சீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி

25-08-2019 06:56 PM

பியாரிட்ஜ் (பிரான்ஸ்),             

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று காலை பிரிட்டன் பிரதமர்  ஜான்சனுடன் பேசும்பொழுது அமெரிக்க சீன வர்த்தக யுத்தம் குறித்து வருந்துவதாகவும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய விரும்புவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

2019 ஆம் ஆண்டு 7 அமைப்பின் ஆண்டு மாநாடு பிரான்ஸ் நாட்டின் கடலோர சுற்றுலாத் தலமான பியாரிட்ஜ் நகரில் நடைபெறுகிறது.

சனிக்கிழமை அன்று துவங்கிய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  கலந்துகொண்டார்.

ஜி7 மாநாட்டுக்காக அமெரிக்காவில் இருந்து புறப்படும் பொழுது கூட தனது வழக்கமான பாணியில் பிரான்ஸ் நாட்டில் கூகுள், ஃபேஸ்புக் போன்றவற்றின் வருமானத்தில் 3 சதவீதம் டிஜிட்டல் வரியாக விதிக்கப் படுகிறது இந்த வரியை ரத்து செய்யாவிட்டால் பிரான்ஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின் மீது புதிதாக வரி விதிக்கப் போவதாக எச்சரிக்கை வெளியிட்டார்.

சீனா புதிதாக அமெரிக்க பொருள்கள் மீது வரி விதிப்பதாகக் கூறியதைக் கண்டித்து புது நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக கூறினார். சீனாவில் இயங்கி கொண்டுள்ள அமெரிக்க கம்பெனிகளை தன் இஷ்டப்படி செயல்பட வைப்பதற்காக அமெரிக்காவில் அவசரநிலை கூட அறிவிக்கப்படலாம் என டிரம்ப் கூறினார்.

இந்தப் பின்னணியில்தான்  ஜி-7 மாநாட்டுக்காக டிரம்ப்  வது சேர்ந்தார். வந்ததும் காலை உணவை பிரிட்டன் பிரதமர் ஜான்சனுடன்  பேசிக்கொண்டே சாப்பிட்டார்.

 பேச்சுவார்த்தையின்போது சீன அமெரிக்க வர்த்தக யுத்தம் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புவதாக ஜான்சன் கூறினார்,  அவ்வாறு கூறா விட்டாலும் அதனால் ஏற்படும் விளைவுகளை யாரும் மறைக்க முடியாது என்று ஜான்சன் மிகவும் எளிமையான வகையில் டிரம்புக்கு உறுத்தல் இல்லாமல் தெரிவித்தார்.

டிரம்ப் வருத்தம்

அமெரிக்க சீன வர்த்தக யுத்தம் பெரிதாகிக் கொண்டே போவது தனக்கு வருத்தம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

 அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் .வர்த்தக மோதல்கள்  குறித்து மறுபரிசீலனை எதுவும் உங்கள் மனதில் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

 ஆமாம். நிச்சயமாக ! மறுபரிசீலனை பற்றிய எண்ணம் எனது மனதில் உள்ளது.. எல்லா விஷயங்கள் குறித்தும் மறுபரிசீலனை செய்யலாம் என்று தோன்றுகிறது. என டிரம்ப் பதிலளித்தார்.  

உலக வர்த்தக போட்டி விஷயத்தில் அமைதி வேண்டும் என்று ஜி 7 நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் கருதுகின்றனர். ஆனால் இப்பொழுது எந்த திட்டமும் எங்களிடத்தில் இல்லை.

நான் அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்பேன் என்று சொன்னது குறித்தும் எந்த விதமான திட்டமும் என்னிடத்தில் கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார்.

சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் எல்லாமே அமெரிக்காவுக்கு ஒரு எதிரான நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலை உருவாகி உள்ளதை  காட்டுவதாக டிரம்ப் தெரிவித்தார்.

 அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சீனாவால்  திருடப்பட்டு இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு பிரான்ஸ் நாட்டின் அதிபருடன் மதிய உணவின்போது நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் நடவடிக்கை காரணமாக அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்ல, உலக நாடுகளின் பொருளாதாரமும் பலவீனமடைகிறது. இது ஒட்டுமொத்தமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரான்ஸ் அதிபர் எச்சரித்தார் .

இந்தப் பின்னணியில் பார்த்தால், இன்று காலை ஜி 7 மாநாடு துவங்கியதும் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் பொருளாதார விஷயங்களை நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறி அதனை சேர்த்துக் கொள்ளும்படி டிரம்ப் கேட்டுக் கொண்டதைக் குறிப்பிடலாம்.

டிரம்ப்பின் கருத்துக்களில் ஏற்பட்டுள்ள மாறுதல் குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து அல்லது அமெரிக்க அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.

மூன்று நாள் நடைபெறவுள்ள மாநாட்டில் மூன்றாவது நாளான நாளை ஒருவேளை தெளிவான கருத்துக்கள் வெளியாகக் கூடும்.

.ஜி7 மாநாட்டில் முன் உள்ள மற்றொரு முக்கியமான பிரச்சனை ரஷ்யாவை ஜி7 அமைப்பில் மீண்டும் சேர்த்துக் கொள்வது தொடர்பான துதான். இந்த கருத்தை ஐரோப்பிய யூனியன் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் மற்ற நாடுகள் ரஷ்யாவை மீண்டும் சேர்த்துக் கொள்வதை அங்கீகரிக்கின்றன என்று சொல்லலாம்

மூன்றாவது நாளான திங்கட்கிழமை யன்று  ஜி7 அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்குப் ஏற்கனவே டிரம்ப் திட்டமிட்டு உறுதி செய்துள்ளார். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே யுடனும் பேச டிரம்ப் திட்டமிட்டுள்ளார்

இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி 7 மாநாட்டில் பிரான்ஸ் நாட்டின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் மாநாட்டில்  கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருக்கிறார் .இந்திய பிரதமருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த தனிப்பட்ட முறையில் திட்டமிட்டுள்ள பேச்சுவார்த்தைகளும்  டிரம்ப்பின் கருத்தை உருவாக்க ஒரு வகையில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

முந்திய ஜி7 மாநாடுகளின் இறுதியில் டிரம்ப்பின் குளறுபடி குளறுபடிகள் காரணமாக கூட்டறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்த முறை எல்லாம் சரியாக வந்தால் கூட்டறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது எனலாம்..Trending Now: