பிசினஸ் : நாட்டுக்கோழியை அரசு மானியத்துடன் வளர்க்கலாம்! – ஞானசேகர்

22-08-2019 04:29 PM

ஆடு, பிராய்­லர் கோழி, மீன் ,காடை, நண்டு என பல்­வேறு இறைச்சி வகை­கள் இருந்­தா­லும், அசைவ பிரி­யர்­கள் அதி­கம் விரும்­பு­வது நாட்­டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. நினைக்­கும் போதே நாக்­கில் எச்­சில் ஊறும்!!

பண்ணை அமைத்து இக்­கோ­ழி­களை கவ­னத்­து­டன் வளர்த்­தால், நல்ல லாபம் குவிக்­க­லாம்’ நாட்­டுக்­கோ­ழி­க­ளின் முட்டை, இறைச்­சிக்கு மக்­க­ளி­டம் மவுசு உள்­ளது. ஆனால் தேவைக்­கேற்ற உற்­பத்­தி­தான் இல்லை. குறைந்த முத­லீட்­டில் அதிக லாபம் தரக்­கூ­டிய இத்­தொ­ழிலை முறை­யாக மேற்­கொண்­டால் நிரந்­தர வரு­மா­னம் பெற முடி­யும். கிரா­மங்­க­ளில் அனை­வ­ரின் வீட்­டி­லும் 15 வரு­டங்­க­ளுக்கு முன்பு கோழி வளர்ப்­பது வழக்­கம் அப்­போது கோழி என்­றால் அது நாட்­டுக்­கோழி மட்­டுமே காலப்­போக்­கில் பிராய்­லர் கோழி வந்த பிறகு நாட்­டுக்­கோ­ழி­யின் தாக்­கம் குறைந்­தது. அதற்கு கார­ணம் வீட்­டில் கோழி வளர்ப்­ப­வர்­கள் எண்­ணிக்கை குறைந்து விட்­டது. இத­னால் பண்­ணை­க­ளில் வளர்க்­கும் கோழி­கள் மக்­கள் சாப்­பி­டு­வ­தற்கு அதி­கம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. ஆட்­டி­றைச்­சி­யின் விலை அதி­க­மாக அதி­க­மாக பிராய்­லர் கோழி­யின் விற்­பனை அதி­க­ரித்­தது.

பிராய்­லர் கோழியை விட நாட்­டுக்­கோழி தான் சிறந்­தது என்­ப­தால் கடந்த சில­வ­ரு­டங்­க­ளாக நாட்­டுக்­கோ­ழிக்கு மதிப்பு அதி­க­ரித்­தது. அது கிடைப்­பது சுல­ப­மல்ல என்­ப­தால் ஆட்­டி­றைச்­சிக்கு ஈடான விலை­யில் தற்­போது நாட்­டுக்­கோழி விற்­பனை ஆகி­றது..

பொது­வாக கிரா­மங்­க­ளில் வீடு­க­ளில் நாட்­டுக்­கோழி வளர்ப்­பது வழக்­கம். விற்­ப­தற்­காக வளர்க்­கா­மல், தங்­கள் தேவைக்கு பயன்­ப­டுத்­து­வார்­கள். இதையே தொழி­லாக செய்­தால் நல்ல லாபம் பார்க்­க­லாம். கிரா­மப்­புற விவ­சா­யி­கள் விவ­சாய நிலம் மற்­றும் வீட்டை ஒட்­டியே ஷெட் அமைத்து பண்ணை முறை­யில் நாட்­டுக்­கோழி வளர்க்­க­லாம். தின­சரி காலை இரண்டு மணி நேரம், மாலை மூன்று மணி நேரம் பரா­ம­ரிப்­புக்கு செல­விட்­டால் போதும். நாட்­டுக்­கோழி குஞ்­சு­களை பொரிப்­ப­கங்­க­ளில் இருந்து வாங்கி வந்து வளர்க்­க­லாம்.

முட்­டை­யாக வாங்கி, கரு­வி­கள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்­சு­களை உற்­பத்தி செய்­ய­லாம். முட்­டை­களை அடை­காக்க இன்­கு­பேட்­டர் மெஷின் (ரூ.2 லட்­சம்), அடை காத்த முட்­டை­களை பொரிக்க வைக்க கேட்­சர் மெஷின் (ரூ.75 ஆயி­ரம்) தேவைப்­ப­டும். புதி­தாக தொழில் துவங்­கு­ப­வர்­கள் குறைந்த முத­லீட்­டில் குஞ்­சு­க­ளா­கவே வாங்கி வளர்ப்­பது எளி­தா­னது.

பரா­ம­ரிப்பு முறை­கள்

பண்ணை வைக்­கும் இடத்­தில் வெளி­யி­லி­ருந்து வரும் மற்ற பற­வை­களை அண்ட விடக்­கூ­டாது. அந்­நிய பற­வை­கள் மூலம்­தான் கோழி­க­ளுக்கு பறவை காய்ச்­சல் தாக்­கும் அபா­யம் உள்­ளது. பண்­ணைக்­குள் மரம் வளர்க்­கக் கூடாது. செடி, கொடி­கள் இல்­லா­மல் இருப்­பது கோழி­க­ளுக்கு நல்­லது. பண்­ணை­க­ளுக்கு அரு­கில் அதிக சத்­தம் வரும் வெடி­களை வெடிக்­கா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும். கோழிப்­பண்­ணை­யில் எப்­போ­தும் பாடல்­களை ஒலிக்­கும்­படி செய்­தால், மற்ற சத்­தங்­கள் கோழி­களை பாதிக்­காது.

முதல் 48 நாட்­க­ளுக்கு புர­த­சத்து அதி­க­முள்ள தீவ­னங்­களை மட்­டுமே குஞ்­சு­க­ளுக்கு தர வேண்­டும். 48 நாட்­க­ளுக்கு பிறகு தீவ­னத்­து­டன் கீரை மற்­றும் கரை­யான்­களை கலந்து கொடுக்­க­லாம். எடை அதி­க­ரிக்க குஞ்­சு­க­ளின் வளர்ச்­சிக்கு ஏற்­ற­படி பனங்­க­ருப்­பட்­டியை தண்­ணீ­ரில் கலந்து கொடுக்­க­லாம். கேரட், பெரி­ய­வெங்­கா­யம் போன்­ற­வற்றை பொடி­யாக நறுக்கி தீவ­னத்­து­டன் கொடுக்­க­லாம். 45 நாட்­க­ளுக்கு மேல் கடைசி வரை ஏதா­வது ஒரு கீரை வகையை பொடி­யாக நறுக்கி மதி­யத்­துக்கு மேல் கோழி­க­ளுக்கு கொடுக்­க­லாம். இத­னால் தீவ­னச்­செ­லவு குறை­யும். கறி­யின் ருசி­யும் அதி­க­ரிக்­கும்.

வளர்ப்­பது எப்­படி?

அதி­கம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறை­யில், 30 அடி நீளம், இரண்டு அடி உய­ரம் உள்ள கெட்­டி­யான தக­டால் வட்ட வடி­வில் வளை­யம் அமைக்க வேண்­டும். குஞ்­சு­கள் இரவு நேரங்­க­ளில் குளிரை தாங்­கு­வ­தற்­காக, வளை­யத்­துக்­குள் ஒரு அடி உய­ரத்­தில் 100 வாட் பல்­பு­கள் நான்கு பொருத்த வேண்­டும். வெயில் காலங்­க­ளில் 300 குஞ்­சு­க­ளுக்கு 100 வாட் பல்பு மூன்­றும், குளிர்­கா­லத்­தில் நான்­கும் பொருத்­தி­னால் தேவை­யான அளவு வெப்­பம் இருக்­கும். வட்­டத்­துக்­குள் இரண்டு இஞ்ச் உய­ரத்­துக்கு நிலக்­க­ட­லை­தோல் போட்டு சீராக பரப்பி, அதன்­மேல் பேப்­பர் விரிக்க வேண்­டும். அத­னுள் தீவ­னத்­தொட்டி மற்­றும் தண்­ணீர் தொட்டி வைக்க வேண்­டும். அதற்­குள் 300 குஞ்­சு­களை வளர்க்­க­லாம். தின­சரி பேப்­பரை மாற்ற வேண்­டி­யது அவ­சி­யம்.  அறை­யில் 20 நாட்­கள் வளர்த்த பின்­னர், நல்ல காற்­றோட்­டம் உள்ள பண்­ணைக்கு மாற்ற வேண்­டும். அங்கு தரை­யில் நிலக்­க­ட­லை­தோல் அல்­லது தேங்­காய் நார்க்­க­ழிவு அல்­லது மரத்­தூள் சுமார் ஒன்­றரை முதல் 2 இஞ்ச் அள­வுக்கு பரப்பி கொள்ள வேண்­டும். இவை கெட்­டி­யாகி விடா­மல் இருக்க அடிக்­கடி கிளறி விட வேண்­டும். கோழி­கள் ஒன்­றுக்­கொன்று சண்­டை­யிட்டு கொத்­து­வதை தவிர்ப்­ப­தற்­காக, 20 முதல் 30 நாட்­க­ளுக்­குள்­ளாக குஞ்­சு­க­ளின் மூக்கு நுனியை வெட்ட வேண்­டும். இங்கு 60 நாட்­கள் வளர்க்க வேண்­டும். மொத்­த­மாக 80 நாட்­கள் பூர்த்­தி­யா­ன­தும், சேவல்­களை உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு அனுப்­ப­லாம். கோழி­களை கூடு­த­லாக 10 முதல் 20 நாட்­கள் வரை வளர்த்த பின்­னர் விற்­ப­னைக்கு அனுப்ப வேண்­டும். அதற்கு மேல் வளர்த்­தால் தீவ­னச் செலவு அதி­க­மா­கும்.

குஞ்சு பொரிப்பு பண்­ணை­யில் வளர்க்­கப்­ப­டும் தாய்க்­கோழி இடும் முதல் இரண்டு முட்­டை­கள் குஞ்சு வளர்ப்­புக்கு தகு­தி­யற்­றது. இதர முட்­டை­க­ளில் எடை குறைவு, ஒழுங்­கற்ற அமைப்­புள்ள முட்­டை­களை தவிர்க்க வேண்­டும். மற்ற முட்­டை­களை இன்­கு­பேட்­டர் மெஷி­னில் 19 நாட்­கள் 100 டிகிரி சென்­டி­கி­ரேடு வெப்­பம், 90 டிகிரி சென்­டி­கி­ரேடு ஈரப்­ப­தம் உள்­ள­வாறு வைக்க வேண்­டும். ஒரே நேரத்­தில் 15 ஆயி­ரம் முட்­டை­களை வைக்­க­லாம். பின்­னர் கேட்­சர் மெஷி­னில் மூன்று நாள் வைத்­தால் முட்­டை­கள் பொரிந்து குஞ்­சு­கள் வெளி­வ­ரும்.

கட்­ட­மைப்பு

ஆயி­ரம் கோழி வளர்க்க ஆயி­ரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயி­ரம், தீவன பக்­கெட் மற்­றும் தண்­ணீர் பக்­கெட் 10க்கு ரூ. ஆயி­ரம். இன்­கு­பேட்­டர் மற்­றும் கேட்­சர் மெஷின் ஐத­ரா­பாத்­தி­லும், பண்ணை மற்­றும் தீவ­னப்­பொ­ருள்­கள் கோவை, ஈரோடு, திருப்­பூர், கரூர், நாமக்­கல் மாவட்­டங்­க­ளி­லும் வாங்­க­லாம்.

 முத­லீடு

ஆயி­ரம் கோழி குஞ்­சு­கள் ரூ.28 ஆயி­ரம், 3.5 டன் தீவ­னம் ரூ.66,500, பரா­ம­ரிப்பு கூலி ரூ.15 ஆயி­ரம், மின்­கட்­ட­ணம் ரூ.12 ஆயி­ரம் என மூன்று மாதத்­துக்கு ஒரு முறை மொத்த செல­வாக ரூ.1.22 லட்­சம் ஆகி­றது. கோழிப்­பண்ணை அமைக்க வங்­கி­க­ளில் கட­னு­தவி பெற­லாம். வரு­மா­னம் ஆயி­ரம் கோழி­கள் வளர்த்­தால் 30 கோழி­கள் வரை இறக்க வாய்ப்பு உள்­ளது. 970 கோழி­கள் நல்­ல­மு­றை­யில் வள­ரும். 80 நாள் வளர்த்­த­பின் விற்­ப­னைக்கு தயா­ரா­கும். அப்­போது ஒரு கோழி­யின் சரா­சரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடை­யுள்ள கோழி­களை விற்­க­லாம். ஒரு கிலோ சரா­ச­ரி­யாக ரூ.125க்கு குறை­யா­மல் விற்­கப்­ப­டு­கி­றது. இதன் மூலம் ரூ.1.7 லட்­சம் வரு­மா­னம் கிடைக்­கும். இதில் லாபம் ரூ.48 ஆயி­ரம். சரா­ச­ரி­யாக மாத லாபம் ரூ.16 ஆயி­ரம்.

சந்தை வாய்ப்பு: இறைச்சி விற்­ப­னை­யா­ளர்­கள் நேர­டி­யா­கவே பண்­ணைக்கு வந்து வாங்கி செல்­வார்­கள். அக்­கம்­பக்­கத்­தி­னர் வீட்­டுத்­தே­வைக்­கும், விழாக்­கள், விசே­ஷங்­க­ளுக்கு மொத்­த­மா­க­வும் வாங்­கு­வார்­கள். ஓட்­டல்­கள், உணவு விடு­தி­க­ளுக்­கும் நேர­டி­யாக ஆர்­டர் எடுத்து சப்ளை செய்­ய­லாம்.

கோழி வளர்க்­கும் திட்­டம்

கோழி பண்ணை வளர்ப்­பில் முன்­னோ­டி­யாக விளங்­கும் நாமக்­கல், ஈரோடு, திருப்­பூர் மற்­றும் கோவை மாவட்­டங்­கள் போல பிற மாவட்­டங்­க­ளி­லும் கோழி வளர்ப்­பினை ஊக்கு விக்­கும் பொருட்டு தமி­ழக அரசு செயல்­பட்டு வரு­கி­றது.

கறிக்­கோழி மற்­றும் நாட்­டுக்­கோழி வளர்ப்­பிற்கு தமி­ழக அரசு சார்­பில் 25 சத­வீத மானி­ய­மும், நபார்டு வங்கி மூலம் கோழிக்­கான முத­லீட்டு நிதி­யில் இருந்து 25 சத­வீத மானி­ய­மும் ஆக மொத்­தம் 50 சத­வி­கி­தம் மானி­யம் வழங்­கப்­பட உள்­ளது. மீத­முள்ள 50 சத­வீ­தத்தை பய­னா­ளி­கள் தங்­கள் சொந்த செல­விலோ அல்­லது வங்­கி­யி­லி­ருந்து கட­னா­கவோ பெற்­றுக் கொள்­ள­லாம்.

போதிய நிலம்

மேலும் விவ­சா­யி­கள், தனி­ந­பர், தொழில்­மு­னை­வோர், சுய உத­விக்­கு­ழுக்­கள் ஆகி­யோர் தேர்வு செய்­யப்­பட தகு­தி­யா­னர்­கள் இவர்­க­ளி­டம் கோழிப்­பண்ணை அமைக்க போதிய நிலம் தங்­கள் பெய­ரிலோ அல்­லது குடும்ப உறுப்­பி­னர் பெய­ரிலோ இருத்­தல் வேண்­டும். கோழி வளர்ப்­பில் முன் அனு­ப­வம் உள்­ள­வர்­க­ளும், ஏற்­க­னவே கொட்­டகை அமைத்த பய­னா­ளி­கள் புதிய கொட்­டகை அமைத்து பண்­ணையை விரி­வாக்­கம் செய்ய ஆர்வ முள்­ள­வர்­க­ளும் இத் திட்­டத்­தின் மூலம் பயன் பெற­லாம்.

மூன்று நாள் பயிற்சி

தேர்வு செய்­யப்­ப­டும் பய­னா­ளி­க­ளுக்கு தமிழ்­நாடு கால்­நடை மருத்­துவ அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழக பயிற்சி மையத்­தின் மூலம் 5 நாட்­க­ளுக்கு கோழி வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளிக்­கப்­ப­டும். மேலும் மாவட்ட கலெக்­ட­ரின் ஒப்­பு­த­லு­டன் கறிக்­கோழி வளர்ப்­பிற்­கும் பய­னா­ளி­கள் தேர்வு செய்­யப்­பட உள்­ள­னர். தகு­தி­யும், ஆர்­வ­மும் உள்­ள­வர்­கள் அந்­தந்த பகு­தி­க­ளில் உள்ள வங்­கி­க­ளில் கடன் வழங்­கு­வ­தற்­கான ஒப்­பு­தல் கடி­தம் வங்கி மேலா­ள­ரி­ட­மி­ருந்து பெற்று, அப்­ப­குதி கால்­நடை மருந்­தக கால்­நடை உதவி மருத்­து­வ­ரி­டம் சமர்ப் பித்து பயன்­பெ­ற­லாம். மேலும் அப்­ப­குதி கால்­நடை மருந்­தக கால்­நடை உதவி மருத்­து­வ­ரி­டம் சமர்ப்­பித்து பயன்­பெ­ற­லாம். முத­லில் வரு­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை என்ற அடிப்­ப­டை­யில் பய­னா­ளி­கள் தேர்வு செய்­யப்­பட உள்­ள­னர்.

Trending Now: