இணைந்த கைகள்! – சுமதி

22-08-2019 04:33 PM

ஐந்து வணிக முயற்­சி­களை வெற்­றி­க­ர­மாக நிறுவி அனைத்­தை­யும் திறம்­பட நடத்தி வரு­கின்­ற­னர் தம்­ப­தி­க­ளான நாகு சிதம்­ப­ரம் மற்­றும் கீதா நாகு. இவர்­கள் மேலும் பல வணிக முயற்­சி­க­ளில் ஈடு­ப­ட­வும் ஆர்­வ­மாக உள்­ள­னர்.

இந்த தம்­ப­தியை அணு­கி­ய­போது அவர்­க­ளி­டம் இருந்த உற்­சா­க­மும் அவர்­க­ளைச் சூழந்­து ள்ள நேர்­ம­றை­யான அணு­கு­மு­றை­யும் புலப்­பட்­டது.

சென்­னை­யில் மிகப்­பி­ர­ப­ல­மான தொழில் முனை­வோர்­க­ளான இந்த ஜோடி, உரு­வாக்­கி­யுள்ள ஒவ்­வொரு வணிக முயற்­சி­யை­யும் வெற்­றி­க­ர­மாக நடத்தி வரு­கின்­ற­னர். வாகன துணைப்­பொ­ருட்­கள் பிரி­வில் செயல்­ப­டும் சன் இண்­டஸ்ட்­ரீஸ், மலி­வு­விலை வில்­லாக்­கள் பகு­தி­யில் செயல்­ப­டும் VNCT வென்ச்­சர்ஸ், பிர­ப­ல­மான கமலா தியேட்­டர் போன்ற பல்­வேறு வணி­கங்­க­ளில் இவர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர். கல்வி சார்ந்த முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்ள தொழில்­மு­னை­வ­ரான கீதா நாகு தனது கண­வ­ரின் வணிக முயற்­சி­க­ளுக்கு உத­வு­வ­து­டன் OCE College India என்­கிற ஐடி பயிற்சி நிறு­வ­னத்­தை­யும் நடத்தி வரு­கி­றார். நாகு சிதம்­ப­ரம் மற்­றும் கீதா நாகு­வின் பய­ணம் தொழில்­மு­னை­வில் ஆர்­வம் காட்­டும் பல­ருக்­கும் குடும்ப வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளோ­ருக்­கும் உந்­து­தல் அ ளிக்­கக்­கூ­டி­ய­தா­கும்.

புது­மை­யான முயற்­சி­கள் எவ்­வாறு மாறு­பட்ட கண்­ணோட்­டத்தை வழங்­கு­கி­றது என்­பதை இவ்­வி­ரு­வ­ரும் எஸ்­எம்பி வணி­கங்­க­ளுக்கு காட்­டு­வ­து­டன் குடும்ப வணி­கத்­தின் முக்­கிய மதிப்பை தக்­க­வைத்­துக்­கொண்டே அதை எவ்­வாறு நவீ­னப்­ப­டுத்தி மாற்­றி­ய­மைக்­க­லாம் என்­ப­தை­யும் காட்­டு­கின்­ற­னர்.

உங்­க­ளது ஆரம்ப நாட்­கள் குறித்­தும்

உங்­கள் முயற்­சி­கள் எவ்­வாறு துவங்­கப்­பட்­டது என்­ப­தை­யும் பகிர்ந்து கொள்­ளுங்­கள்?

நாகு: நாங்­கள் செட்­டி­யார் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள். தொழில் என்­பது எங்­கள் ரத்­தத்­தில் இரண்­ட­றக் கலந்த ஒன்று. கீதாவை என்­னு­டைய பள்ளி நாட்­க­ளில் இருந்தே அறி­வேன். பதி­னோ­றாம் வகுப்பு படிக்­கும்­போதே இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளத் தீர்­மா­னித்­தோம். எங்­கள் குடும்­பத்­தி­னர் எங்­கள் காதலை ஏற்­றுக் கொள்­ள­வில்லை. திரு­ம­ணம் குறித்து தீர்­மா­னிக்­கும் வயது அது­வல்ல என நினைத்த அவர்­கள் நாங்­கள் வெவ்­வேறு இடங்­க­ளில் இருப்­பதே சிறந்­தது என முடிவு செய்­த­னர்.

கீதா: நாகு சிறப்­பாக திட்­ட­மி­டு­வார். ஆரம்­பத்­தில் இருந்தே எங்­க­ளுக்­குத் திறன் அதி­கம் உள்ள பகு­தி­யி­லேயே செயல்­ப­ட­வேண்­டும் என நாங்­கள் தீர்­மா­னித்­தோம். ஒரு­வ­ரின் கருத்தை மற்­ற­வர் முரண்­ப­டா­மல் இரு­வ­ரும் இணக்­க­மா­கவே செயல்­பட்­டோம். இதுவே எங்­க­ளுக்கு பெரி­தும் உத­வி­யது என்று நினைக்­கி­றேன்.

உங்­க­ளது பார்ட்­னர்­ஷிப் எவ்­வாறு சிறப்­பாக உரு­வா­னது?

கீதா: சிறந்த பார்ட்­னர்­ஷிப் வீட்­டில் இருந்தே துவங்­கு­கி­றது என நம்­பு­கி­றேன். அதிர்ஷ்ட்­ட­வ­ச­மாக எங்­கள் பார்ட்­னர்­ஷிப் சிறப்­பா­கவே இருந்­தது.

இரு­வ­ரி­ட­மும் இயற்­கை­யா­கவே சில திறன்­கள் இருந்­தன. அவற்­றில் கவ­னம் செலுத்­தி­னோம். குறிப்­பிட்ட எல்­லை­யைத் தாண்டி சிந்­திக்­கும் திறன் நாகு­வி­டம் இருந்­தது. தெரி­யாத விஷ­யங்­க­ளைத் தேடித் தெரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்­கிற ஆர்­வம் என்­னி­டம் இருந்­தது.

நாம் நிர்­ண­யிக்­கும் இலக்­கு­தான் வெற்­றிக்கு முக்­கி­யம். விரி­வான, பெரி­ய­ள­வி­லான சிந்­த­னை­யு­டன்­கூ­டிய அணு­கு­முறை அவ­சி­யம்.

உங்­க­ளது வணிக முயற்­சி­க­ளின் பய­ணம் குறித்து சொல்­லுங்­கள்?

நாகு: குடும்ப வணி­கம் என்­பது வச­தி­யான ஒரு பகு­தி­யாக தோன்­றி­னா­லும் நான் அதி­லி­ருந்து வெளி­யேற நினைத்­தேன். ஏனெ­னில் ஒரு குறிப்­பிட்ட கால­கட்­டத்­திற்­குப் பிறகு வசதி என்­பதே வச­தி­யற்­ற­தாக தோன்­றி­வி­டும். குடும்ப வணி­கத்­திற்­குத் திரும்­பு­வது எளிது என்­றா­லும் நாங்­கள் அவ்­வாறு செய்­யக்­கூ­டாது என முடி­வெ­டுத்­தோம். நானும் கீதா­வும் எங்­க­ளி­டம் இருப்­ப­வற்றை நினைத்து நன்­றி­யு­ணர்ச்­சி­யோடு இருக்­கும் அதே நேரம் பெரி­ய­ள­வில் உரு­வாக்­க­வும் விரும்­பி­னோம்.

கீதா: வணி­கத்­தைப் புரிந்­து­கொள்­ள­வும் அனு­ப­வம் பெற­வும் வெற்­றியை நோக்கி நக­ர­வும் அதற்கே உரிய சுழற்­சி­யைக் கடந்து வர­வேண்­டும்.

இப்­ப­டித் துவங்­கி­ய­து­தான் இவர்­க­ளது வணிக முயற்சி. குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து பண உதவி பெறா­மல் தங்­க­ளது முயற்­சி­யைத் துவங்­கி­யுள்­ள­னர். நாகு­வின் செயல்­பா­டு­கள் குடும்ப வணி­கத்­தில் இருந்து வேறு­பட்­டி­ருந்­தா­லும் அதே பிரி­வில் செயல்­பட்­டார். அந்த சம­யத்­தில்­தான் குடும்ப வணி­கத்தை அடுத்த கட்­டத்­திற்கு எடுத்து செல்­வது குறித்து சிந்­தித்­தார்.

குடும்ப வணி­கத்தை எப்­போது மறு வடி­வ­மைப்பு செய்­தீர்­கள்?

நாகு: 2009-ம் ஆண்டு குடும்ப வணி­க­மான பொழு­து­போக்கு வணி­கத்தை மீண்­டும் புதிய வடி­வில் அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை இருப்­பதை உணர்ந்­தேன். குடும்­பத்­தி­னர் ஏற்க­னவே தியேட்­டரை வெற்­றி­க­ர­மாக நடத்தி வந்­த­னர். திரைப்­பட விநி­யோ­கத்­தி­லும் ஈடு­பட்­டி­ருந்­த­னர். வருங்­கா­லத்­தில் சிறப்­பாக செயல்­ப­ட­வேண்­டு­மா­னால் இன்­றைய செயல்­பா­டு­களை மாற்­றி­ய­மைக்­க­வேண்­டிய அவ­சி­யம் இருப்­பதை உணர்ந்­தேன். என் மீது நம்­பிக்கை இருந்­தால் வணிக பொறுப்­பு­களை என்­னி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு துணிந்து என் அப்­பா­வி­டம் கேட்­டேன்.Trending Now: