எகிலும் தங்கம் விலை இப்போது வாங்கலாமா...! – குட்டிக்கண்ணன்

22-08-2019 04:38 PM

இந்­திய மக்­கள் ஆடி­போய் நிற்­கி­றார்­கள். தங்­கத்­தின் விலையை பார்த்­து­விட்டு. அதி­லும் தமி­ழக பெண்­கள் உறைந்­து­போய் நிற்­கின்­ற­னர். பொது­வாக உலக பெண்­களை விட இந்­தி­யப் பெண்­கள் தங்க நகை­கள் அணி­வ­தில் ஆர்­வம் அதி­கம். பிறந்த வீட்­டி­லி­ருந்து பெண்ணை புகுந்த வீட்­டுக்கு அனுப்­பும்­போது அவ­ளுக்கு பாது­காப்­பாக இருக்­குமே என்ற எண்­ணத்­தில் தங்க நகை­களை போட்டு அனுப்­ப­வது வழக்­கம். இப்­ப­டி­யி­ருக்க இன்­றைய நிலை­யில் தங்­கத்­தின் விலையை பார்க்­கும்­போது நடுத்­தட்டு மற்­றும் கீழ்­தர மக்­க­ளின் கனவு காணும் உலோ­க­மாக இனி மாறி­வி­டுமோ என்ற பெரும் அச்­சத்­தில் இருக்­கி­றார்­கள். இனி தங்­கம் விலை குறை­யாதா? எப்­போது தங்­கம் வாங்­க­லாம் என்று பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ண­னி­டம் கேட்­ட­போது.

"ஆசை தீர வாங்கி அணிந்­து­கொள்­ளும் தங்­கத்­தின் விலை ராக்­கெட் வேகத்­தில் அதி­க­ரித்து வரு­வ­தைப் பார்த்து, மக்­கள் அதிர்ச்­சி­யில் உறைந்­து­போ­யி­ருக்­கி­றார்­கள். நடப்பு ஆண்­டின் தொடக்­கத்­தி­லி­ருந்தே 22 கேரட் ஆப­ர­ணத் தங்­கத்­தின் விலை ஏறு­மு­கத்­தில்­தான் இருந்து வரு­கி­றது. கடந்த ஜன­வரி மாதம் 1-ம் தேதி தங்­கம் விலை ஒரு கிராம் 3,021 ரூபாய்க்­கும், ஒரு பவுன் 24,168 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­னது. அதன்­பின்­னர், தங்­கத்­தின் விலை இறங்­கவே இல்லை. தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணமே இருக்­கி­றது. தற்­போ­தைய சூழ­லில் தங்­கத்­தின் விலை ரூ.28,752

விலை உயர்­வுக்கு என்ன கார­ணம்?

இந்­திய ரூபாய் மதிப்­பின் இயக்­கம் தங்­கத்­தின் விலை­க­ளில் மாற்­றத்­தைத் தீர்­மா­னிக்­கும் மிகப் பெரிய கார­ணி­யா­கும். எப்­போ­துமே அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு குறை­யும் போது தங்­கத்­தின் விலை அதி­க­ரிக்­கும். அதே போல ரூபா­யின் மதிப்பு அதி­க­ரிக்­கும் போது தங்­கத்­தின் விலை குறை­யும். சமீப நாட்­க­ளாக டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்­சி­யைச் சந்­தித்து வரு­கி­றது. இது தங்­கத்­தின் விலை உயர்­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. மேலும், சர்­வ­தேச அள­வில் அமெ­ரிக்க டாலர் போக்­கில் நிச்­ச­ய­மற்ற தன்மை இருக்­கும் என்று முத­லீட்­டா­ளர்­கள் தரப்­பில் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா, ரஷியா ஆகிய இரண்டு நாடு­கள் 2019-ம் ஆண்­டின் முதல் காலாண்­டில் தங்­கத்­தின் மீது முத­லீடு இரு­ம­டங்கு அதி­கம் செய்­துள்­ளது. சீனா, ரஷியா நாடு­க­ளில் பொது­வான கரன்­சி­யான டாலரை விற்று தங்­க­மாக மாற்­றிக் கொள்­கின்­ற­னர். சீனா, -அமெ­ரிக்க இடையே வர்த்­த­கப் போர் நடை­பெ­று­கி­றது. இந்த நாடு­கள் தங்­கள் கரன்­சி­க­ளின் மதிப்­பைக் குறைத்து கொள்­கின்­றன.  இத­னால் பொரு­ளா­தார மந்­தம் ஏற்­ப­டுமோ என்ற  நிலை உள்­ளது. மேலும், உல­கப் பொரு­ளா­தார மொத்த வளர்ச்சி விகி­தம் 3.6 விகி­தத்­தி­லி­ருந்து 3.5 ஆகக் குறை­யும் என்று ஐ.எம்.எப் கணித்­துள்­ளது. இது­போன்ற நிலை­யற்ற தன்­மை­யால், தங்­கத்­தின் முத­லீடு அதி­க­ரித்து, விலை­யும் உயர்­கி­றது.

மேலும், 2019–-20ம் நிதி ஆண்­டுக்­கான மத்­திய பட்­ஜெட்­டில் நிதி அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தங்­கத்­தின் மீதான இறக்­கு­மதி வரியை உயர்த்தி அறி­வித்­தார். 10 சத­வி­கி­த­மாக இருந்த வரி­யைச் 4 சத­வி­கி­த­மா­கக் குறைக்க வேண்­டும் என பட்­ஜெட்­டுக்கு முன் கோரிக்கை வைக்­கப்­பட்­டது. ஆனால், இந்த கோரிக்­கைக்கு மாறா­கத் தங்­கத்­தின் மீதான இறக்­கு­மதி வரி 2 சத­வி­கி­தம் உயர்த்தி 12 சத­வி­கி­தம் ஆக்­கப்­பட்­டது. தற்­போ­தைய தங்­கம் விலை உயர்­வுக்கு இது­வும் ஒரு கார­ணி­யா­கும்.

1947 முதல் 2019-வரை!

கடந்த ஏழு தசாப்­தங்­க­ளில் இந்­தி­யா­வில் தங்­கத்­தின் விலை நினைத்­துப் பார்க்க முடி­யாத அள­வுக்கு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. இதற்கு மிக முக்­கிய கார­ணம், இந்­திய மக்­க­ளுக்­குத் தங்­கத்­தின் மீதான மோகம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­து­தான். தங்­கத்­தின் மீதான தேவை அதி­க­மாக இருப்­ப­தால், அதன் நுகர்வு அதி­க­ரித்­துக் கொண்டே இருக்­கி­றது. அது­மட்­டு­மல்­லா­மல், தங்­கத்­தின் மீது அதிக அள­வில் முத­லீடு செய்­யப்­ப­டு­கி­றது. இத­னால் விலை உயர்வு அதி­க­ரித்­துக் கொண்டே இருக்­கி­றது.

சொன்­னால் நம்ப மாட்­டீர்­கள்! இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்த 1947-ம் ஆண்டு ஒரு கிராம் தங்­கத்­தின் விலை 8.86 ரூபாய் மட்­டுமே!. கடந்த 2006-ம் ஆண்­டில் கூட ஒரு கிராம் தங்­கம் 840 ரூபாய் என்­கிற அள­வில்­தான் வர்த்­த­கம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. அதன் பிற­கு­தான் தங்­கத்­தின் மீதான நுகர்வு அதி­க­ரிக்க, அதி­க­ரிக்க இன்று ஒரு கிராம் தங்­கம் 3,544 ரூபாய்க்கு உயர்ந்­தி­ருக்­கி­றது. இந்­தி­யா­வின் மொத்த இறக்­கு­மதி பொருள்­க­ளில் 10 முதல் -15 சத­வி­கி­தம்  வரை தங்­கம் இறக்­கு­மதி செய்­யப்­பட்டு கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­திக்கு அடுத்­த­தாக உள்­ளது.

தொடர்ந்து உய­ருமா?

தங்­கம் விலை சில நாட்­க­ளுக்கு கொஞ்­சம் குறைய வாய்ப்பு இருப்­ப­தா­க­வும், அதன் பின்­னர் மீண்­டும் உய­ரத் தொடங்­கும் என்று தெரி­கி­றது. மேலும் அமெ­ரிக்கா மற்­றும் சீனா இடையே நிலவி வரும் பொரு­ளா­தார யுத்­தம் நீடிக்­கும் வரை தங்­கம் விலை தொடர்ந்து உயர்ந்­து­கொண்டே இருக்­கும். சில நாள்­க­ளில் ஒரு பவுன் ஆப­ர­ணத் தங்­கம் 30 ஆயி­ரம் ரூபாயை தொடும் என எதிர்­பார்க்­க­லாம்.

இப்­போது வாங்­க­லாமா?

சர்­வ­தேச விலை, 2013ம் ஆண்­டுக்­குப் பிறகு 1500 டால­ருக்­கு­மேல் வர்த்­த­மாகி வரு­கி­றது. ஆகை­யால், இந்த ஏற்­றம் நீண்ட இடை­வெ­ளிக்­குப்­பி­றகு அதி­க­ரித்­துள்­ளது. இந்த தரு­ணத்­தில் மிகுந்த ஊச­லா­டத்­து­டன் மிக வேக­மாக விலை ஏற­வும் அதே வேகத்­தில் இறங்­க­வும் வாய்ப்­பி­ருக்­கி­றது. விலை அதி­க­ரிக்­கும்­போது டிமாண்ட் என்று சொல்­லக்­கூ­டிய தேவை குறை­யும்.

ஆனால், சர்­வ­தேச விலை­யு­டன் ஒப்­பி­டும்­போது, நம் நாட்­டில் 22 காரட் ஒரு கிராம் ரூபாய் 3000 என்­பது ஆத­ரவு விலை­யாக இருக்­கும். அதற்கு கீழ்யே பெரி­ய­ள­வில் இறங்க வாய்ப்­பில்லை. நீண்­ட­கால முத­லீட்­டிற்கு எஸ்.ஜி,பி என்ற அரசு வெளி­யீ­டு­கிற தங்­கப் பத்­தி­ரங்­க­ளில் முத­லீடு செய்­வது நல்ல முடி­வாக இருக்­கும். ஏனென்­றால் 2.5 சத­வீ­தம் உத்­த­ர­வா­தம் உள்ள வட்­டி­யு­டன் முதிர்வு தொகை கிடைப்­பத்­து­டன் பாது­காப்­பா­ன­தும்­கூட,

ஆப­ர­ணத் தங்­கத்தை பொறுத்­த­வரை திரு­ம­ணத் தேவைக்­கா­கத் தங்­கம் வாங்க இருப்­ப­வர்­கள் இப்­போ­தைய நிலை­மையை தவிர்த்­து­விட்டு உடனே வாங்­கிக் கொள்­வது நல்­லது. மற்­ற­வர்­கள் கோல்டு இ.டி.எப் அல்­லது தங்­கப்­பத்­தி­ரங்­க­ளில் முத­லீடு செய்­வது சிறந்­தது. தங்­கம் விலை ஏற்­றம் இறக்­கத்தை மட்­டும் பார்க்­கா­மல், அதற்­கான கார­ணங்­களை ஆராய்ந்து பார்க்க தெரிந்­து­கொண்­டால் தங்­கத்­தில் எப்­போது முத­லீடு செய்­ய­லாம் என்­பது நன்­றாக புரி­யும்" என்­றார்.Trending Now: