பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் உறுதி

18-08-2019 05:02 PM

கல்கா (ஹரியாணா),            

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும், அப்படியே பேசினாலும்கூட அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் தொடர்பாக மட்டுமே இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

மாநில சட்டமன்றத் தேர்தல் நடப்பு 2019ம் ஆண்டில் நடை பெற் உள்ள ஹரியானா மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பேரணி ஒன்றைத் துவக்கி வைத்து  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் பேசினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு விவரம்:

காஷ்மீருக்குஅரசியல சட்ட விதி 370 வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் காஷ்மீரில் கடந்த வாரம் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சீனா இரண்டு நாடுகளும் சேர்த்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றது.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதுகுறித்து ரகசியமாக விவாதிக்கப்பட்டது. எனினும், அதில் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

”இனிமேல் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பும் இராது. அப்படியே, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தாலும், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும்தான் இருக்கும்.

நாங்கள் பாலக்கோட்டில் நடத்திய தாக்குதலைவிட பெரிய தாக்குதலுக்கு திட்டமிடுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரே இப்படி பேட்டியளித்து இருக்கிறார். அப்படி என்றால் அவர்களே பாலக்கோடு தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல் என்பதை ஒப்புக்கொண்டார்கள் என்று அர்த்தம்.

காஷ்மீரின் வளர்ச்சிக்காக அதன் சிறப்பு அதிகாரத்தை நீக்கி இருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் இதை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இனியும் நாங்கள் காஷ்மீர் விஷயம் குறித்து பாகிஸ்தானுடம் பேச போவதில்லை. அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் காஷ்மீர் பகுதி பற்றிய வேண்டுமானால் பேசலாம்

காஷ்மீருக்கு எதிராக எப்போதும் தவறான முடிவுகளை எடுப்பதே பாகிஸ்தானின் வேலையாக இருக்கிறது. முதலில் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை மீறியது. அதன்பின் தீவிரவாதிகளை அனுப்பியது. இப்போது ஐநாவிற்கு சென்று இந்தியாவிற்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று பார்க்கிறது” என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்க பயங்கரவாதிகள் மூலமாக பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால் வலுவான மோடி அரசின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக் அம்முயற்சிகள் தோற்றுப் போயவிட்டன.

இப்பொழுது பாகிஸ்தான் ஒவ்வொரு நாடாகச் சென்று இந்தியாவைப் பற்றி புகார் செய்ய துவங்கி உள்ளது. பாகிஸ்தான் என்ன தவறு செய்தது? ஏன் இந்தியா எங்களை மிரட்டுகிறது என புலம்பி வருகிறது. அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் போய் புகார் செய்தது. ஆனால் அமெரிக்கா பாகிஸ்தானை இந்தியாவிடம் போய்ப் பேசு என்று திரும்ப விரட்டியுள்ளது. இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.Trending Now: