பிளாட்பார பாட்டிக்கு ரியாலிட்டி! – லட்சுமி

22-08-2019 04:34 PM

வைரல் அளித்த வாழ்வு உள்­ளூர் ரயில்­கள், ரயில் நிலை­யங்­க­ளி­லும் பாடு­வ­தன் மூலம் தனது வாழ்க்­கையை ஓட்­டி­வந்த பாட்­டி­யின் பாடல் வீடியோ, சமூக வலை­த­ளங்­க­ளில் வைரலோ வைர­லாக 2 மில்­லி­யன் வியூஸ் ஆகி, ரியா­லிட்டி ஷோ வாய்ப்பை பெற்­றுத் தந்­துள்­ளது.

சும்­மா­யி­ருப்­ப­வர்­க­ளை­யும் இன்ஸ்­டன்ட் செலி­பி­ரிட்­டி­க­ளாக்கி அழகு பார்க்­கின்­றது இன்­றைய இணை­யம். இதில், ஆடல், பாடல், காமெடி என தனித்­தி­ற­மை­க­ளில் சிறந்­த­வர்­க­ளாக இருந்து அவர்­க­ளது வீடி­யோக்­கள் வெளி­யா­னால், குறு­கிய காலத்­திற்கு சோஷி­யல் மீடியா முழு­வ­தும் அவர்­க­ளது ராஜ்­ஜி­யம் தான்!. அப்­படி, இன்ஸ்­டன்ட் பேமஸ் ஆன­வர்­கள் லிஸ்­டில் லேட்­டஸ்ட்­டாய் இணைந்­துள்­ளார் மேற்கு வங்­கத்தை சேர்ந்த பாட்டி.

மேற்கு வங்க மாநி­லம் ரன­காட் ரயில் நிலை­யத்­தின் பிளாட்­பார்­மில் அமர்ந்து பாட்டி ஒரு­வர் இந்தி பாடல்­களை பாடிக் கொண்­டி­ருந்­துள்­ளார். அதை வீடியோ எடுத்த ஒரு­வர் பேஸ்­புக்­கில் வெளி­யிட வியூஸ்­களை அள்­ளி­யது. வீடி­யோ­வில் அப்­பாட்டி 1972ம் ஆண்டு வெளி­யாகி ஹிட்­டான ஷோர் படத்­தில் லதா மங்­கேஷ்­கர் பாடிய ‘ஏக் பியார் கா நக்மா ஹை’ பாடலை அவ்­வ­ளவு அழ­காக பாடி­யுள்­ளார். கடந்த இரு வாரங்­க­ளாக இணை­யத்­தில் வைர­லாகி வரும் அவ்­வீ­டி­யோ­வில் பாடும் பாட்­டி­யின் பெயர் ரானு மரியா மண்­டல். மேற்கு வங்­கத்தை சேர்ந்த அவர், இப்­போது ‘ரன­காட்­டின் லதா’ என்று அழைக்­கப்­பட்டு பிர­ப­ல­மாகி வரு­கி­றார்.

டிவிட்­டர், யூடி­யூப், பேஸ்­புக் என்று சகல சமூக வலை­த­ளங்­க­ளி­லும் ரானு­வின் பாடல் ஒலித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த பாட்­டிக்­குள் இப்­ப­டி­யொரு திற­மையா என வாய­டைத்து போன நெட்­டி­சன்­க­ளும், பிர­ப­லங்­க­ளும் வீடி­யோவை ஷேர் செய்து வரு­கின்­ற­னர். பாட­கர் சங்­கர் மகா­தே­வ­னும் அதி­லொ­ரு­வர். ஆனால்,

“அது ஒரு தற்­செ­ய­லான சந்­திப்பு,” என்­கி­றார் ரன­காட் ரயில் நிலை­யத்­தில் ரானு­வின் பாடலை கேட்டு வீடியோ எடுத்த அதிந்­திர சக்­க­ர­வர்த்தி.

“ரன­காட் ரயில் நிலை­யத்­தில் பிளார்ட்­பார்ம் நம்­பர் ஆறு­யில் நானும் எனது நண்­பர்­க­ளும் பேசிக்­கொண்­டி­ருந்­தோம். அப்­போது, ரேடி­யா­வில் பாட­கர் முக­மது ரபி­யின் பாடல் ஒன்று சத்­த­மாக ஒலித்­தது. பிளாட்­பா­ரத்­தில் அமர்ந்­தி­ருந்த வய­தான பெண் ஒரு­வர், அந்த பாடலை முணு­மு­ணுத்­துக் கொண்­டி­ருந்­தார்.

”நான் பக்­கத்­தில போய், எங்­க­ளுக்­காக ஒரு பாடல் பாட முடி­யு­மானு கேட்­டேன். அவ­ரும் பாடி­னார். அதை நான் போனில் வீடியோ ரெக்­கார்ட் செய்து கொண்­டேன். அவ­ரது மென்­மை­யான குர­லை­யும், இசை உணர்­வை­யும் கண்டு எங்­கள் அனை­வ­ருக்­கும் ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது,” என்று கூறி­யுள்­ளார் அதிந்­திர சக்­க­ர­வர்த்தி.

அன்று மாலை, சக்­க­ர­வர்த்­தி­யும் அவ­ரது நண்­பர்­க­ளும் ரானுவை ஒரு மணி நேரத்­திற்­கும் மேலாக பழைய பாடல்­களை பாடச்­சொல்லி கேட்­டுள்­ள­னர். அவ­ருக்கு உண­வும், தண்­ணீர் பாட்­டி­லும் வாங்­கிக் கொடுத்­து­விட்டு கிளம்­பி­யுள்­ளார். இரு தினங்­க­ளுக்­குப் பிறகு, சக்­க­ர­வர்த்தி அவ்­வீ­டி­யோவை பேஸ்­புக்­கில் பதி­விட, ரானு­வின் வாழ்­வில் திருப்­பு­மு­னை­யாக அமைந்­துள்­ளது.

ஆம், ஆல்­ரெடி நாடு முழுக்க பேம­சா­கிய அவரை மும்­பையை சேர்ந்த தனி­யார் சேனல் நிறு­வ­னம் ஒன்று அவர்­கள் ஒளி­ப­ரப்­பும் மியூ­சிக் ரியா­லிட்டி ஷோவில் பங்­கேற்க அழைத்­துள்­ளது. கடந்த ஒரு வாரத்­தில் எக்­கச்­சக்­க­மா­னோர் ரானு­வுக்கு உண­வ­ளிக்க முன்­வந்­துள்­ள­னர். ஏன், லோக்­கல் பியூட்டி பார்­லர் ஒன்று ரானு­வின் லுக்­கையே வேற லெவ­லுக்கு மாற்றி பாட்­டியை பியூட்­டி­யாக்­கி­யுள்­ளது.

“என் குழந்தை பரு­வத்­தில் இருந்தே பாடல்­களை கேட்­ப­தும், பாடு­வ­தும் பிடித்­த­மான விஷ­யங்­க­ளாக இருந்­தது. பாட­கர்­கள் முக­மது ரபி மற்­றும் முகேஷ்­ஜி­யின் பாடல்­கள் ரொம்­பவே பிடிக்­கும். லதா மங்­கேஸ்­க­ரது பாடல்­கள் எனக்கு உத்­வே­கத்தை அளித்­துள்­ளன. அவ­ரு­டைய பாடல்­களை என்­னு­டன் தொடர்­புப்­ப­டுத்தி கொள்­ள­மு­டி­யும். அந்த மெல்­லிசை எப்­போ­தும் என் இத­யத்தை தொடும்,” என்­றார்.

ரானு­வின் புகழ் மாவட்ட நிர்­வா­கத்­தின் கவ­னத்­திற்­கும் சென்­றுள்­ளது. ஆம், உள்­ளூர் தொகுதி மேம்­பாட்டு அதி­காரி (பி.டி.ஓ) ரானு­விற்கு உதவி செய்­வ­தாக உறுதி அளித்­த­து­டன், மற்­றும் மேற்கு வங்க அர­சாங்­கத்­தின் கன்­யாஸ்ரீ திவாஸ் திட்ட வெற்றி கொண்­டாட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக ஆகஸ்ட் 14ம் தேதி அன்று ரானுவை வாழ்த்­தி­யது.

Trending Now: