சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 407 – எஸ்.கணேஷ்

27-08-2019 05:50 PM

நடி­கர்­கள்  :  விஜய் சேது­பதி, பாபி சிம்ஹா, அஷோக் செல்­வன், ரமேஷ் திலக், கரு­ணா­க­ரன், சஞ்­சிதா செட்டி, ராதா­ரவி, எம்.எஸ்.பாஸ்­கர் மற்­றும் பலர். இசை : சந்­தோஷ் நாரா­ய­ணன், ஒளிப்­ப­திவு : தினேஷ் கிருஷ்­ணன், எடிட்­டிங் : லியோ ஜான் பால், தயா­ரிப்பு : சி.வி. குமார், திரைக்­கதை, இயக்­கம் : நளன் குமா­ர­சாமி.

ஐ.டி. கம்­பெ­னி­யில் வேலை பார்க்­கும் கேச­வன் (அஷோக் செல்­வன்), டிரை­வ­ராக இருக்­கும் சேகர் (ரமேஷ் திலக்), வெத்­து­வேட்டு பக­ல­வன் (பாபி சிம்ஹா) மூவ­ரும் நன்­பர்­கள். பணத்­தே­வைக்­காக சின்ன சின்ன கடத்­தல் வேலை­கள் செய்­யும் தாசி­டம்(விஜய் சேது­பதி) அசிஸ்டண்ட்டுகளாக சேரு­கி­றார்­கள். நடுத்­தர வய­து­டைய தாஸ் தனக்­கென ஐந்து விதி­களை உரு­வாக்­கிக் கொண்டு கன­வுப்­பாத்­தி­ர­மான காதலி ஷாலு­வு­டன் (சஞ்­சனா ஷெட்டி) வாழ்­ப­வர்.

தாசின் தலை­மை­யி­லான குழு ஒரு சிறு­வனை கடத்தி அவ­னது தந்­தை­யான நம்­பிக்கை கண்­ண­னி­ட­மி­ருந்து பணம் பெறு­கி­றது. நேர்­மை­யான அமைச்­சர் ஞானோ­த­யத்­தால் (எம்.எஸ்.பாஸ்­கர்) பாதிக்­கப்­பட்ட தனது சகோ­த­ர­னுக்­காக பழி­வாங்க நினைக்­கும் நம்­பிக்கை கண்­ணன், ஞானோ­த­யத்­தின் மகன் அருமை பிர­கா­சத்தை (கரு­ணா­க­ரன்) தாஸ் குழு­வி­டம் கடத்த சொல்­கி­றார்.

200 கோடி பணத்­திற்­காக அரு­மையை நால்­வர் குழு கடத்­தச் செல்­கி­றது. இவர்­க­ளுக்கு முன்­னரே வேறு நபர்­கள் அரு­மையை கடத்த அவர்­க­ளி­ட­மி­ருந்து அரு­மையை கடத்­திய பின்­னரே இது அரு­மை­யின் திட்­ட­மென்­றும் தந்­தை­யி­ட­மி­ருந்து பணம் பறிக்க அரு­மையே கடத்­தல் நாட­கம் ஆடு­வ­தும் புரி­கி­றது. அமைச்­ச­ரி­ட­மி­ருந்து பெற்ற பணத்தை பகிர்ந்து கொள்­வ­தில் ஏற்­ப­டும் பிரச்­சி­னை­யால் இவர்­கள் செல்­லும் வேன் விபத்­துக்­குள்­ளாகி அருமை பணத்­தோடு தப்­பிக்­கி­றான்.

அரு­மையை காப்­பாற்­று­வ­தற்­காக அமைச்­சர், காவல் அதி­காரி பிரம்­மா­விற்கு உத்­த­ர­வி­டு­கி­றார். தாஸ் இரண்­டா­வது முறை­யாக அரு­மையை கடத்­திச் செல்ல, இந்த முறை அவர்­க­ளுக்­கான பங்கை தரு­வ­தாக வாக்­க­ளித்து அருமை விடு­த­லை­யா­கி­றான்.

கரு­ணை­யில்­லாத கொடு­மை­யான அதி­கா­ரி­யான பிரம்­மா­விற்கு அரு­மை­யின் திட்­டம் தெரிந்து தாஸ் குழுவை காட்­டிக் கொடுக்­கும்­படி மிரட்­டு­கி­றான். கோர்ட்­டில் தன்னை தாசின் குழு கடத்­த­வில்லை என்று அருமை வாக்­கு­மூ­லம் அளிக்க அவர்­கள் விடு­த­லை­யா­கி­றார்­கள். இத­னால் கோப­மா­கும் பிரம்மா நால்­வ­ரை­யும் மறை­வான இடத்­தில் வைத்து தாக்­கு­கி­றான். அவர்­களை சட்­டத்­திற்கு புறம்­பாக கொல்­வ­தற்­காக பிரம்மா வைத்­தி­ருக்­கும்  நாட்­டுத்­துப்­பாக்கி தவ­று­த­லாக அவ­னது பின்­பு­றத்­தில் வெடித்­து­விட நால்­வ­ரும் தப்­பிக்­கி­றார்­கள்.

மக­னால் மன­மு­டை­யும் அமைச்­சர் ஞானோ­த­யம் 200 கோடியை முதல்வரிடம் திருப்­பி­ய­ளிக்­கி­றார். ஆனால் பையில் பணத்­திற்கு பதி­லாக காகி­தக்­கட்டு கிடைக்­கி­றது.

அருமை பணத்தை இடம் மாற்­று­வ­தோடு, தாஸ் குழு­வுக்கு அவர்­க­ளது பங்கை அளிக்­கி­றான். அரு­மையை அழைக்­கும் முதல்வர் அவ­னது புத்­தி­சா­லித்­த­னத்தை மெச்­சு­வ­தோடு, அவ­னது தந்­தை­யால் கட்­சிக்கு எந்த வரு­மா­ன­மும் இல்லை என்று கூறு­கி­றார். கட்­சிக்கு நிறைய வரு­மா­னத்தை பெற்­றுத்­த­ரக்­கூ­டிய அரு­மைக்கு தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­கி­றார்.

தேர்­த­லில் ஜெயித்து உட­ன­டி­யாக அமைச்­ச­ரா­கும் அருமை சேக­ரை­யும், கேச­வ­னை­யும் தனது ஆலோ­ச­கர்­க­ளாக நிய­மித்­துக் கொள்­கி­றான். பக­ல­வன் நடி­க­னாகி விட, தாஸ் அடுத்த இளை­ஞர் குழு­வோடு கடத்­தல் தொழிலை தொடர்­கி­றான். இப்­போது இவர்­கள் கடத்­தும் இளம்­பெண் தாசின் கன­வுக்­கா­தலி ஷாலு­வைப் போலவே இருக்­கி­றாள். தாஸ் குழு அதிர்ச்­சி­ய­டை­யும் வகை­யில் கடத்­தப்­பட்ட பெண், அமைச்­ச­ரின் மகள் ஷாலினி குப்தா எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. சூது தொடர்­கி­றது.Trending Now: