கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 22–08–19

22-08-2019 04:32 PM

‘ஐ ஆம்’ வாக்கியங்கள் இணையும்போது...!

'ஐ' (I) வரும் போது அடுத்த சொல்­லாக ஆம் (am) வரும் என்று உங்­கள் மன­தில் பதிந்­தி­ருக்­கும்.

'ஐ ஆம் ஸ்டடி­யிங் நவ்…' I am studying now..,நான் இப்­போது படித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன்.

'ஐ ஆம் tடால்'  (நான் உய­ர­மாக இருக்­கி­றேன் அல்­லது நான் நெட்­டை­யாக இருக்­கி­றேன்), I am tall.

'ஐ ஆம் ஹேpப்பி'. I am happy. நான் சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றேன்.

'ஐ ஆம் அன்­ஹேப்பி'. I am unhappy. நான் மகிழ்ச்­சி­யற்று இருக்­கி­றேன்.

'ஐ ஆம் இன் குஜ­ராத்'. I am in Gujarat. நான் குஜ­ராத்­தில் இருக்­கி­றேன்.

'ஐ ஆம் நாட் அ டீசர்'. I am not a teacher. நான் ஒரு டீசர் இல்லை.

'ஐ ஆம் வில்­லிங் டு ஹெல்ப்'. I am willing to help நான் உத­வு­வ­தற்­குத் சித்­த­மாக இருக்­கி­றேன். உதவ நான் தயா­ராக இருக்­கி­றேன் என்று பொருள்.

'ஐ ஆம் டையிங் ஃபார் அ கிளாஸ் ஆஃப் வாடர்'. I am dying for a glass of water. ஒரு கிளாஸ் தண்­ணீ­ருக்­காக நான் செத்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன்….இந்த வாக்­கி­யத்­தில் 'dடையிங்' என்­பது மிகைப்­ப­டுத்­திக்­கூ­றும் வகை­யில் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. ஏங்­கிக் கொண்­டி­ருக்­கி­றேன்…­­மி­க­வும் தாக­மாக இருக்­கி­றது என்­ப­தைத் தெரிக்­கவே 'dடையிங்' என்ற சொல் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

'ஐ ஆம் dடையிங் டு ஸீ த ஃபிலிம்…' I am dying to see the film. அந்­தப் படத்­தைப் பார்க்க நான் மிக­வும் ஆவ­லாக இருக்­கி­றேன் என்று  பொருள்.

'ஐ ஆம் ஃபிரீ ஆன் ஸன்­டேஸ்'. I am free on Sundays. ஞாயிற்­றுக் கிழ­மை­க­ளில் எனக்கு அவ­கா­சம் இருக்­கி­றது, அதா­வது நேரம் இருக்­கும் என்று பொருள்.

'ஐ ஆம் நெவர் ஃபீரி ஆன் சன்­டேஸ்' என்­றால் 'ஞாயிற்­றுக் கிழ­மை­க­ளில் எனக்கு அவ­கா­சம் இருக்­கவே இருக்­காது' என்று பொருள்.

இந்த 'ஐ ஆம்' (I am) வேறொரு விதத்­தில் பயன்­ப­டக்­கூ­டிய வாக்­கி­யத்­தைப் பாருங்­கள்.

'ஐ கேன்­னாட் டெல் யூ ஹவ் ஹேப்பி ஐ ஆம்'…I cannot tell you how happy I am.. 'நான் எவ்­வ­ளவு சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றேன் என்று உன்­னி­டம் கூற முடி­யாது'..அதா­வது, 'நான் மிக­வும் சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றேன்..நான் எவ்­வ­ளவு சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றேன் என்று உன்­னி­டம் வார்த்­தை­க­ளில் கூற முடி­யாது..அந்த அள­வுக்கு சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றேன்' என்று பொருள்.

இதே போல் வாக்­கி­யத்­தில் முடி­வும் 'ஐ ஆம்' (I am) வரும் சில வாக்­கி­யங்­க­ளைப் பாருங்­கள்.

'யூ ஆர் டால்­லர் dதென் ஐ ஆம்'. You are taller than I am. நீ என்னை விட உய­ர­மாக இருக்­கி­றாய்.

'ஹீ இஸ் ஸ்டிராங்g­­கர் dதென் ஐ ஆம்'. He is stronger than I am. அவன் என்னை விட பல­சா­லி­யாக இருக்­கி­றான்.

'ஷீ இஸ் டூ இயர்ஸ் ஓல்­டர் dதென் ஐ ஆம்'. She is two years older than I am. அவள் என்னை விட இரண்டு வயது மூத்­த­வள்.

'ஐ ஆம் ஸாரி'. I am sorry. நான் வருத்­தப்­ப­டு­கி­றேன் என்­ப­தைக் கூறும் வாக்­கி­யம். இதை எப்­ப­டி­யெல்­லாம் பயன்­ப­டுத்­த­லாம் என்பதற்கு ஒரு தனிப் பாடம் தேவை.

ஆனால் மிக­வும் அடிப்­ப­டை­யான அர்த்­தத்­தில் வருத்­தத்­தைத் தெரி­விக்­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

தெரி­யா­மல் ஒரு­வர் காலை மிதித்­து­விட்­டோம். 'ஐ ஆம் ஸோ ஸாரி'.

தெரி­யா­மல் நமது கை ஒரு­வர் கண்­ணில் பட்­டு­விட்­டது. 'ஐ ஆம் ஸோ ஸாரி'.

ஒரு வேலையை முடிப்­ப­தற்­கான காலக்­கெ­டுவை மீறி­விட்­டோம்.. 'ஐ ஆம் ஸாரி ஐ குட்d நாட் கம்ப்­ளீட் த வர்க்  யெஸ்­டர்டே. ஐ வில் கம்ப்­ளீட் இட் டுடே…'I am sorry I could not complete the work yesterday. I will complete it today. 'மன்­னிக்க வேண்­டும்..என்­னால் நேற்று வேலையை முடிக்­க­மு­டி­ய­வில்லை. நான் அதை இன்று  செய்து முடிக்­கி­றேன்'.

சிலர் 'ஐ'க்கு (I) அடுத்து 'ஆம்' (am) வரும் என்ற விதி­யைக் கடைப்­பி­டித்­தா­லும் இத்­த­கைய இரண்டு வாக்­கி­யங்­கள் இணை­யும் போது இரண்­டா­வது வாக்­கி­யத்­தில் அதைப் பயன்­ப­டுத்த மறந்­து­வி­டு­கி­றார்­கள்.

இந்த வகை­யில் ஒரு­வர் கூறிய ஒரு வாக்­கி­யத்­தைப் பார்ப்­போம். பேசி­ய­வர் ஒரு நடிகை..,.அவர் கூறி­ய­தாக ஒரு பத்­தி­ரி­கை­யில் வந்த வாக்­கி­யம் இது…''நான் இப்­போது நடிக்­க­வில்லை..நான் என்­னு­டைய படிப்­பில் கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன்'' என்று கூறும் போது,

''ஐ ஆம் நாட் ஆக்­டிங் நவ் அண்ட் இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்…'' (I am not acting now and is focussing on my studies) என்று அவர் கூறி­ய­தாக பத்­த­ரி­கை­யில் வந்­தது,

வாக்­கி­யத்தை நன்­றா­கப் படித்­துப் பாருங்­கள்…­­த­வறு எங்கே இருக்­கி­றது என்று உங்­க­ளுக்­குத் தெரி­கி­றதா?

இந்த வாக்­கி­யத்­தில் இரண்டு வாக்­கி­யங்­கள் உள்­ளன.

'ஐ ஆம் நாட் ஆக்­டிங் நவ்' (I am not acting

now)  (நான் இப்­போது நடித்­துக்­கொண்­டி­ருக்­க­வில்லை, அதா­வது நான் இப்­போது நடிக்­க­வில்லை)

'ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்டdடீஸ்' (I am focussing on my studies). நான் என்­னு­டைய படிப்­பில் கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன்.

இந்த இரண்டு வாக்­கி­யங்­கள், இடை­யில் அண்ட் (and) போட்டு இணைக்­கப்­ப­டு­கின்­றன.  

'ஐ ஆம் நாட் ஆக்­டிங் நவ்' (I am not acting now)  + 'ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' (I am focussing on my studies) நான் என்­னு­டைய படிப்­பில் கவ­னம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றேன்.

ஆகவே, இரண்டு வாக்­கி­யங்­க­ளைச் சேர்த்து ஒரு வாக்­கி­ய­மாக ஆக்­கும்­போது கிடைக்­கின்ற வாக்­கி­யம் = 'ஐ ஆம் நாட் ஆக்­டிங் நவ்' அண்ட் ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்'.

இரண்­டா­வது முறை­யாக வரும் 'ஐ'யை நீக்­கி­வி­ட­லாம். முதல் 'ஐ' இரண்டு வாக்­கி­யங்­க­ளுக்­கும் சேர்ந்து வேலை செய்­கி­றது.

ஆனால். இந்த வாக்­கி­யத்­தைப் பயன்­ப­டுத்­தும் போது, இரண்­டா­வ­தாக வரும், 'ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' (I am focussing on my studies) என்­ப­தி­லும் ஆம் (am) தான் வரும் என்­பதை மறந்­து­விட்டு 'இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' என்று கூறி­விட்­டார்.

'ஹீ இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் ஹிஸ் ஸ்ட்டீஸ்' என்று வரும்.. 'ஐ இஸ்'….என்று வராது. 'ராமு இஸ் ஃபோகஸ்­ஸிங் ஆன் ஹிஸ் ஸ்ட்டீஸ்' என்று வருமே அன்றி, 'ஐ இஸ்' என்று வராது, 'ஐ ஆம்' என்­று­தான் வரும்.

ஆகவே இரண்டு 'ஆம்' (am) வாக்­கி­யங்­கள் இணை­யும் போது, 'ஐ ஆம் நாட் ஆக்­டிங் நவ்' (I am not acting now)  + 'ஐ ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' (I am focussing on my studies)  =  , 'ஐ ஆம் நாட் ஆக்­டிங் நவ் அண்ட் ஆம் ஃபோகஸ்­ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' என்று வர­வேண்­டும்.

இன்­னும் சில உதா­ர­ணங்­கள்.

'ஐ ஆம் வெல் நவ் அண்ட் ஆம் கோயிங் டு ஸ்கூல்'.

I am well now and am going to school. நான் இப்­போது நல­மாக இருக்­கி­றேன் + பள்­ளிக்கு செல்ல ஆரம்­பித்து விட்­டேன்.

ஐ ஆம் ஹேப்பி வித் த கோர்ஸ் அண்ட் ஆம் லர்­னிங் மேனி திங்ஸ். I am happy with the course and am learning many things. அந்­தக் கோர்ஸ் எனக்கு மகிழ்ச்­சி­யைத் தரு­கி­றது+ (என்­ப­தோடு) நான் பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றேன்.  

முயற்சி வெற்­றிக்கு வழி வகுக்­கும் என்­பார்­கள். முயற்­சி­தான் வெற்றி என்­கி­றேன் நான். முயன்­று­கொண்டே இருங்­கள்…­­வெற்­றியை நீங்­கள் தேட வேண்­டி­யது இல்லை. அது உங்­க­ளைத் தேடி வரும்.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in

Trending Now: