சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 406 – எஸ்.கணேஷ்

21-08-2019 01:32 PM

நடி­கர்­கள்  :  ஆர்யா, நயன்­தாரா, ஜெய், நஸ்­ரியா, சத்­ய­ராஜ், சந்­தா­னம், சத்­யன், ராஜேந்­தி­ரன் மற்­றும் பலர்.

இசை : ஜி.வி.பிர­காஷ் குமார், ஒளிப்­ப­திவு : ஜார்ஜ் சி.வில்­லி­யம்ஸ், எடிட்­டிங் :    ரூபென், தயா­ரிப்பு : பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடி­யோஸ் (ஏ.ஆர்.முரு­க­தாஸ்), திரைக்­கதை,  இயக்­கம் : அட்லி.

தேவா­ல­யத்­தில் நடை­பெ­றும் ஜான் (ஆர்யா), ரெஜி­னா­வின் (நயன்­தாரா) திரு­ம­ணத்­தோடு படம் தொடங்­கு­கி­றது. மண­மக்­கள் இரு­வ­ரும் பெற்­றோ­ரின் விருப்­பத்­திற்­காக மட்­டுமே திரு­ம­ணம் செய்­கின்­ற­னர். பின்­னர் ஒரு அபார்ட்­மெண்ட்­டில் அறி­மு­க­மற்ற நபர்­க­ளாக தங்­கள் வாழ்வை தொடங்­கு­கின்­ற­னர். தின­மும் குடித்­து­விட்டு நள்­ளி­ர­வில் வீடு திரும்­பும் ஜானின் நட­வ­டிக்­கை­யால் மற்ற குடி­யி­ருப்­பு­வா­சி­கள் சண்டை போடு­கின்­ற­னர். ஜானி­ட­மி­ருந்து பிரிய எண்­ணும் ரெஜினா ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு பணி­மாற்­றம் கேட்­கி­றாள். எல்லை மீறும் ஜானின் தொல்­லை­யால் ரெஜி­னா­விற்கு வலிப்பு ஏற்­பட்டு மயங்­கு­கி­றாள். மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டும் மனை­வி­யைப் பற்றி ஜானுக்கு எந்த விவ­ர­மும் தெரி­ய­வில்லை. சில நாட்­க­ளுக்­குப் பிறகு நலம் விசா­ரிக்­கும் ஜானி­டம், இதே பாதிப்பு முன்­னர் ஏற்­பட்­டது பற்­றி­யும், தனது கடந்த காலத்­தைப் பற்­றி­யும் ரெஜினா விவ­ரிக்­கி­றாள்.

கால் செண்­டர் ஒன்­றில் பணி­பு­ரி­யும் சூர்­யா­வுக்­கும்(ஜெய்), கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருக்­கும் ரெஜி­னா­விற்­கும் தவ­றான போன் அழைப்­பின் மூலம் சண்டை வரு­கி­றது. பின்­னர் இரு­வ­ரும் ஒரு­வரையொரு­வர் நேசிக்க, சூர்­யா­வின் தந்தை ஏற்­றுக்­கொள்ள மறுக்­கி­றார். பெற்­றோ­ருக்கு தெரி­யா­மல் திரு­ம­ணம் செய்­வ­தற்­காக ரிஜிஸ்­டர் ஆபீசில் ரெஜினா காத்­தி­ருக்க இர­வு­ வரை சூர்யா வர­வில்லை. ஏர்­போர்ட் கேபின் வேலைக்­கான டிரெயி­னிங்­கிற்­காக சூர்யா அமெ­ரிக்­கா­விற்கு சென்­று­விட்­டது தெரி­ய­வர ரெஜினா கலங்­கு­கி­றாள்.

மகளை தேற்­றும் தந்­தைக்கு நெஞ்­சு­வலி வந்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார். சில நாட்­க­ளுக்­குப்­பி­றகு சூர்­யா­வின் நண்ப­னான ஐயப்­பன் (சத்­யன்) அமெ­ரிக்­கா­வில் சூர்யா தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக சொல்ல போனில் கேட்­கும் ரெஜி­னா­விற்கு வலிப்பு ஏற்­ப­டு­கி­றது. குண­ம­டைந்த பின்­னர் தனக்­காக வருந்­தும் தந்­தை­யின் உடல்­நி­லையை கருத்­தில் கொண்டு ரெஜினா திரு­ம­ணத்­திற்கு சம்­ம­திக்­கி­றாள்.

ரெஜி­னா­வின் கதையை கேட்டு உரு­கும் ஜானுக்கு அவள் மேல் மரி­யா­தை­யும், அன்­பும் ஏற்­ப­டு­கின்றன. ஜானை உதா­சீ­னப்­ப­டுத்­தும் ரெஜி­னா­வி­டம் ஜானின் முன்­க­தையை கூறு­கி­றான் நண்ப­னான சாரதி (சந்­தா­னம்). நன்­பர்­க­ளோடு சேட்­டை­கள் செய்து வாழும் ஜானுக்கு அனா­தை­யான கீர்த்­த­னா­வின் (நஸ்­ரியா) மேல் காதல் வரு­கி­றது. சில ஊடல்­க­ளுக்­குப் பிறகு இரு­வ­ரும் கோயிலில் திரு­ம­ணம் செய்­கி­றார்­கள்.

அன்­றைய நாளே சாலை­யைக் கடக்­கும் கீர்த்­தனா விபத்­தில் ஜானின் கண்­முன்னே இறக்­கி­றாள். கீர்த்­த­னா­வின் பிரி­வைத் தாங்க முடி­யா­மல் தவிக்­கும் ஜான், சில வரு­டங்­க­ளுக்­குப் பிறகு பெற்­றோ­ருக்­காக ரெஜி­னாவை மண­மு­டிக்­கி­றான். ரெஜி­னா­விற்­கும் ஜான் மேல் பரிவு ஏற்­ப­டு­கி­றது.    

இரு­வ­ரும் ஒரு­வரை விரும்­பத்­தொ­டங்­கிய பின்­ன­ரும் வெளிப்­ப­டுத்­தா­மல் தயங்­கு­கி­றார்­கள். ஜானின் பிறந்த நாளன்று அனை­வ­ருக்­கும் முன்­பாக சர்­பி­ரை­ஸாக ரெஜினா பரிசு தரு­கி­றாள். தந்தை முன் நடிப்­ப­தாக நினைத்து அப்­ப­ரிசை ஜான் பிரிக்­க­வில்லை. ரெஜி­னா­விற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு  பணி­மாற்­றம் கிடைத்­ததை அறி­யும் ஜான், பிய­ரோடு காதலை சொல்­ல­வ­ரும் ரெஜி­னாவை உண்மை புரி­யா­மல் வாழ்த்­து­கி­றான்.

ஏர்­போர்ட்­டில் இறக்­கி­வி­டும் ரெஜி­னா­வின் அழைப்பை பார்த்து ஜான் விரை­கி­றான். அங்கு கவுண்­ட­ரில் சூர்­யா­வைப் பார்த்­த­தாக கூறும் ரெஜி­னா­விற்­காக சூர்­யா­வி­டம் விரை­கி­றான். தனது தந்­தையை மீற முடி­யா­மல் அமெ­ரிக்கா வந்­த­தா­க­வும் தனக்­காக ரெஜினா காத்­தி­ருக்கக் கூடாது என்­ப­தற்­காக தற்­கொலை நாட­க­மா­டி­ய­தா­க­வும் சூர்யா கூற ரெஜி­னாவை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு ஜான் வற்­பு­றுத்­து­கி­றான்.

தனக்கு மண­மா­கி­விட்­ட­தா­க­வும் காத­லியை மணக்க முடி­யா­விட்­டா­லும் மனை­வியை காத­லிக்­க­மு­டி­யும் என்­று­கூறி விடை­பெ­று­கி­றான். சூர்­யா­வின் கையி­லி­ருக்­கும் ரெஜி­னா­வின் மோதி­ரம் அவ­னும் காதலை மறக்­க­வில்லை என்று உணர்த்­து­கி­றது.

கோபத்­து­டன் ஜானை அறை­யும் ரெஜினா எப்­போ­தும் தான் சொல்­வதை கேட்­கா­மல் முடி­வெ­டுப்­ப­தாக ஜானை திட்­டு­கி­றாள். முன்பு திறக்­காத பிறந்­த­நாள் பரிசை பார்க்­கும் ஜானுக்கு ரெஜி­னா­வின் அன்பு புரி­கி­றது. இரு­வ­ரும் கண­வன் – மனை­வி­யாக தங்­கள் இனிய வாழ்க்­கையை தொடங்­கு­கி­றார்­கள்.Trending Now: