சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்

25-08-2019 06:18 PM

தண்டேவாடா,                       

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவராக கருதப்படும் புத்தரா என்கிற நரேஷ் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.

நரேஷ் பற்றிய தகவல்களை தருவோருக்கு ரூபாய் 8 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

சத்திஸ்கர் மாநிலம்  சுக்மா மாவட்டம் குண்டா பகுதியை சேர்ந்தவர் நரேஷ். 32 வயதாகும் இவர் பல கொலைகளுக்கு காரணம் என்று போலீஸார் கூறுகின்றனர்.

2007 ஆம் ஆண்டில் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்த நரேஷ், சத்தீஸ்கர் மாநில உதவி கமாண்டராக இயங்கி  வந்தார்.

மாவோயிச கொள்கைகளினால் மக்களுக்கு பயன் எதுவும் இல்லை என்று நரேஷ் குறிப்பிட்டார். அதனால் ஆயுதத்தை கைவிட்டுவிட்டு போலீசாரிடம் சரணடைந்ததாக நரேஷ் கூறினார்.

ரூ. 10000 உடனடியாக நரேஷ் கையில் வழங்கப்படும், இந்தத் தொகை சரண் ஊக்குவிப்பு பணமாகும்.

இவைத் தவிர சரணடையும் மாவோயிஸ்டுகளின் புணர் வாழ்வுக்காக அரசு கொள்கைப்படி அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மாநில போலீஸ் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா செய்தியாளர்களிடம் கூறினார்.Trending Now: