப­டு­கி­றான்.’

 பிப்­ர­வரி 6ம் தேதி அதி­கா­லை­யில் அவர் நம்மை விட்டு பிரிந்து சென்­றார். அவ­ரு­டைய உடலை, அவர் மிக­வும் அன்­பு­டன் போற்­றிய தேசி­யக் கொடி­யில் சுற்றி, லட்­சு­ம­ண­பு­ரி­யி­லி­ருந்து ஆனந்த பவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தோம். சில மணி நேரங்­க­ளில் அது வெந்து பிடி சாம்­ப­லாய்ப் போய்­விட்­டது. கங்­கா­தேவி அருமை வாய்ந்த அச்­சாம்­பலை ஏந்­திக் கொண்டு கடலை நோக்கி சென்­றாள்.

 பல கோடி மக்­கள் அவ­ருக்­காக துய­ருற்று வருந்­தி­னார்­கள். ஆனால், அவ­ரு­டைய எலும்­பும் சதை­யு­மா­கிய நம்­மைப் பற்றி என்ன சொல்­வது? நாம் அவ­ரு­டைய குழந்­தை­க­ளா­யி­ருப்­பது போலவே ஆனந்த பவ­ன­மும் அவர் அன்­பு­டன் போற்றி வளர்த்த குழந்­தை­யா­கும். அதைப் பற்றி  என்ன சொல்­வது? அது பொலி­வி­ழந்து புலம்­பு­கி­றது. அதன் உயிர் அதை விட்­டுப் போய்­விட்­டது போலி­ருக்­கி­றது. அதை சிருஷ்­டித்­த­வ­ரு­டைய ஆவி­யின் அமை­தி­யைக் குலைக்­கக்­கூ­டா­தென்று எண்ணி அதன் தாழ்­வா­ரங்­க­ளில் நாம் ஓசைப்­ப­டா­மல் நடந்து செல்­கி­றோம்.

 ஒவ்­வொரு நிமி­ஷ­மும் அவர் இல்­லையே என்­கிற துய­ரம் நம்­மைக் கவ்­வு­கி­றது. நாள் செல்ல செல்ல, துக்­கம் குறை­வ­தா­கக் காணோம். அவர் பிரி­வும் சிறி­தே­னும் சகிக்க கூடி­ய­தாக மாற­வில்லை. நாம் இவ்­வாறு துன்­பத்­தில் கலங்­கு­வதை அவர் விரும்­ப­மாட்­டா­ரென்று நினைக்­கி­றேன்.  அவர் தமக்கு நேர்ந்த இடுக்­கண்­களை எதிர்த்து நின்று வென்­றது போல நாமும் துக்­கத்­தைத் தவிர்த்து அவர் குறை­யாக விட்­டுச் சென்ற வேலை­யைத் தொடர்ந்து செய்ய வேண்­டு­மென்­ப­து­தான் அவர் விருப்­ப­மா­யி­ருக்­கும். இந்­திய சுதந்­தி­ரத்­துக்கு நாம் செய்­ய­வேண்­டிய பணி  நம்மை கைகாட்டி அழைக்­கும்­போது நாம் சோர்­வுற்று வீணே கலங்­கு­தல் அழகா?  இந்­திய சுதந்­தி­ரத்­துக்­கா­வன்றோ அவர் உயிர் நீத்­தார்? நாமும் அதற்­கா­கவே உயிர் வாழ்ந்து உழைத்து, அவ­சி­ய­மா­னால் உயி­ரைக் கொடுக்­க­வும்  செய்­வோம். நாமும் அவ­ரு­டைய குழந்­தை­கள்­தானே! அவ­ரு­டைய வீர­மும், வன்­மை­யும், உறு­தி­யும், அவர் உள்­ளத்­தில் கொழுந்­து­விட்­டெ­றிந்த நெருப்­பும் நம்­மி­டத்­தி­லும் கொஞ்­சம் இருக்­கும் அல்­லவா?

 நாம் எழு­தும்­போது கண்­ணுக்­கெட்­டிய தூரம் வரை­யில் நீல நிற­முள்ள அர­பிக்­க­டல் பர­வி­யி­ருக்­கி­றது. இந்­தப் பக்­கம் தொலை­விலே இந்­தி­யா­வின் கரை மறைந்து கொண்டே வரு­கி­றது. இந்த எல்­லை­யற்ற பெரு­வெ­ளி­யு­டன், நான் உனக்கு முந்­திய கடி­தங்­களை எழுதி வந்த நைனி சிறைக் கட்­ட­டத்­தை­யும் அதன் உயர்ந்த சுவர்­க­ளை­யும் ஒப்­பிட்­டுப் பார்க்­கி­றேன். இங்கு என் பார்வை வான­மும் கட­லும் சேரு­மி­டம் வரை­யில் செல்­கி­றது. சிறை­யில் கைதி­யைச் சுற்­றி­யி­ருக்­கும் சுவ­ரின் மேற்­பக்­கம் வரை­யில்­தான் அவ­னு­டைய பார்வை செல்ல முடி­யும். சிறை­யில் இருந்த எங்­க­ளில் பலர் இன்று வெளியே இருந்து சுதந்­தி­ரக் காற்­றைச் சுவா­சிக்­கி­றோம். ஆனால், எங்­க­ளு­டைய தோழர்­க­ளில் இன்­னும் பலர் பூமி­யை­யும், கட­லை­யும், பூமி­யும் ஆகா­ச­மும் சேரும் அடி­வா­னத்­தை­யும் பார்க்­க­மு­டி­யா­மல் சிறைக்­கூ­ டங்­க­ளில் வாடி வதங்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். பார­த­மா­தாவே இன்று சிறை­யில் இருக்­கி­றாள். சுதந்­தி­ரம் இன்­னும் கிட்­ட­வில்லை. இந்­தியா சுதந்­தி­ரம் பெறா­மல் நாம் மட்­டும் சுதந்­தி­ரம் பெற்று என்ன பயன்?

ஏப்­ரல் 22, 1931

  மும்­பை­யி­லி­ருந்து கொழும்­பு­வுக்கு நான் இந்த கிர­கோ­வியா கப்­ப­லில் பய­ணம் செய்­வது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. நாலு வரு­டங்­க­ளுக்கு முன் இதே கப்­ப­லில் வரு­கைக்­காக நான் வெனிஸ் நக­ரில் காத்­துக்­கொண்­டி­ருந்­தது எனக்கு நன்­றாக நினை­வி­ருக்­கி­றது. நான் சுவிட்­சர்­லாந்­திலே பெக்ஸ் நக­ரில் உள்ள உன்­னு­டைய பள்­ளிக்­கூ­டத்­தில் உன்னை விட்­டு­விட்டு, இக்­கப்­ப­லில் வந்து கொண்­டி­ருந்த உன் தாத்­தா­வைப் பார்க்­கச் சென்­றேன். இதற்­குச் சில மாதங்­க­ளுக்கு பிறகு இதே கப்­ப­லில் உன் தாத்தா ஐரோப்­பா­வி­லி­ருந்து  வந்­தார். அவ­ரைப் பார்க்க நான் மும்பை சென்­றி­ருந்­தேன். அந்­தத் தடவை அவ­ரு­டன் பிர­யா­ணம் செய்த சிலர் இன்று எங்­க­ளு­டன் பிர­யா­ணம் செய்­கி­றார்­கள். அவர்­கள் அவர்­க­ளைப் பற்­றிய கதை­களை ஓயா­மல் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

 கடந்த மூன்று மாதங்­க­ளில் நிகழ்ந்த மாறு­தல்­க­ளைப் பற்றி நேற்று எழு­தி­னேன். கடந்த சில வாரங்­க­ளில் ஒரு நிகழ்ச்­சியை நீ நினை­வில்  வைக்க வேண்­டும். இந்­தி­யா­வும் நெடுங்­கா­லம் வரை­யில் அந்­நி­கழ்ச்­சியை மறக்க முடி­யாது. கான்­பூ­ரில், இந்­தி­யா­வின் சிறந்த வீர­ரா­கிய  கணேச சங்­கர வித்­யார்த்தி என்­ப­வர் பிற­ரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் போது கொல்­லப்­பட்­டார். அவர் எனக்கு சிறந்த நண்­பர். தமக்­கென வாழாப் பிற­ருக்­கு­ரி­யா­ள­ரா­கிய அவ­ரு­டன் வேலை செய்­வதே ஒரு பாக்­கி­யம் என்று சொல்ல வேண்­டும். சென்ற மாதம் கான்­பூ­ரில் இந்­தி­யர்­கள் வெறி­கொண்டு ஒரு­வரை குத்­திக் கொன்­றார்­கள். கணேஷ்ஜி இந்த சண்­டை­யின் நடு­வில் குதித்­தார் – தன் நாட்­ட­வ­ரோடு சண்டை போடு­வ­தற்­காக அல்ல, அவர்­களை காப்­பாற்­று­வ­தற்­காக. நூற்­றுக்­க­ணக்­கான பேரை அவர் காப்­பாற்­றி­னார். ஆனால், தம்மை மட்­டும் அவ­ரால் காப்­பாற்­றிக்­கொள்ள முடி­ய­வில்லை. காப்­பாற்­றிக் கொள்­ள­வும் அவர் விரும்­ப­வில்லை. தான் காப்­பாற்­றப் புகுந்­த­வர்­க­ளின் கையி­னா­லேயே அவர் மர­ண­ம­டைந்­தார். கான்­பூர் நக­ர­மும் நமது மாகா­ண­மும் ஒரு அரிய மணியை இழந்­து­விட்­டன. ஆனால் அவ­ரு­டைய மர­ணத்­தின் சிறப்பை நான் என்­னென்­பேன். ஜனங்­க­ளின் வெறியை அவர் கலங்­கா­மல் எதிர்த்து நின்­றார். ஆபத்­தும் மர­ண­மும் அவ­ரைச் சூழ்ந்து நின்ற சம­யத்­தி­லும் அவர் பிற­ரைக் காப்­ப­தி­லேயே முனைந்து நின்­றார்.

  மாறு­தல்­கள் நிறைந்த மூன்று மாதங்­கள்! கால வெள்­ளத்­தில்  இதை ஒரு துளி என்று சொல்­ல­லாம். ஒரு தேசத்­தின் வாழ்க்­கை­யில் இதை ஒரு நொடி என்று சொல்­ல­லாம். மூன்று வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் சிந்து மாகா­ணத்­தில் சிந்­து­ந­திப் பள்­ளத்­தாக்­கி­லுள்ள மொகஞ்­ச-­­­தாரோ அழி­வு­க­ளைக் காணச் சென்­றேன்.  நீ என்­னு­டன் அங்கு வர­வில்லை.  5 ஆயி­ரம் வரு­டங்­க­ளுக்கு முன் நிரூ­மா­ணிக்­கப்­பட்ட ஒரு நக­ரம் செங்­கல்­லி­னால் கட்­டப்­பட்ட பல வீடு­க­ளோ­டும் அகன்ற வீதி­க­ளோ­டும்  பூமி­யில் கர்ப்­பத்­தி­லி­ருந்து வெளி­வந்து கொண்­டி­ருப்­பதை நான் அங்­குக் கண்­டேன். இப்­பு­ரா­தன நக­ரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட அழ­கிய  நகை­க­ளை­யும் பாத்­தி­ரங்­க­ளை­யும் பார்த்­தேன். ஆட­வ­ரும் பெண்­டி­ரும் நல்ல ஆடை பர­ணங்­களை அணிந்து கொண்டு பெரிய வீதி­க­ளி­லும் சிறிய தெருக்­க­ளி­லும் மேலும் கீழும் நடந்து  செல்­கி­றார்­கள். குழந்­தை­கள் தங்­கள் இயற்­கைக்­கேற்ப, விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கின்­றன. கடை­வீ­தி­க­ளில் பண்­டங்­கள் குவித்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஜனங்­கள் விற்­க­வும் வாங்­க­வும் செய்­கி­றார்­கள். கோயில் மணி­கள் ` டணார் டணார்’ என்று சப்­திக்­கின்­றன. இக்­காட்­சியை என் கற்­ப­னை­யிலே கண்­டேன்.

 இங்கு 5 ஆயி­ரம் ஆண்­டு­க­ளாக இந்­தியா தன் வாழ்க்­கையை நடத்தி வந்­தி­ருக்­கி­றது. பல மாறு­தல்­களை அது பார்த்­தி­ருக்­கி­றது. இதைப் பற்றி நான் சில சம­யங்­க­ளில் இவ்­வாறு நினைத்து

இறு­மாப்பு  எய்­து­வ­துண்டு. கணக்­கற்ற காலம் வாழ்த்­தும் மாறாத இள­மை­யோ­டும் கட்­ட­ழ­கோடு விளங்­கும் நமது தாய் அவ­ளு­டைய குழந்­தை­க­ளின் பொறு­மை­யின்­மை­யைக் கண்டு நீர்க்­கு­மிழி போன்று இன்று தோன்றி நாளை மறை­யும் அவர்­க­ளு­டைய இன்ப துன்­பங்­க­ளைக் கண்­டும் புன்­மு­று­வல்

பூப்­பா­ளல்­லவா?

 ‘தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்­திடு

 சூழ்­கலை வாணர்­க­ளும் – இவள்

 என்று பிறந்­த­வள் என்­று­ண­ரத

 இயல்­பி­ன­ளாம் எங்­கள் தாய் !

 யாரும் வகுத்­த­தற்­க­ரிய பிரா­யத்­தள்

 ஆயி­னுமே எங்­கள் தாய் – இந்­தப்

 பாரும் இந்­நா­ளும் ஒரு கன்­னிகை என்­னைப்

 பயின்­றி­டு­வாள் எங்­கள் தாய்’

                – பார­தி­யார்

மார்ச் 26,1932

 கடந்த கால சரித்­தி­ரத்­தைப் பற்றி நைனி சிறை­யி­லி­ருந்து நான் உனக்கு எழு­திப் பதி­னான்கு மாதங்­கள் ஆகி­விட்­டன. மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு அர­பிக் கட­லி­லி­ருந்து இரண்டு சிறு கடி­தங்­கள் எழு­தி­னேன். நாம் அப்­பொ­ழுது `கிர­கோ­வியா ‘ கப்­ப­லில் இலங்­கைக்கு பிர­யா­ணம் செய்து கொண்­டி­ருந்­தோம். நான் எழு­திக்­கொண்­டி­ருந்­த­போது சுற்­றி­லும் பர­வி­யி­ருந்த கடற்­காட்­சியை கண்­க­ளால் பரு­கி­னேன். ஆனால் முழு­வ­தும் பருக ஆற்­றா­த­வ­னா­னேன். பிறகு இலங்­கையை அடைந்­தோம்.  ஒரு மாதம்  இன்­ப­மா­கப் பொழு­தைப் போக்கி நமது துய­ரத்தை மறக்க முயன்­றோம். தீவு­க­ளுக்­கெல்­லாம் அர­சி­யாக விளங்­கும் அவ்­வ­ழ­கிய தீவில் பல இடங்­க­ளுக்­கும் சென்று அதன் மிகு­தி­யான  இயற்கை வனப்­பைக் கண்டு ஆச்­ச­ரி­ய­ம­டைந்­தோம். பழம் பெரு­மை­யின் சின்­னங்­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் தன்­ன­கத்தே கொண்டு விளங்­கும் கண்டி, நூரா­ல­யம், அனு­ரா­த­பு­ரம் முத­லிய நாம் சென்ற இடங்­க­ளை­யும் நினைத்­துப் பார்க்க எவ்­வ­ளவு இன்­ப­மா­யி­ருக்­கி­றது. ஆனால் எல்­லா­வற்­றிற்­கும் மேலாக குளிர்ச்சி பொருந்­திய அந்­தக் காடு­களை நினைக்க நினைக்க எனக்கு ஆனந்­தம் பொங்­கு­கி­றது. ஜீவ­வே­கம் ததும்­பிக் கொண்­டி­ருக்­கும் அக்­காடு நம்மை ஆயி­ரம் கண் கொண்டு பார்ப்­பது போலி­ருக்­கி­றது. சிறுத்து நீண்டு நேராக வளர்ந்­தி­ருந்த கழுகு மரங்­க­ளின் அழ­கு­தான் என்னே!  அடர்ந்த தென்­னந்­தோப்­புக்­களை ஒரு நாள் முழு­வ­தும் பார்த்­துக் கொண்­டி­ருக்­க­லாமே. தென்னை மரங்­க­ளில் விளிம்பு பெற்ற கடற்­க­ரை­யில் பசுமை, கட­லில் நீலத்­தை­யும் கலந்து மயக்­கும் அழ­கு­தான் என்னே! அலை எற்றி நுரை கக்கி இசைக்­கும்  பாட்­டி­லும் தென்னை ஓலை­க­ளின் இடையே புகுந்து காற்று ஒலிக்­கும் பாட்­டி­லும் யாரே மனத்தை பறி­கொ­டா­மல் இருக்க முடி­யும்?

 உஷ்­ணப் பிர­தே­சத்­தி­லுள்ள ஒரு இடத்­திற்கு நீ வந்­தது அது­தான் முதல் தடவை. நான் அதற்கு முன்பு ஒரு தடவை போய்ச் சில காலம் தங்­கி­யி­ருந்­தே­னா­யி­னும் அது சரி­யாக எனக்கு ஞாப­கம் இல்­லா­த­தால் எனக்கு அதுவே முதல் அனு­ப­வ­மா­கும். அங்­குள்ள உஷ்­ணத்­தைக் கண்டு பயந்து நான் போவது கிடை­யாது. கட­லும் மலை­யும் எல்­லா­வற்­றிற்­கும் மேலா­கப் பனி­யும் பனி­வ­ரை­க­ளுமே என் உள்­ளத்­தைக் கொள்ளை கொண்­டவை. ஆனால் நான் இலங்­கை­யில் சில காலமே தங்­கி­யி­ருந்­தா­லும் உஷ்­ணப் பிர­தே­சத்­தின் அழ­கிலே மயங்கி மீண்­டும் சென்று அத­னு­டன் நட்­புக் கொள்ள வேண்­டு­மென்­னும்  எண்­ணத்­தோடு திரும்பி வந்­தேன்.

 இலங்­கை­யில் சந்­தோ­ஷ­மா­கப் போக்­கிய அந்த ஒரு மாத­மும் சீக்­கி­ரத்­தில் கழிந்­து­விட்­டது போலி­ருந்­தது. அங்­கி­ருந்து குறு­கிய கட­லைக் கடந்து, இந்­தி­யா­வின் தெற்கு முனைக்கு வந்து சேர்ந்­தோம். பர­மேஸ்­வரி என்­றும் கன்­னி­யாக வீற்­றி­ருந்து காவல் புரி­வ­தா­கச் சொல்­லப்­ப­டும் கன்­னி­யா­கு­ம­ரிக்கு  நாம் சென்­றது உனக்கு நினை­வி­ருக்­கி­றதா? நம் நாட்­டுப் பெயர்­க­ளைத் திரித்­தும் கெடுத்­தும் கூறு­வ­தில் தேர்ந்த மேல்­நாட்­டார் கும­ரி­மு­னையை `` கேப் காம­ரின்’ என்று அழைக்­கி­றார்­கள். அன்று நாம் சாட்­சாத் பாரத மாதா­வின் பாதத்­த­டி­யில் உட்­கார்ந்து அர­பிக் கட­லும் வங்­காள விரி­கு­டாக் கட­லும் ஒன்­றை­யொன்று கலந்து மரு­வு­வ­தைக் கண்டு இரண்­டும் பாரத தாய்க்கு வணக்­கம் செலுத்­து­கின்­றன என்று கற்­பனை செய்து ஆனந்­தம் அடைந்­தோ­மல்­லவா? அவ்­வி­டத்­திலே ஆச்­ச­ரி­ய­மான அமைதி பர­வி­யி­ருந்­தது. உடனே இந்­தி­யா­வில் தென் கோடி­யி­லி­ருந்து சில ஆயி­ரம் மைல்­க­ளுக்­கப்­பா­லுள்ள வட­கோ­டிக்கு என் மனம் பறந்து சென்று இம­ய­ம­லை­யின் பனி மூடிய சிக­ரத்­தை­யும் அங்­கும் அமைதி குடி கொண்­டி­ருப்­ப­தை­யும் எண்­ணிப் பார்த்­தது. ஆனால் இவ்­விரு சாந்­த­மான பிர­தே­சங்­க­ளுக்கு இடையே உள்ள இடத்­தில் எவ்­வ­ளவு போராட்­டம்! எவ்­வ­ளவு, துன்­பம் எவ்­வ­ளவு வறுமை.

 கும­ரி­மு­னையை விட்டு வடக்கே பய­ணப்­பட்­டுத் திரு­வ­தாங்­கூர், கொச்சி வழி­யாக சென்­றோம். மலை­யா­ளத்­தில் இரு­பு­ற­மும் கானல் சூழ்ந்து  கழி­க­ளில் நில­வொ­ளி­யில் நாம் பட­கில் சென்­றது ஏதோ கன­வில் செல்­வது போலி­ருந்­த­தல்­லவா? பிறகு நாம் மைசூர், ஐத­ரா­பாத், மும்பை ஆகிய இடங்­க­ளுக்­குச் சென்று கடை­சி­யில் அல­கா­பாத் போய்ச் சேர்ந்­தோம். இது நிகழ்ந்­தது ஜூன் மாதத்­தில். அதா­வது ஒன்­பது மாதங்­க­ளுக்கு முன்.

 ஆனால் தற்­கா­லத்­தில் இந்­தி­யா­வில் எல்லா வழி­க­ளும் ஏறக்­கு­றைய ஒரே இடத்­துக்­குத்­தான் போய்ச் சேரு­கின்­றன. கன­வில் செய்­யும் பிர­யா­ணங்­கள், நன­வில் செய்­யும் பிர­யா­ணங்­கள் எல்­லாம் சிறை­யில் வந்து முடி­கின்­றன. ஆகவே நான் மறு­ப­டி­யும் என்­னு­டைய பழைய இடத்­திற்கு வந்­து­விட்­டேன். சிந்­திப்­ப­தற்­கும் எழு­து­வ­தற்­கும் எனக்கு போதிய அவ­கா­சம் இருக்­கி­றது. ஆனால் நான் எழு­தும் கடி­தங்­கள் உனக்கு வந்து சேர­மாட்டா. மீண்­டும் சுதந்­தி­ரப் போர் நடக்­கி­றது. நமது ஜனங்­கள்,  ஆட­வ­ரும், மாத­ரும், சிறு பையன்­க­ளும் பெண்­க­ளும் இந்­நாட்­டின் ஏழ்­மையை ஒழிக்க வேண்டி விடு­த­லைப் போரில் கலந்து கொள்­கி­றார்­கள்.

(தொட­ரும்)